20 வருடத்திற்கு பிறகு சந்திக்கும் தீரா பகை.. சூடாமணி ஆட்டம் ஆரம்பம்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான அண்ணா சீரியலில் நேற்றை எபிசோடில், பாக்யம், சூடாமணிக்கா கறிக்குழப்பு வைத்து, சிவபாலனிடம் கொடுத்து அனுப்ப, சந்கேகப்படும் சௌந்தர பாண்டி, ஏல சிவபாலா நான் போய் பரணிக்கு சாப்பாடு கொடுக்கிறேன் என்று ஷண்முகம் வீட்டிற்கு வேவு பார்க்க கிளம்புகிறான்.
அண்ணா: இன்றைய சீரியலில், வீரா பாட்டுப்பாடிக்கொண்டு இருந்ததை பார்த்து ரத்னா, கனி திட்டுகின்றனர். அப்போது சூடாமணி ஏன் இவளை திட்டுறீங்க, அவளுக்கு பாடவேண்டும் என்று ஆசைபட்டா பாடட்டும் என்று சொல்ல, இவளுக்கு ஆசை தான் ஆனால், அண்ணனுக்கு பிடிக்கல அதான், பாடாதேனு திட்டுவதாக சொல்ல, நான் அண்ணன் கிட்ட பேசுகிறேன். உனக்கு என்ன பிடிச்சிருக்கோ அதை செய் என்கிறாள்.

அப்பாதான் கொண்டு போனார்: மறுபக்கம், சௌந்தர பாண்டி வீட்டில் சிவபாலன் சாப்பிட்டுக்கொண்டு இருக்க,என்ன சிவபாலா இது உன் மேல இருக்கிற ஆசையில் செய்த சாப்பாடு இல்ல, பரணிக்காக செய்த சாப்பாடு அதை இனி இப்படி ருசித்து சாப்பிடுறியா என்று சொல்லி வெறுப்பு ஏத்துகிறான். அப்போது அங்கு வரும் பாக்யம் அண்ணா என்ன சொன்னாரு என்று கேட்க, சாப்பாடு நான் கொண்டு போகல அப்பாத்தான் கொண்டு போனாரு என்று சொன்னதும். அதிர்ச்சி அடைந்த பாக்யம், ஏன்டா நான் உன்னைத்தானே கொண்டு போக சொன்னேன் என்று சொல்லுகிறாள். நான் தான் கொண்டு போனேன், அப்பாத்தான் நான் கொடுக்கிறேன் என்று வாங்கிக்கொண்டார் என்று சொல்கிறான்.
வேவு பார்த்த சௌந்தர பாண்டி: இதையடுத்து, வைகுண்டத்திற்கு போன் போடும் பாக்யம், சாப்டீங்களா என்று கேட்க, சாப்பிட்டோம் நீ ஏன் சாப்பாட்டை சௌந்தரபாண்டியனிடம் கொடுத்த என்று கேட்க, நான் கொடுத்து அனுப்பவில்லை. அவர் தான் சிவபாலனிடம் இருந்து வாங்கிக் கொண்டு வேவுப் பார்க்க வந்து இருக்கிறார் என்று சொல்கிறார். மதனி சூடாமணியை எதுக்கும் ஜாக்கிரதையா இருக்க சொல்லு என்று சொல்ல, நான் அதை பார்த்துக்கொள்கிறேன் என்று போதனை வைக்கிறான் வைகுண்டம்.
பல ஆடு பகை: இதையடுத்து, ரத்னாவிற்கு நிச்சயம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதற்கான சூடாமணி கோவிலுக்கு போக, அந்த நேரம் காரில் வந்து கொண்டிருந்த சௌந்தர பாண்டி,சூடாமணியை பார்த்து, ஏய் சூடாமணி தலையில துணிபோட்டு மறைச்சிக்கிட்டா எனக்கு அடையாளம், தெரியாதா, எத்தனை வருஷம் ஆனாலும், உன்னை நான் மறக்கமாட்டேன் என்று சொல்லி, ஒழுங்கா பரோலை ரத்து பண்ணிட்டு ஜெயிலுக்கு போ என்று மிரட்டுகிறான். கடுப்பான சூடாமணி, ஏல சௌந்தர பாண்டி, பழைய சூடாமணினு நினைச்சியா.... உன்னை குடும்பத்தைவிட்டு பிரிச்சி தனியாக நிக்க வைக்கிறேன் பாரு என்று சவால் விடுகிறாள்.


Click it and Unblock the Notifications











