பாக்கியத்துக்கு விழுந்த அறை.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில், சண்முகம் வீட்டில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் குறித்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது சூடாமணி மாப்பிள்ளைக்கு செயின், மோதிரம், வாட்ச் எல்லாம் வாங்க வேண்டும். நகை வாங்கும் போது, பாக்யம் நிச்சயம் அழைத்துப்போக வேண்டும். அவளுக்கு போன் போட்டு கூப்பிடு என்று சொல்ல, பரணி, அம்மாவிற்கு விஷயத்தை சொல்ல, அனைவரும் சேர்ந்து நகை கடைக்கு போகிறார்கள். அப்போது பாக்யம், முத்துபாண்டி கொடுத்த பணத்தை வைத்து, தனது மருமகளுக்கு ஒரு செயின் வாங்கிக் கொண்டு வருகிறாள்.
வீட்டிற்கு வந்த பாக்யம், இசக்கியிடம் அந்த செயினை கொடுத்து, இந்த செயின் உன் புருஷன் சம்பளத்தில் வாங்கியது என்று சொல்ல, அதை ஏன் நீ எனக்கு தர, வேணும்னா அவர் எனக்கு போட்டுவிடட்டும் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து இசக்கி போய்விட, பாக்யம் அந்த நகையை முத்துப்பாண்டியிடம் காட்டி, இது இசக்கிக்காக வாங்கினேன், அதை நீ அவ கழுத்தில் போட்டுவிடு என்கிறான். இதையடுத்து இன்று நடக்கப்போவதை பார்க்கலாம்.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், முத்துப்பாண்டி கொடுத்த நகையைப்பார்த்து இசக்கி சந்தோஷப்படுகிறாள். அடுத்ததாக ரத்னா தூங்கி எழுந்து காய்கறிகளை வெட்டிக் கொண்டு இருக்க அங்கு வந்த சூடாமணி நீ ஏமா இதெல்லாம் செய்யுற என்று கேட்க பரணி இன்னும் எழுந்துக்கல போல எங்களுக்காக அவ நிறைய செய்யுறா.. நல்லா தூங்கட்டும் என்று சொல்கிறாள்.
கண்கலங்கும் சூடாமணி: அதன் பிறகு சூடாமணி நான் தான் அவங்க ரெண்டு பேரையும் திருநள்ளாறு அனுப்பி வச்சிருக்கேன் என்று சொன்னதும் ரத்னா ஏன் என்று கேட்கிறாள். இங்க வீட்ல யாருக்குமே கிரகம் சரியில்ல.. உங்களுடைய ஆசைகளையே அவனுடைய ஆசையா வாழுற சண்முகம் அவனுடைய வாழ்க்கையை பற்றி யோசிக்கல. பரணியும் இந்த வீட்டுக்கு வாழ வந்தது உங்களுக்கு ஒரு அம்மாவாகவே மாறிட்டா.. அவங்க வாழ்க்கையில சந்தோஷமா இருக்கணும் அதனால தான் அனுப்பி வைத்தேன் என்று சொல்ல ரத்னா நல்ல விஷயம் செய்தீங்க நீங்க எப்பவும் எங்களோடவே இருங்க என்று சொல்ல சூடாமணி கண்கலங்கி சம்மதம் சொல்கிறாள்.
பாக்கியத்தை அடித்த: அடுத்ததாக சௌந்தரபாண்டி பாக்கியத்திடம் காபி கேட்க பாக்கியம் கொண்டு வந்து கொடுக்க தாமதம் செய்ய கடுப்பான சௌந்தரபாண்டி அவளை பிடித்து அடித்து விடுகிறார். பாக்கியம் இனிமே என் மேல கைய வச்சீங்க அவ்வளவுதான் என்று பதிலடி கொடுக்கிறாள்.அதன் பிறகு காய்கறிகளை வாங்கிக் கொண்டு இசக்கி வீட்டுக்கு வர சௌந்தரபாண்டி இது எல்லாம் எதுக்கு நீ வாங்கிட்டு வர என்று கேள்வி கேட்கிறார். அவருக்கு ஸ்டேஷனுக்கு சாப்பாடு கொண்டு போய் கொடுத்துட்டு வந்தேன் வர வழியில வாங்கிட்டு வந்தேன் என்று சொல்ல என் பையன கைக்குள்ள போட்டுக்க பாக்குறியா என்று அவளிடமும் கோபப்படுகிறார்.
சண்டைபோடும் இசக்கி: அதன் பிறகு இசக்கி உள்ளே வர பாக்கியம் தலைவிரி கோலமாக உட்கார்ந்து இருக்க என்ன ஆச்சு என்று கேட்க உங்க மாமா அடிச்சிட்டாரு என்று சொல்கிறாள். இதனால் இசக்கி சௌந்தரபாண்டியிடம் சண்டைக்கு வர அவர் ஓடுகாலி மகளே என்று கோபப்பட்டு திட்டுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











