உங்க அம்மா கெட்டவ இல்ல.. கண்கலங்கிய சூடாமணி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில், நேற்றைய எபிசோடில், கோவிலில் யாருக்கும் தெரியக்கூடாது என்று சூடாமணி தலையை மறைத்தபடி இருக்க, அங்கு வரும் சௌந்தரப்பாண்டியன் அவளைப்பார்த்து அதிர்ச்சி அடைகிறான். பின் சூடாமணி பின் தொடர்ந்து வர, திடீரென சூடாமணி காணாமல் போக, சூடாமணி போல புடவை கட்டி இருந்த பெண் கையை பிடித்து இழுக்க அந்த பெண் பெரிய மனுஷனா இருக்க அசிங்கமே இல்லாமல் கையை பிடிச்சு இழுக்குற என்று திட்டுகிறாள்.

இதையடுத்து, இசக்கி விளக்கு போட வேண்டும் என்று சொல்ல சூடாமணி எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருகிறாள். அடுத்து இசக்கி விளக்கு ஏற்றியதும் அது அணைய போக சூடாமணி ஓடி வந்து விளக்கை அணையாமல் காக்கிறாள். இதன் பின் இசக்கிக்கு முடி எடுக்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடக்கிறது. இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Zee tamil Anna

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், இசக்கிக்கு பூ முடி எடுக்க சூடாமணி தூரமாக மறைந்து பார்த்து சந்தோசப்படுகிறாள். அதன் பிறகு பாக்கியம், சௌந்தரபாண்டி காலிலும் வைகுண்டம் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்க சூடாமணி வைகுண்டம் பக்கத்தில் நின்று ஆசிர்வாதம் செய்வது போல் நினைத்து கொள்கிறாள். இதை தொடர்ந்து, ஷண்முகம் குடும்பத்தினர் கிளம்பி வீட்டிற்கு வர போலீஸ் வெளியே காத்திருக்க கைதி என்ற விஷயத்தை சொல்லிடுவாங்களோ என்று சூடாமணி பதறுகிறாள். ஆனால் ஷண்முகம் ஒருவழியாக பேசி சமாளித்து விடுகிறான்.

சூடாமணியை ஏற்றுக்கொள்ளும் தங்கைகள்: அடுத்ததாக வீட்டில் அனைவரும் சாப்பிட உட்கார சூடாமணி எனக்கு வேண்டாம் என்று சொல்கிறாள், வீட்டில் யாரையும் விட்டுட்டு சாப்பிட மாட்டோம் என்று கூப்பிட, இசக்கியின் தீபம் அணையாமல் காக்க முயற்சி செய்ததால் கையில் காயமாக இருக்க நீங்க சாப்பிடுங்க என்று எழுந்து சென்று விடுகிறாள். இசக்கிக்காக காயம் ஏற்படும் அளவிற்கு உதவி செய்த சூடாமணி மீது சண்முகத்தின் தங்கைகளின் பார்வை நல்லவிதமாக மாறுகிறது.

கண்கலங்கும் சூடாமணி: அதன் பிறகு பரணி சூடாமணிக்கு சாப்பாட்டு ஊட்டு விடுகிறாள், இரவு நேரம் ஆனதும் தூங்கி கொண்டிருந்த சூடாமணி எழுந்து தண்ணீர் எடுக்க கை நீட்ட ரத்னா தண்ணீரை எடுத்து கொடுத்து குடிக்க வைக்கிறாள். பிறகு சூடாமணியிடம், எங்க அம்மா ஏன் இப்படி செய்தாங்க, அவங்களால் எங்க குடும்பத்திற்கு எவ்வளவு பிரச்சனை தெரியுமா, அம்மா இல்லாமல் நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்று யாருக்கும் தெரியாது, அண்ணன் மட்டும் இல்லனா நாங்க வளர்ந்து இருக்கவே முடியாது என்று சொல்லி அழுகின்றனர்.

அப்போது சூடாமணி, நீங்க நினைக்கிற மாதிரி உங்க அம்மா கெட்டவ இல்லை, உங்களுக்காக ஒரு பழியை சுமந்துக்கிட்டு இருக்கா, அவள் உங்களுக்கு துரோகம் செய்யவில்லை என்று கண் கலங்குகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X