ரத்னாவின் திருமணத்தை நிறுத்த பிளான்.. அண்ணா சீரியலின் இன்றைய எபிசோட்!
சென்னை: அண்ணா சீரியலில் நேற்றை எபிசோடில், சூடாமணி கோவிலுக்கு போக, அந்த நேரம் காரில் வந்து கொண்டிருந்த சௌந்தர பாண்டி, சூடாமணியை பார்த்து, ஏய் சூடாமணி தலையில துணிபோட்டு மறைச்சிக்கிட்டா எனக்கு அடையாளம், தெரியாதா, எத்தனை வருஷம் ஆனாலும், உன்னை நான் மறக்கமாட்டேன் என்று சொல்லி, ஓழுங்கா பரோலை ரத்து பண்ணிட்டு ஜெயிலுக்கு போ என்று மிரட்டுகிறான்.
கடுப்பான சூடாமணி, ஏல சௌந்தர பாண்டி, பழைய சூடாமணினு நினைச்சியா, உன்னை குடும்பத்தைவிட்டு பிரிச்சி தனியாக நிக்க வைக்கிறேன் பாரு என்று சவால் விடுகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில் இன்று ரத்னா வீட்டில் தனியாக இருக்கும், நேரம் வெங்கடேஷன் வீட்டுக்கு பேகிக்கொண்டு இருக்கிறான். அப்போது கோவிலுக்கு போய்விட்டு வீட்டுக்கு வரும் சூடாமணி, வெங்கடேஷனைப் பார்த்து வாப்பா எப்போ வந்தே என்று கேட்க, இப்போ தான் வந்தேன் என்று சொல்லிவிட்டு, எனக்கும் ரத்னாவிற்கும் கல்யாணத்திற்கான ஏற்பாடு செய்யுங்க, நான் அவளுக்காக பத்து வருஷம் கூட காத்துக்கொண்டு இருப்பேன் ஆனால் வீட்டில் கல்யாணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்கள். நீங்க தான் சண்முகத்திடம் பேசி சீக்கிரமா ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று சொல்ல, சூடாமணி நிச்சயம் நான் பேசுகிறேன் என்கிறார்.
வருத்தப்படும் சூடாமணி: இதையடுத்து, சண்முகம் வீட்டிற்கு வர, சண்முகம் நான் சொல்லுவதை கேளு இந்த சௌந்தரபாண்டியனை பழிவாங்க நினைச்சது எல்லாம் போதும், அவனை பழிவாங்கினால் மட்டும், போன 20 வருஷ வாழ்க்கை திருப்பி வரவா போகுது. இதனால், அவனை விட்டு, தங்கச்சிகளை நல்லா படிக்க வை அது போதும், ரத்னாவிற்கு கல்யாணம் பண்ணு, நான் இரண்டு நாள், பசங்களோட இருந்துவிட்டேன். இனிமேல் நான் செத்து போனாலும் கவலை இல்லை என்று சூடாமணி பேச. என்னம்மா இப்படி பேசுறீங்க, சௌந்தர பாண்டியனை அப்படியே விடனுமா, அதெல்லாம் முடியாது. இப்போ என்ன தங்கச்சிங்களை படிக்க வைக்கணும், ரத்னாவிற்கு கல்யாணம் பண்ணணும் அவ்வளவு தானே அடுத்த வாரமே நிச்சயம் செய்துவிட்டால் போச்சு, இனி மேல் இப்படி பேசாதீங்க என்று சண்முகம் கூறுகிறார்.
சௌந்தரபாண்டியன் பிளான்: மறுபக்கம் சௌந்தரபாண்டி, சனியனிடம் சூடாமணிக்கு திமிற பாத்தியாவே, என்கிட்டேயே சவால் விடுறா, அவளை சம்மா விடக்கூடாதுடா. இப்போத்தான் ரத்னாவிற்கும் வெங்கடேஷனுக்கும் கல்யாணம் பண்ண பிளான் போடுறாங்க, எல்லாம் கை கூடி வரும் போது, ஊர் முன்னாடி அவளை அசிங்கப்படுத்தி, மறுபடியும் இந்த ஊருக்குள்ள அவவரமுடியாத அளவிற்கு அவள் குடும்பத்தை அசிங்கப்படுத்தி அனுப்ப வேண்டும் என்று சௌந்தர பாண்டியன் பிளான் போடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பதை தெரிந்து கொள்ள அண்ணா சீரியலை பாருங்கள்.


Click it and Unblock the Notifications











