சௌந்தரபாண்டியின் திடீர் முடிவு..அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில், சூடாமணி யார் என்று கேட்டு ரத்னா திட்டுக்கொண்டு இருக்க, ஷண்முகம் ரத்னாவை அமைதியாக இருக்க சொல்லியும் அவள் கேட்காமல் சூடாமணியிடம் கோவப்படுகிறாள். ஷண்முகம் அவளை அடிக்க கை ஓங்குகிறான். இதுவரைக்கும் எங்க அண்ணன் எங்களை அடிச்சது கிடையாது, ஆனால் இப்போ என் அண்ணனே என்னை அடிக்க கை ஓங்கிருச்சி என்கிறாள்.

அதன் பிறகு தங்கைகளை சமாதானப்படுத்தி இனிமேல் சூடாமணியை யாரும் கேள்வி கேட்கக்கூடாது, அவங்க இங்கதான் இருப்பாங்க என்று சொல்லி தங்கைகள் அனைவர் இடத்திலும் சத்தியம் வாங்குகிறான். அதை பார்த்த சூடாமணி நீ ஒரு அண்ணன் மட்டுமில்ல அம்மாவாகவும் இருக்க என்று சந்தோசப்படுகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Zee tamil Anna

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், இசக்கி முத்துப்பாண்டி எடுத்து கொடுத்த புடவையை கட்டி வந்து நல்லா இருக்கா என்று கேட்க முத்துபாண்டியும் நன்றாக இருப்பதாக சொல்கிறான். அதே போல் மறுபக்கம் சூடாமணி வைகுண்டம் எடுத்து கொடுத்து புடவையை கட்டி வர அதை பார்த்து வைகுண்டம் சந்தோசப்படுகிறார். சூடாமணி முதல் ஆளாக கோவிலுக்கு ரெடியாகி இருப்பதை பார்த்து தங்கைகள் அண்ணன் கோவிலுக்கு கூப்பிட்டா போக கூடாது என்று முடிவெடுக்கின்றனர், பரணி இதை பார்த்து விடுகிறாள். இங்கே சௌந்தராண்டி நானும் உங்களோட கோவிலுக்கு வரேன் என்று சொல்கிறார்.

கோவிலுக்கு வரும் தங்கைகள்: அடுத்து சூடாமணி தங்கச்சிகளையும் கோவிலுக்கு கூப்பிடு என்று சொல்ல ஷண்முகம் வேண்டாம் என்று சொல்ல பரணி நீ போய் கூப்பிடு என்று சொல்கிறாள். ஷண்முகம் புரியாமல் பேசாத என்று சொல்ல நீ கூப்பிட்டாலும் அவங்க வர மாட்டாங்க என்று சொல்கிறாள். பிறகு ஷண்முகம் கூப்பிட, அவர்கள் வரவில்லை என்று சொல்லி விடுகின்றனர்.

பிறகு ஷண்முகம், சூடாமணி, பரணி, வைகுண்டம் ஆகியோர் கோவிலுககு கிளம்ப இசக்கி போன் செய்து சௌந்தரபாண்டி மாமாவும் வராரு என்று சொல்ல ஷாக்காகிறான். பின்னாடி திரும்பி பார்க்க தங்கைகளும் தயாராகி வந்து ஷாக் கொடுக்கின்றனர். அடுத்து இரண்டு குடும்பமும் கோவிலுக்கு கிளம்பி வருகின்றனர்.

கோவிலில் சண்முகம்: ஒரு பக்கம் வைகுண்டம் சூடாமணியை அழைத்து சென்று பூ வாங்கி தலையில் வைத்து விட அதே இடத்தில் இன்னொரு பக்கம் முத்துப்பாண்டி இசக்கிக்கு பூ வாங்கி கொடுக்க பாக்கியம் தலையில் வைத்து விட சொல்ல முத்துபாண்டியும் வைத்து விடுகிறான். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விடுவார்களா இல்லையா என்று பரபரப்பான காட்சிகள் நகர சௌந்தரபாண்டியும் சனியனும் கோவிலுக்குள் வர ஒருத்தரும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X