சௌந்தரபாண்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான அண்ணா சீரியலில் நேற்றை எபிசோடில், பாக்கியத்திற்கு பேய் பிடித்துவிட்டது என்று நினைத்து, சௌந்தர பாண்டி அவளை ரூமுக்குள் பூட்டி வைத்துவிடுகிறான். வீட்டிற்கு வரும் பரணி, பாக்கியம் ரூமில் வைத்து பல பூட்டு போடப்பட்டு இருப்பதை பார்த்து காரணம் கேட்க சௌந்தரபாண்டி, அவளுக்கு பேய் பிடித்துவிட்டது, நேத்து என்னை, புருஷனு கூட பார்க்காமல் அடித்துவிட்டாள் என்று சொல்கிறார். பிறகு பரணி ரூமுக்குள் சென்று இப்போ தான் எல்லாம் கை கூடி வருது, இந்த நேரத்தில் அத்தை வீட்டில் இருப்பதை நீயே காட்டி கொடுத்து விடாதே என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி வருகிறாள்.

இதையடுத்து, ரத்னா வெங்கடேஷுடன், பைக்கில் வீட்டிற்கு வந்து இறங்குவதை பார்த்த சூடாமணி இது தான் வெங்கடேஷா என்று கேட்க அது உங்களுக்கு எதுக்கு, இது உங்களுக்கு தேவையில்லாத வேலை என்று திட்டி விட்டு உள்ளே செல்கிறாள், பிறகு சூடாமணி ரெண்டாவது பொண்ணுக்கு கல்யாணம் ஆகிருச்சு. முதல் பொண்ணு வீட்டில் இருக்கிறது சரியில்ல, சீக்கிரம் கல்யாணத்தை முடிக்கணும் என்று பேச அதை கேட்கும் ரத்னா சூடாமணியிடம் கோபப்பட்டதை நினைத்து வருத்தப்படுகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Zee tamil Anna

அண்ணா சீரியல்: இன்றைய சீரியலில், ஜெயிலில் இருக்கும் பாண்டியம்மா, சௌந்தர பாண்டிக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லையே அவனை சூடாமணி எதாவது செய்துவிட்டாளா என்று புலம்கிறாள். இதையடுத்து, போலீசுக்கு காசு கொடுத்து போனை வாங்கி, சௌந்தரபாண்டிக்கு போன் செய்கிறாள். போனை எடுத்த சௌந்தரபாண்டி, ஜெயலில் போன் எல்லாம் கிடைக்கிதா என்று கேட்க கடுப்பான, ஏலே சௌந்தரபாண்டி இன்னும் நீ உயிரோடுத்தான் இருக்கியா என்று கேட்கிறாள்.

பதற்றத்தில் சௌந்தரபாண்டி: ஏய் அக்கா, நீ செத்தா நான் தான் உன் உடம்பை வாங்க வேண்டும், என்னைக்கும் என் தயவு உனக்கு இருக்கு என்பதை மறந்தவிடாதே என்று சொல்கிறான். இதையடுத்து, ஆமாம் டா சௌந்தரபாண்டி அதுக்குள்ள நீ ஜெயிலுக்கு வந்துவிடுவ என்று, சூடாமணி பரோலில் வந்த விஷயத்தை சொல்ல, அதிர்ச்சி அடைகிறார், அப்போ கோவிலில் பார்த்தது சூடாமணி தான், ஷண்முகம் வீட்டிற்கு போய் அதனை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கிறான்.

சமையல் செய்த சூடாமணி: மறுபக்கம் பரணி முக்கியமான வேலை விஷயமா வெளியே போய்ட்டேன். கனி மற்றும் வீராவை ரெடி பண்ணவே இல்லை என்று பேசி கொண்டிருக்க இருவரும் அழகாக தயாராகி வருகின்றனர். பரணி யார் ரெடி பண்ணது என்று கேட்க சூடாமணி தான் என்று சொல்ல அதை கேட்டு சந்தோசப்படுகிறாள். பிறகு பரணி, நான் இன்னைக்கு சமைக்கவே இல்ல என்று சொல்ல சூடாமணி எல்லாம் நான் சமைத்து விட்டேன் என்று சாப்பாட்டை கொண்டு வந்து வைக்க அனைவரும் அவளை ஆச்சரியமாக பார்க்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X