ஜெயிலுக்கு போக தயாரான சண்முகம்.. அண்ணா சீரியலின் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இதில் மருத்துவமனையில் இருக்கும் பாக்கியம் கண் விழித்த விஷயத்தை வெட்டுக்கிளி ஓடி வந்து ஷண்முகத்திடம் சொல்லி ஹாஸ்பிடல் அழைத்து செல்கிறான். பாக்கியத்தை பார்க்க வந்த சண்முகம் இனிமே எப்பவும் அரிவாள் எடுக்க மாட்டேன் என்று கண் கலங்கி அழுது மன்னிப்பு கேட்க பாக்கியம் நீ ஜெயிலுக்கு போக கூடாதுனு மட்டும் தான் நான் நினைச்சேன் என்று சொல்கிறாள்.

பிறகு பாக்கியத்தை டிஸ்ஜார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து செல்ல பரணி, சண்முகத்திற்கு வேண்டா வெறுப்பாக சாப்பாடு போட அவன் சாப்பிடாமல் எழுந்து சென்று விடுகிறான். அதன் பிறகு பரணி தனது வீட்டிற்கு போன் செய்து என்னுடைய சர்டிபிகேட், பாஸ்போர்ட் எல்லாம் எடுத்திட்டு வாங்க, நான் அமெரிக்கா போக போறேன். இனிமே இவனோட வாழ முடியாது. இந்த வீட்டில் வாழ பிடிக்கல என்று அதிர்ச்சி கொடுக்கிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Zee tamil Anna

அண்ணா சீரியலில்: இன்றைய எபிசோடில், சண்முகம் பாக்கியத்தை கொலை செய்ய முயற்சித்ததாக சௌந்தர பாண்டி புகார் அளிப்பதை தொடர்ந்து, இதுகுறித்து விசாரணைக்கு வருகிறது. வைகுண்டம் மற்றும் சண்முகத்தின் தங்கைகள் என எல்லோரும் பரணியிடம், சண்முகத்தை காப்பாத்துக்க, பாக்கிய அத்தையிடம், சண்முகம் தான் குத்தினான் என்று கோர்ட்டில் எதுவும் சொல்ல வேண்டாம் என்று சொல்ல சொல்லி கெஞ்சுகின்றனர். பரணியோ, சண்முகம் இனிமே அருவாளை தூக்க மாட்டேன் என்று சொல்ல சொல்லு.. நான் அம்மா கிட்ட பேசுறேன் என்று சொல்கிறாள். ஆனால் சண்முகம் பதில் பேசாமல் அமைதியாக இருக்கிறான்.

பிடிவாதமாக இருக்கும் சண்முகம்: சண்முகம் அமைதியாக இருப்பதை பார்த்து பரணி, பாத்தீங்களா எப்படி அமைதியாக இருக்காரு, தான் செய்தது தப்பு என்று அவருக்கு தெரியவே இல்லை. எப்படியோ போகட்டும் நான் அம்மா கிட்ட எதுவும் பேச மாட்டேன் என்று சொல்ல, வைகுண்டம் மற்றும் தங்கைகள் சண்முகத்திடம் அருவா எடுக்க மாட்டேன்னு சொல்லுடா என்று சொல்கின்றனர். அப்போது ஆத்திரப்படும் சண்முகம், என் தங்கச்சிங்களுக்கு ஒன்னுனா நான் அறிவாள் எடுப்பேன். அந்த சௌந்தரபாண்டியை கொன்னுட்டு ஜெயிலுக்கு போனா கூட கவலை இல்லை என சொல்கிறான்.

சௌந்தரபாண்டி போட்ட பிளான்: மறுபக்கம் சௌந்தரபாண்டி வீட்டுக்கு வந்த லாயர் பாக்கியத்திடம் நடந்த விஷயங்களை மட்டும் சொல்லுங்க என்று சொன்னதும் சௌந்தரபாண்டி நீ பொய் எதுவும் சொல்ல வேண்டாம், நடந்தது மட்டும் சொல்லு என்று சொல்ல, எனக்காக இதை மட்டும் சொல்லு பாக்கியம் என்று சௌந்தரபாண்டி சொல்ல பாக்கியம் உடனே சரி என்கிறார். உடனே சரி என்று சொன்னதும் சௌந்தர பாண்டிக்கு பாக்கியத்தின் மீது சந்தேகம் வருகிறது.

அமைதியாக இருக்கும் பாக்யம்: இதையடுத்து, வைகுண்டமும் சண்முகத்தின் தங்கைகள் அனைவரும் சௌந்தரபாண்டி வீட்டிற்கு பாக்கியத்தை பார்க்க வருகின்றனர். அப்போது வைகுண்டம், சண்முகத்தால் உனக்கு இப்படி ஒரு நிலைமை வரும் என்று எதிர்பார்க்கல பாக்கியம். ஆனால், சண்முகம் எப்படிப்பட்டவன் என்று உனக்கு தெரியும் தானே என்று கண்கலங்குகிறார். நீ கோர்ட்டில் சண்முகம் தான் குத்துனான் என்று சொன்னால், சண்முகமும் ஜெயிலுக்கு போய்விடுவான் என்று சொல்ல, பாக்கியம் எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருக்கிறாள். இதை மறைந்து இருந்து பார்த்திக்கொண்டிருந்த சௌந்தர பாண்டி, பாக்யம் நாம சொன்ன மாதிரியே கோர்ட்டில் சொல்லிவிடுவாள் என்று நம்பிக்கையோடு இருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X