பாண்டியம்மாவிற்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா, இந்த சீரியலில் பரணி தர்மகர்தாவா ஆகிட்டா, அடுத்ததா நகை விஷயத்தை தான் கையில் எடுப்பா.. அதுக்குள்ள நகையை இடமாற்றி வைக்க வேண்டும் என்று திட்டம் போட்டு சௌந்தரபாண்டி, முத்துப்பாண்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து போலீஸ்களுக்கு டீ-ல் மயக்க மருந்தை கலந்து கொடுத்து நகை பெட்டியை எடுத்துச் செல்கின்றனர்.
இதையடுத்து இன்றைய எபிசோடில், கோவில் நகை கருவூலத்தில் இருந்து எடுத்து திறந்து பார்க்க கோவில் நிர்வாகிகள் கோவிலுக்கு வந்தனர். அப்போது, அங்கு வரும் சௌந்தரபாண்டியன், பரணியை பார்த்து கிண்டலாக சிரிக்க, இவன் ஏதோ பிளான் போட்டு இருக்கான் போல என்று யோசிக்கிறாள். இதையடுத்து, கருவூலத்தில் இருந்து கோவில் நகையை எடுத்துக்கொண்டு வரப்படுகிறது. அதிகாரிகள் நகையை சோதனை செய்ய அது போலி நகை என்பது தெரிகிறது. இதைப்பார்த்து அங்கு இருப்பவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

வீட்டில் சோதனை: அப்போது சௌந்தர பாண்டியன் எனக்கும் இதற்கும் எந்த சந்தேகமும் இல்லை. வேண்டுமானால் வீட்டில் வந்து செக் பண்ணிக்கோங்க என்று சொல்ல கோவில் நிர்வாகிகள் மற்றும் போலீசார் என அனைவரும் சௌந்தர பாண்டியன் வீட்டிற்கு வருகின்றனர். அப்போது வீட்டில் இருக்கும் பாண்டியம்மா என்ன சௌந்தரபாண்டி வீட்டுக்கு போலீசாரை கூட்டிவந்து இருக்க என்று சொல்ல, அக்கா, கோவிலில் இருக்கும் நகை போலி நகையாம். இதனால், நான் தான் நகையை எடுத்துவிட்டேன் என்று எல்லாம் சொல்லுராங்க, அதன் வீட்டில் செக் பண்ணிக்கோங்க என்று அழைத்து வந்தேன் என்று சொல்கிறான்.
வலையில் சிக்கிய பாண்டியம்மா: ஓ கதை அப்படி போகுதா, என் தம்பியவா திருடனு சொல்றீங்க நல்ல தேடுங்க ஏமாந்துதான் போக போறீங்க என்று சொல்கிறார். இதையடுத்து போலீஸ்காரர்கள் ப்ளீஸ் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்க என்று சொல்லிவிட்டு வீட்டில் வீட்டில் தேடுதல் வேட்டை நடத்துகின்றனர். அப்போது பாண்டியம்மா அறையில் நகை இருப்பதை கண்டு பிடிக்கின்றனர். நகையைப்பார்த்த சௌந்தரபாண்டி அக்கா நகையை நீ தான் எடுத்தியா என்று பிளேட்டை மாற்றி போட்டு பாண்டியம்மா மீது பழியை போட்டு நாடகம் போடுகிறார். பாண்டியம்மாவை போலீஸ் கைது செய்ய போகும் போது அவர் சௌந்தரபாண்டியை பார்த்து கடைசியில் என்னை மாட்டி விட்டுட்டியே டா என்று திட்டி விட்டு செல்கிறாள்.
10 ஆண்டு தண்டனை: இதனை தொடர்ந்து பாண்டியம்மாவை கோர்ட்டில் ஆஜர் படுத்த முடிவெடுத்த நிலையில் பரணி ஷண்முகம் பாண்டியம்மாவை சந்தித்து நீங்க உண்மையை சொல்லலைனா உங்களுக்கு தான் பெருசா தண்டனை கிடைக்கும், உங்க தம்பி தப்பிச்சிடுவாரு என்று சொல்ல பாண்டியம்மா உண்மையை சொல்ல முடிவெடுக்கிறாள். கோர்ட்டில் ஆஜர் படுத்த அவள் உண்மையை சொல்ல தயாராக சௌந்தரபாண்டி கோவில் நகைகளை பாண்டியம்மாவிடம் கொடுத்து போட்டு பார்க்க சொல்லி எடுத்த போட்டோவை காட்டி என் அக்கா தான் நகையை திருடி இருக்கா என்று கோர்த்து விடுகிறார். இதனால் நீதிமன்றம் பாண்டியம்மாவுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையை விதிக்கிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











