பரணி எடுத்த விபரீத முடிவு.. அண்ணா சீரியலின் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இதில் நேற்றைய எபிசோடில், சண்முகம் தவறுதலாக பாக்கியத்தை குத்திவிட கோவத்தோடு வந்த பரணி, கத்தியை எடுத்து கொடுத்து போ எல்லாத்தையும் குத்து, அம்மாவிற்கு எதாவது ஆச்சு, உன்கூட சேர்ந்து வாழவே மாட்டேன் என்று சண்முகத்தின் கன்னத்தில் பளார் என்று அடிக்கிறார்.
மருத்தவமனையில் பெரிய டாக்டர் இல்லாததால், முத்துப்பாண்டி பரணிக்கு போன் செய்து வர சொல்ல, பரணி ஓடி வந்து அம்மாவுக்கு சிகிச்சை பார்த்து அவளை காப்பாற்றுகிறாள். மறுபக்கம் ஷண்முகம் கோவிலில் என் அம்மா மாதிரி இருந்த என் அத்தையையே குத்திட்டேன். இனிமே அருவாள் எடுக்க மாட்டேன். என் அத்தையை காப்பாத்திடு என்று வேண்டுகிறான், நைட்டெல்லாம் அப்படியே உட்கார்ந்து கடவுளை வேண்டியபடி இருக்கிறான். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், பாக்கியத்திற்கு ஆப்ரேஷன் முடிந்து அவள் நல்லபடியாக கண் திறந்து பார்க்க முத்துப்பாண்டி, பரணி சந்தோஷப்படுகிறார்கள். சௌந்தரப்பாண்டியோ அய்யோ பொழச்சிட்டாளே, இவளை வச்சு பரணி, சண்முகத்தின் வாழ்க்கையை கெடுக்கலாமுனு பார்த்தா பொழச்சிட்டாளே என்று மனதிற்குள் வருத்தப்படுகிறான்.
மன்னிச்சிடுங்க: மறுபக்கம், சண்முகம் கோவிலில் புலம்பி அழுதுக்கொண்டு இருக்கிறான். அப்போது பாக்கியம் கண் விழிக்க வெட்டுக்கிளி ஓடி வந்து ஷண்முகத்திடம் விஷயத்தை சொல்லி ஹாஸ்பிடல் அழைத்து செல்கிறான். பாக்கியத்தை பார்க்க வந்த ஷண்முகம் இனிமே எப்பவும் அருவாள் எடுக்க மாட்டேன் என்று கண் கலங்கி அழுது மன்னிப்பு கேட்க பாக்கியம் நீ ஜெயிலுக்கு போக கூடாதுனு மட்டும் தான் நான் நினைச்சேன் என்று சொல்கிறாள்.
சேர்ந்து வாழ மாட்டேன்: பிறகு பாக்கியத்தை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து செல்ல பரணி ஷண்முகத்திற்கு வேண்டா வெறுப்பாக சாப்பாடு போட அவன் சாப்பிடாமல் எழுந்து சென்று விடுகிறான். அதன் பிறகு பரணி தனது வீட்டிற்கு போன் செய்து என்னுடைய சர்டிபிகேட், பாஸ்போர்ட் எல்லாம் எடுத்திட்டு வாங்க, நான் அமெரிக்கா போக போறேன். இனிமே இவனோட வாழ முடியாது. இந்த வீட்டில் வாழ பிடிக்கல என்று அதிர்ச்சி கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











