பரணி செய்த தரமான சம்பம்.. முதல் ஆளாக கைதானது யார் தெரியுமா? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா, இந்த சீரியலில் பரணி தர்மகர்த்தாவாக பதவி ஏற்க செல்கிறார். அப்போது, சௌந்தரபாண்டி வரமுடியாது என்று சொல்ல, அவரை ஷண்முகம் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி விடுகிறார்.

இதையடுத்து, சௌந்தரபாண்டியனுக்கு அப்போ உடம்பு சரி இல்லை என்று சொல்ல, பதவியில் இருப்பவருக்கு உடம்பு முடியாமல் போய்விட்டால் அவருக்கு பதிலாக அவரது மனைவி கையெழுத்து போடலாம், அதான் என் அத்தை நேத்தே கையெழுத்து போட்டு கொடுத்துட்டாங்க என்று சொல்கிறான். இதையடுத்து, பாக்கியம் டாகுமெண்ட்டுடன் வர, கோவில் நிர்வாகம் அதை ஏற்றுக்கொற்கிறது. இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Zee tamil Anna television

திட்டம் போட்ட சௌந்தரபாண்டி: இதையடுத்து அண்ணா சீரியலின் இன்றைய எபிசோடில், பரணி தர்மகர்தாவாக ஆகிட்டா, அடுத்ததா நகை விஷயத்தை தான் கையில் எடுப்பா.. அதுக்குள்ள நகையை இடமாற்றி வைக்க வேண்டும் என்று திட்டம் போட்டு சௌந்தரபாண்டி, முத்துப்பாண்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து போலீஸ்களுக்கு டீ-ல் மயக்க மருந்தை கலந்து கொடுத்து நகை பெட்டியை எடுத்துச் செல்கின்றனர்.

Zee tamil Anna television

நகை சோதனை: மறுபக்கம் பதவியேற்ற பரணி கோவில் நகைகளை பரிசோதனை செய்ய அத்தனையும் கவரிங் என தெரிய வருகிறது. இதனால் நகையை சௌந்தரபாண்டி தான் எடுத்திருக்க வேண்டும் என அனைவரும் சொல்கின்றனர். சௌந்தரபாண்டி என் மேல சந்தேகப்படுகிறீர்களா? என் வீட்டுக்கு வந்து தேடிப் பாருங்க என்று சொல்கிறார். அடுத்ததாக சௌந்தரபாண்டி வீட்டில் தேடுதல் வேட்டை நடத்த பாண்டியம்மா அறையில் நகை இருப்பதை கண்டு பிடிக்கின்றனர்.

வசமாக சிக்கிய பாண்டியம்மா: உடனே சௌந்தரபாண்டி அக்கா நகையை நீயா தான் எடுத்தியா என்று பிளேட்டை மாற்றி போட்டு பாண்டியம்மா மீது பழியை போட்டு நாடகம் போடுகிறார். இதையடுத்து பாண்டியம்மா கைது செய்யப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.

More from Filmibeat

Read more about: zee tamil anna television
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X