ரத்னாவின் திருமணத்தில் நடக்கப்போது என்ன.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: அண்ணா சீரியலில் நேற்றை எபிசோடில், சௌந்தரபாண்டியனை பழிவாங்க நினைச்சது எல்லாம் போதும், அவனை பழிவாங்கினால் மட்டும், போன 20 வருஷ வாழ்க்கை திருப்பி வந்துவிடுமா, அதெல்லாம் தேவையில்லாதது சண்முகம், நீ, தங்கச்சிகளை நல்லா படிக்கவை அது போதும், ரத்னாவிற்கு கல்யாணம் பண்ணு, நான் இரண்டு நாள், பசங்களோட இருந்துவிட்டேன். இனிமேல் நான் செத்து போனாலும் கவலை இல்லை என்று சூடாமணி கண்கலங்கி பேச, இப்போ என்ன தங்கச்சிங்களை படிக்க வைக்கணும், ரத்னாவிற்கு கல்யாணம் பண்ணணும் அவ்வளவு தானே அடுத்த வாரமே நிச்சயம் செய்துவிட்டால் போச்சு, இனி மேல் இப்படி பேசாதீங்க என்று சண்முகம் கூறுகிறான்.
மறுபக்கம், சௌந்தரபாண்டி, சனியனிடம் சூடாமணிக்கு எவ்வளவு திமிறு வந்து இருக்கு தெரியுமா, அவளை சம்மா விடக்கூடாதுடா. இப்போத்தான் ரத்னாவிற்கும் வெங்கடேஷனுக்கும் கல்யாணம் பண்ண பிளான் போடுறாங்க, எல்லாம் கை கூடி வரும் போது, ஊர் முன்னாடி அவளை அசிங்கப்படுத்த வேண்டும் என்று பிளான் போடுகிறான். இப்படியான இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அண்ணா சீரியல்: இன்றைய சீரியலில், சௌந்தரபாண்டியனும் சனியனும் பேசிக்கொண்டு இருக்க, அங்கு வரும் பாக்யம், நான் சாப்பாட்டை சிவபாலனிடம் தானே கொடுத்து அனுப்புனேன் நீங்க ஏன் கொண்டு போனீங்க என்று கேட்க, அங்க என் மகள் பரணி இருக்கா, அவளை பார்க்க வேண்டும் என்று ஆசையா இருந்தது அதற்காக போனேன், ஏன் அந்த வீட்டுக்கு நான் போகக்கூடாதா என்று நக்கலாக பேசுகிறான். இந்த சண்டாலனுக்கு மதினி வந்து இருப்பது தெரிஞ்சு போச்சு போல என்று யோசித்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு செல்கிறாள்.
தேதி குறிச்சாச்சு: இதையடுத்து சூடாமணி வீட்டுக்கு வரும் வெங்கடேஷன், நிச்சயத்திற்கு நாள் குறிக்க சொன்னாங்க என்று சொல்ல, அனைவரும் சேர்ந்து ஒரு தேதியை குறித்துக்கொடுக்கின்றனர். இதையடுத்து திருமணத்தை கோவிலில் வைத்துக்கொள்ளலாம். ஆனால், நிச்சயத்தை பெரிய அளவில் செய்ய வேண்டும் என்று சொல்ல, சூடாமணி நிச்சயத்தை அப்படியே செய்துவிடலாம் என்று சொல்கிறாள். இதையடுத்து, ரத்னா, வெங்கடேசை வழியனுப்ப வெளியே வந்து இருவரும் பேசிக்கொண்டே நடந்து வருகின்றனர். அப்போது, வீட்டில் இருக்குற அந்த அம்மா பெயர் என்ன என்று கேட்க, பெயர் என்ன என்று தெரியவில்லை. அம்மாவின் பிரண்ட் என்பதால்,அம்மானு அனைவரும் கூப்பிட்டுகிறோம் என்கிறாள்.
சௌந்தரபாண்டி போட்ட பிளான்: மறுபக்கம்,சூடாமணி, பாக்கியத்திற்கு போன் செய்து, இதுபோல மாப்பிள்ளை திடீரென்று வீட்டுக்கு வந்துவிட்டார். அதனால், திருமணத்திற்கு நாள் குறித்துவிட்டோம். நிச்சயத்தை வைத்து இருக்கிறோம் என்று சொல்ல, அனைத்தையும் அருகில் இருந்து சௌந்தர பாண்டியன் ஒட்டு கேட்டுவிட்டு, கல்யாணம் எப்படி நடக்கிறது என்று பார்கிறேன் என்று, ஒரு பிளானை போட்டு, வெங்கடேஷனின் உறவினர் ஒருவரை அழைத்து, உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் நீ, ரத்னா, வெங்கடேஷ் நிச்சயத்தை நிறுத்த வேண்டும் என்று சொல்கிறான். நிச்சயம் நடக்கும் போது, நீ பொண்ணோட அம்மா யாருனு கேட்டா போதும், நான் அங்கு முக்காடு போட்டு இருக்கும் அம்மாவை பார்ப்பேன். அப்போது, நீ அவங்க கிட்ட போய், நீங்க யாருனு கேளு போதும், மத்ததை சனியன் பார்த்துக்கொள்வேன் என்று சொல்கிறான். அவனும் பணத்தை வாங்கிக் கொண்டு ஓகே சொல்கிறான். இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











