சூடாமணிக்கு சௌந்தரபாண்டி செய்த துரோகம்.. பேயாட்டம் ஆடிய பாக்யம்.. அண்ணா சீரியல் இன்றை எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில், இசக்கிக்கு கோவிலில் பூ முடி எடுப்பதை பார்க்க யாருக்கும் தெரியக்கூடாது என்று சூடாமணி தலையை மறைத்தபடி இருக்கிறாள். ஆனால், எப்படியோ சௌந்தரபாண்டியன் அவளை பார்த்துவிடுகிறான்.
இதையடுத்து பூ முடி முடிந்து இசக்கிக்கு பூ முடி எடுக்க சூடாமணி தூரமாக மறைந்து பார்த்து சந்தோசப்படுகிறாள். அதன் பிறகு பாக்கியம், சௌந்தரபாண்டி காலிலும் வைகுண்டம் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்க சூடாமணி வைகுண்டம் பக்கத்தில் நின்று ஆசிர்வாதம் செய்வது போல் நினைத்து கொள்கிறாள். இதை தொடர்ந்து, ஷண்முகம் குடும்பத்தினர் வீட்டிற்கு வர, ஷண்முகத்தின் தங்கள், என் அம்மா ஏன் என்னை விட்டுக்கு போனாங்க என்று கேட்டு கண் கலங்குகின்றனர். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், சூடாமணி தான் ஒரு உத்தமி தான் என்பதை ஒரு பாட்டாகவே பாடுகிறார். அதை கேட்டு ஒட்டு மொத்த குடும்பமும் கண்கலங்கி அழுகின்றனர். இதைகேட்டு கண் கலங்கிக் கொண்டிருந்த ஷண்முகத்தை பார்த்து வருத்தப்படாத எல்லாம் சரியாகிவிடும், எல்லாத்துக்கும் காரணம் என் அப்பா சௌந்தரபாண்டிதான் அவருக்கு தண்டனை வாங்கி தராமல் விடக்கூடாது என்று முடிவெடுக்கின்றனர்.
அடுத்த நாள் காலையில் சூடாமணி வீட்டில் வேலைகளை பார்த்து கொண்டிருக்க அப்போது பாக்கியம் வீட்டிற்கு வர சூடாமணியை பார்த்து விடுகிறாள், மதினி நீங்களா? இவ்வளவு நாளா எங்க இருந்தீங்க என்று கேட்க சௌந்தரபாண்டி தனக்கு செய்த துரோகம், ஜெயிலில் பட்ட கஷ்டம் என மொத்தத்தையும் சொல்கிறாள். இதனால் ஆவேசமாகும் பாக்கியம் இவ்வளவு நடந்த பிறகும் அந்த ஆளை எதுக்கு விட்டு வச்சிருக்கீங்க? கொன்னு போட வேண்டியது தானே என்று சொல்ல சூடாமணி அவனை கொல்ல கூடாது, நான் பட்ட கஷ்டம் எல்லாத்தையும் அவனும் படணும். அதுக்கு தான் அவனை விட்டு வச்சிருக்கோம் என்று சொல்கிறாள்.
இதை தொடர்ந்து பாக்கியம், அதே கோவத்துடன் வீட்டிற்கு கிளம்பி வர சௌந்தரபாண்டி உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருக்க பேய் பிடித்தவள் போல வந்த பாக்கியம் டேபிளில் இருந்த பொருட்களை எல்லாம் தூக்கி வீசி போடுவதோடு சட்டினியை சௌந்தரபாண்டி மீது ஊற்றி ஏண்டா இப்படி பண்ண என்று பளார்.. பளார் என்று கண்ணத்தில் அறைந்து சாமியாடுகிறாள்.
சௌந்தரபாண்டி இவளுக்கு என்னாச்சு என்று ஒன்றும் புரியாமல் நிற்கிறார். இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் பதறிபோய் பாக்கியத்தை சமாதானப்படுத்துகின்றனர். சௌந்தரபாண்டிக்கு ஒரு வேலை சூடாமணியை பார்த்து இருப்பாளோ என்ற சந்தேகம் எழுகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











