சௌந்தரபாண்டி முகத்தில் காரி துப்பி.. தாலியை கழட்டி வீசும் பாக்யா..அண்ணா சீரியலின் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில், பாக்யம், சூடாமணி தோழி யாரோ வந்து இருப்பதாக சொல்ல, அவளை பார்த்துவிட்டு வருவதாக இசக்கியிடம் சொல்லி விட்டு வருகிறாள். வீட்டில் சூடாமணி வேலைகளை பார்த்து கொண்டிருக்க அப்போது பாக்கியம் வீட்டிற்கு வர சூடாமணியை பார்த்து விடுகிறாள்.
சூடாமணியை பார்த்து மதினி நீங்களா? இவ்வளவு நாளா எங்க இருந்தீங்க, எங்கே போனீங்க, இந்த ஊரே உன்னை பத்தி தப்பா பேசுனாலும், அண்ணனும் நானும் உன்னை உத்தமியாகத்தான் நினைச்சிட்டு இருக்கிறோம் என்று சொல்ல, கண்கலங்கும் சூடாமணி நானாக இந்த ஊரை விட்டு போகல, ஒரு துரோகி, என்னை நம்பவெச்சு கழுத்தை அறுத்து இப்படி என்னை அனுப்பி வெச்சிட்டான் என்று சொல்லி அழுகிறாள்.

யார் அந்த துரோகி என்கிட்ட சொல்லு, அவன் இந்த உலகத்துல எங்கே இருந்தாலும் இழுத்துக்கிட்டு வந்து கொல்லுகிறேன் என்று சொல்ல, சூடாமணி அவனை கொல்ல கூடாது, நான் பட்ட கஷ்டம் எல்லாத்தையும் அவனும் படணும். அதுக்கு தான் அவனை விட்டு வச்சிருக்கோம் என்று சொல்கிறாள். இதையடுத்து, இந்த குடும்பத்தை இப்படி நாசமாக்குனது வேற யாரும் இல்ல உன் புருஷன் தான் என்று சொல்ல இடிந்து போகிறாள் பாக்கியம். இதையடுத்து, இன்று நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
அண்ணா சீரியல்: இதையடுத்து, இன்றைய சீரியல், அண்ணன் குடும்பத்தை கெடுத்து இப்படி பண்ணவிட்டானே என்ற கோவத்துடன் வீட்டிற்கு கிளம்பி வர சௌந்தரபாண்டி உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறாள். பாக்கியம் தலைவிரி கோலமாக வந்ததைப்பார்த்து எங்கே போய்விட்டு வந்தே என்று கேட்டதும், பேய் பிடித்தவள் போல வந்த பாக்கியம் டேபிளில் இருந்த பொருட்களை எல்லாம் தூக்கி வீசி போடுவதோடு சட்டினியை சௌந்தரபாண்டி மீது ஊற்றி ஏண்டா இப்படி பண்ண என்று பளார்.. பளார் என்று கண்ணத்தில் அறைந்து சாமியாடுகிறாள்.
காரி துப்பிய பாக்யா: என் மருமகன் சண்முகம் உன்னை குத்த வந்தப்பவே நான், விட்டு இருக்கனும், உன்னை காப்பாத்தி பெரிய தப்பு செய்துவிட்டேன். அண்ணன் குடும்பத்தை நாசம் பண்ணது பத்தாம இன்னமும் அந்த குடும்பத்துக்கு கஷ்டம் கொடுத்துக்கிட்டே இருக்க, உனக்கு எல்லாம் நல்ல சாவே வராது, நீ சாகும் போது தண்ணி எடுத்துக்கொடுக்க ஆள் இல்லாமல் தான் சாவே என்று ஆவேசமாக கத்திய பாக்கிய சௌந்தரபாண்டியின் முகத்தில் காரி துப்பி தாலியை கழட்டி வீசிவிடுகிறாள்.
சௌந்தரபாண்டி இவளுக்கு என்னாச்சு என்று ஒன்றும் புரியாமல் நிற்கிறார். இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் பதறிபோய் பாக்கியத்தை சமாதானப்படுத்துகின்றனர். சௌந்தரபாண்டிக்கு ஒரு வேலை சூடாமணியை பார்த்து இருப்பாளோ என்ற சந்தேகம் எழுகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











