சண்முகத்தை பிரியும் பரணி? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இதில் நேற்றைய எபிசோடில், சௌந்தரபாண்டி, பாண்டி அம்மாள் மீது திருட்டுப்பழியை போட்டு தப்பித்துக்கொண்டதால், ஆத்திரம் அடைந்த ஷண்முகம், ஆவேசமாக சௌந்தரபாண்டியை குத்த போக வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் தடுத்தும் முடியாமல் போக, ஒரு கட்டத்தில் சௌந்தரபாண்டியை குத்தும் போது, பாக்கியம் குறுக்கே வந்து விழுந்து ரத்த வெள்ளத்தில் சரிகிறாள்.

இதனால் பரணி பதறி போக முத்துப்பாண்டி அம்மாவுக்கு கத்திக்குத்து நடந்ததும் இதுவரை காட்டாத பாசத்தை காட்டி குழந்தை போல் கலங்கி நிற்கிறான், உன்னை சாக விட மாட்டேன் மா என்று துடிதுடிக்கிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Zee tamil Anna

அண்ணா சீரியல்: இதையடுத்து இன்றைய எபிசோடில், பாக்கியத்தை சண்முகம் குத்திய விஷயம் தெரிந்து கதறி அழுது பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு ஓடி வருகிறாள். வீட்டிற்கு வந்த பரணியை சௌந்தரபாண்டி இனிமே என் முகத்திலேயே முழிக்காத என்று வீட்டை விட்டு பரணி துரத்திவிட்டு, பாக்கியத்தை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்கின்றனர். அத்தையை கத்தியால் குத்தியதை நினைத்து குற்ற உணர்ச்சியில் இருக்கும் ஷண்முகத்தின் கன்னத்தில் பளார் என்று அடித்த பரணி. ஏன்டா இப்படி கொல வெறியோட இருக்க போ ஆத்திரம் தீர எல்லாத்தையும் வெட்டு என்று கத்துகிறாள்.

என் அம்மாவிற்கு மட்டும் ஏதாவது ஆச்சு அதே அவ்வளவு தான், உன் கூட சேர்ந்து நான் வாழவே மாட்டேன் என்று பரணி அழுது புலம்புகிறாள். இதை எல்லாம் கவனித்த சௌந்தர பாண்டி, இதோட பாக்கியத்தின் கதை முடிஞ்சா நல்லா இருக்கும், அதையே காரணமா வச்சி அந்த ஷண்முகத்தையும் பரணியையும் பிரிச்சிடுவேன் என்று மனதிற்குள் கணக்கு போடுகிறார்.

அழுது புலம்பும் முத்துப்பாண்டி: அடுத்து ஹாஸ்பிடலில் பெரிய டாக்டர் இல்லை என்று அதிர்ச்சி கொடுக்க அழுது துடிக்கும் முத்துப்பாண்டி அங்கு இருப்பவர்களிடம் சண்டை போடுகிறான். இதையடுத்து, என் தங்கச்சியே டாக்டர் தான் என்று சொல்லி இசக்கியிடம் பரணிக்கு போன் போட்டு வர சொல்லு என்று சொல்ல சௌந்தரபாண்டி ஷாக்காகி அவ எதுக்கு என்று கேட்க முத்துப்பாண்டி நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க என்று ஆவேசப்படுகிறான்.

கோவிலில் சண்முகம்: இதையடுத்து பரணி ஓடி வந்து அம்மாவுக்கு சிகிச்சை பார்த்து அவளை காப்பாற்ற மறுபக்கம் ஷண்முகம் கோவிலில் என் அம்மா மாதிரி இருந்த என் அத்தையையே குத்திட்டேன். இனிமே அருவா டுக்க மாட்டேன். என் அத்தையை காப்பாத்திடு என்று வேண்டுகிறான், நைட்டெல்லாம் அப்படியே உட்கார்ந்து கடவுளை வேண்டியபடி இருக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X