பாக்கியத்தை ரூமுக்குள் வைத்து பூட்டிய சௌந்தரபாண்டி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில், அண்ணன் குடும்பத்தை கெடுத்து இப்படி பண்ணிவிட்டானே என்ற கோபத்துடன் வீட்டிற்கு கிளம்பி வர சௌந்தரபாண்டி உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறான். பாக்கியம் தலைவிரி கோலமாக வந்ததைப்பார்த்து எங்கே போய்விட்டு வந்தே என்று கேட்டதும், பேய் பிடித்தவள் போல வந்த பாக்கியம் டேபிளில் இருந்த பொருட்களை எல்லாம் தூக்கி வீசி விட்டு, சட்டினியை சௌந்தரபாண்டி மீது ஊற்றி ஏன்டா இப்படி பண்ண என்று பளார்.. பளார் என துடப்பத்தால் அடிஅடி என வெளுத்துவிடுகிறாள்.

சௌந்தரபாண்டி இவளுக்கு என்னாச்சு என்று ஒன்றும் புரியாமல் நிற்கிறார். இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் பதறிபோய் பாக்கியத்தை சமாதானப்படுத்த ரூமுக்கு அனுப்பிவைக்கின்றனர். இதையடுத்து, இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Zee tamil Anna

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், சௌந்தரபாண்டி பாக்கியம் பேயாட்டம் ஆட என்ன காரணம் என்று யோசிக்க, சௌந்தரபாண்டி ரூம் அருகே வர முத்துப்பாண்டி இப்போ அம்மா கிட்ட போகாதீங்க என்று சொல்ல ஜன்னல் வழியாக எட்டி பார்க்கிறான் சௌந்தரபாண்டி. அப்போது, பாக்கியம் பேய் போல் நின்று கொண்டிருக்க சௌந்தரபாண்டி ஷாக் ஆகிறார். மேலும் அவ வெளியே வந்தா தானே எனக்கு பிரச்சனை என்று ரூமை சாத்தி பல பூட்டுகளை போட்டு பூட்டி விடுகிறான்.

வார்னிங் கொடுத்த பரணி: இதைத் தொடர்ந்து பரணி வீட்டிற்கு வர, பாக்கியத்தை ரூமில் வைத்து பல பூட்டு போடப்பட்டு இருப்பதை பார்த்து காரணம் கேட்க சௌந்தரபாண்டி,அவளுக்கு பேய் பிடித்துவிட்டது, நேத்து என்னை, புருஷனு கூட பார்க்காமல் அடித்துவிட்டாள் என்று சொல்கிறார். பிறகு பரணி ரூமுக்குள் சென்று இப்போ தான் எல்லாம் கை கூடி வருது, இந்த நேரத்தில் அத்தை வீட்டில் இருப்பதை நீயே காட்டி கொடுத்து விடாதே என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி வருகிறாள்.

மாறிய முத்துப்பாண்டி: அடுத்து ரத்னா வெங்கடேஷுடன் வண்டியில் வர அதை முத்துப்பாண்டி பார்த்து ஜீப்பில் பின்னாடியே பின் தொடர்ந்து வந்து ஓரிடத்தில் பைக்கை மடக்கி காரை நிறுத்துகிறான், ரத்னாவின் புடவை பைக் டயரில் மாட்டி இருக்க அதை எடுத்து விட்டு பார்த்து கூட்டிட்டு போ என்று சொல்லி விட்டு கிளம்ப இருவரும் முத்துப்பாண்டியா இப்படி நடந்து கொண்டது என வியப்புடன் பார்க்கின்றனர்.

கல்யாணம் பண்ணனும்: அதன் பிறகு ரத்னா வெங்கடேஷுடன், பைக்கில் வீட்டிற்கு வந்து இறங்க அதை பார்த்த சூடாமணி இது தான் வெங்கடேஷா என்று கேட்க அது உங்களுக்கு எதுக்கு, இது உங்களுக்கு தேவையில்லாத வேலை என்று திட்டி விட்டு உள்ளே செல்கிறாள், பிறகு சூடாமணி ரெண்டாவது பொண்ணுக்கு கல்யாணம் ஆகிருச்சு. முதல் பொண்ணு வீட்டில் இருக்கிறது சரியில்ல, சீக்கிரம் கல்யாணத்தை முடிக்கணும் என்று பேச அதை கேட்கும் ரத்னா சூடாமணியிடம் கோபப்பட்டதை நினைத்து வருத்தப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X