இசக்கிக்கு தங்க செயின் வாங்கி கொடுத்த முத்துப்பாண்டி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில், சூடாமணி, பாக்கியத்திற்கு போன் செய்து, இதுபோல மாப்பிள்ளை வந்தார். திருமணத்திற்கு நாள் குறித்துவிட்டோம். நிச்சயத்தை வைத்து இருக்கிறோம் என்று சொல்ல, அனைத்தையும் அருகில் இருந்து சௌந்தர பாண்டியன் ஒட்டு கேட்டுவிட்டு, கல்யாணம் எப்படி நடக்கிறது என்று பார்க்கிறேன் என்று, ஒரு பிளான் போடுகிறான்.
இதையடுத்து, கல்யாணத்தை நிறுத்த வெங்கடேஷனின் உறவினர் ஒருவரை அழைத்து, உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் நீ, ரத்னா, வெங்கடேஷ் நிச்சயத்தை நிறுத்த வேண்டும் என்று சொல்ல, அவனும் பணத்தை வாங்கிக் கொண்டு ஓகே சொல்கிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில் வீட்டிற்கு வரும் முத்துப்பாண்டி, சம்பள கவரை பாக்கியத்திடம் கொடுப்பதை பார்த்து, பதறிக்கொண்டு ஓடி வரும் சௌந்தரபாண்டி, ஏல முத்துப்பாண்டி என்னடா இது புது பழக்கம் என்கிட்ட தானே சம்பளத்தை தருவ என்று சொல்கிறான். ஆமாம், அப்பா இத்தனை நாள் நான் உங்க கிட்ட தான் தருவேன் இனிமேல், என் சம்பளத்தை அம்மாவிடம் தான் தருவேன். அம்மா வீட்டு செலவுக்கு உங்க கிட்ட கேட்டு நிக்குறாங்க, இனிமேல் அப்படி நடக்க வேண்டாம் அதான் அம்மாவிடம் கொடுத்தேன் என்று சொல்கிறான்.
டென்ஷனான சௌந்தரபாண்டி: இதைக்கேட்டு கடுப்பான சௌந்தரபாண்டி, டேய் முத்துபாண்டி அது சம்பளம் இல்ல என் கௌரவம், அதனால நீ என்கிட்டத்தான் சம்பளத்தை தரவேண்டும் என்று அடம்பிடிக்க, அம்மா, இந்த சம்பளத்தை புடி என்று கொடுத்துவிட்டு, காபி போட்டு கொடுத்து அனுப்பு என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறான். இதனால், டென்ஷனான சௌந்தரபாண்டி, இவன் ஏன் இப்படி மாறிவிட்டான். மொத்த சொத்தையும் இவன் பாக்யம், இசக்கி பேருல எழுதிடுவான் போல என்று மனதிற்குள் புலம்கிறான்.
ஒரு பவுன் தங்க செயின்: மறுபக்கம், சண்முகம் வீட்டில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் குறித்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது சூடாமணி மாப்பிள்ளைக்கு செயின், மோதிரம், வாட்ச் எல்லாம் வாங்க வேண்டும். இந்த நகை வாங்கும் போது, பாக்யம் நிச்சயம் அழைத்துப்போக வேண்டும். அவளுக்கு போன் போட்டு கூப்பிடு என்று சொல்ல, பரணி,அம்மாவிற்கு விஷயத்தை சொல்ல, அனைவரும் சேர்ந்து நகை கடைக்கு போகிறார்கள். அப்போது பாக்யம், முத்துபாண்டி கொடுத்த பணத்தை வைத்து, தனது மருமகளுக்கு ஒரு செயின் வாங்கிக் கொண்டு வருகிறாள்.
இசக்கிக்கு தங்க செயின்: வீட்டிற்கு வந்த பாக்யம், இசக்கியிடம் அந்த செயினை கொடுத்து, இந்த செயின் உன் புருஷன் சம்பளத்தில் வாங்கியது என்று சொல்ல, அதை ஏன் நீ எனக்கு தர, வேணும்னா அவர் எனக்கு போட்டுவிடட்டும் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து இசக்கி போய்விட, பாக்யம் அந்த நகையை முத்துப்பாண்டியிடம் காட்டி, இது இசக்கிக்காக வாங்கினேன், அதை நீ அவ கழுத்தில் போட்டுவிடு என்கிறான். இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











