பரோலில் வெளியே வரும் சூடாமணி.. பரணி எடுத்த முடிவு.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இதில் கோர்ட்டிற்கு வந்த பாக்கியத்திடம் சண்முகம் தானே உங்களை குத்தியது என்று கேட்க, சண்முகமா அவன் ஏன் அந்த நேரத்தில் என் வீட்டுக்கு வரப்போறான். அவன் குத்தவில்லை என்று சொல்ல கடுப்பான சௌந்தர பாண்டி, கோர்ட்டில், அவன் பொய் சொல்கிறான் என்று கத்துகிறார்.

சண்முகம் தான் குத்தினான், அவளுக்கு இரண்டு அடி கொடுத்தா, உண்மையை சொல்லுவா என்று சொல்ல, சௌந்தர பாண்டி இது கோர்ட், இங்கே உங்க மனைவி அடிப்பேன் என்று சொல்லுவீங்களா? தூக்கி உள்ள போட்டுடுவேன் என்று சொல்ல சௌந்தர பாண்டியன் அமைதியாக அமர்கிறார். இதையடுத்து, ஷண்முகம் குத்தவில்லை என்று சொல்லி, ஷண்முகத்தை பாக்கியம் காப்பாற்றிவிடுகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பாக்கலாம்.

Zee tamil Anna

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், வீட்டிற்கு கோபமாக வந்த சௌந்தரபாண்டி பாக்கியத்திடம் நான் உன்கிட்ட என்ன சொல்ல சொன்னேன், நீ என்ன சொல்லி இருக்க என்று ஆவேசமாக கத்துகிறான். சும்மா இருங்க, கோவில் நகை நம்ம வீட்டில் தான் இருந்தது, அதையும் நீங்களும் சனியனும் தான் திருடி இருக்கீங்க... நீங்க தான் அதை இடமும் மாற்றி பாண்டியம்மா ரூமில் வெச்சிங்க என்று கோர்ட்டில் சொல்லி இருந்தா என்ன ஆகி இருக்கும், அதையும் சேர்த்து தான் சொல்லி இருப்பேன் என்று பேசி ஷாக் கொடுக்கிறாள்.

அந்த பயம் இருந்தது: மறுப்பக்கம், ஷண்முகம் வீட்டில் அவனது தங்கைகள் பரணியிடம் நீ அத்தை கிட்ட பேச மாட்டேன்னு சொல்லிட்ட, ஆனால் அத்தையே அண்ணாவை காப்பாத்திட்டாங்க என்று பேசி கொண்டிருக்க, அப்போது பரணி,அம்மா இப்படித்தான் சொல்லுவாங்க என்று எனக்கு ஏற்கனவே தெரியும், இருந்தாலும், அப்பா எதாவது பிளான் பண்ணுவாரோ என்கிற பயம் தான் இருந்தது. இருந்தாலும், அம்மா ஷண்முகத்தை காப்பாத்திட்டாங்க என்று சொல்கிறாள்.

ஜெயிலில் சண்டை: அடுத்து சூடாமணிக்கு மீண்டும் தான் இறந்து போவது போல் கனவு வர அவள் பதற்றத்தோடு இருக்கிறார். அப்போது அங்கு வந்த பாண்டியம்மா, நீ செத்து தான் டி போக போற.. உன்னால் எதுவுமே செய்ய முடியாது என்று சொல்ல இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அதை தொடர்ந்து சூடாமணி ஜெயிலர் அம்மாவிடம் பரோல் கேட்க அவர் இதுவரைக்கும் நீங்க எதுவுமே கேட்டது இல்ல.. முதல் முறையாக பரோல் கேட்டு இருக்கீங்க. கண்டிப்பா பரோல் தரேன். அதுவும் துணைக்கு போலீஸ் யாரும் இல்லாமல் உங்களை அனுப்பறேன் என்று சொல்ல சூடாமணி சந்தோசம் அடைகிறாள்.

அமெரிக்கா போகும் பரணி: மறுபக்கம் சிவபாலன், பரணி கேட்ட சர்டிபிகேட்டுகளை எடுத்துக்கொண்டு பரணி வீட்டிற்கு வருகிறான். கொடுத்துவிட்டு வெளியில் வரும் போது, சண்முகத்தை பார்க்க சிவபாலன் அக்கா சர்டிபிகேட் கேட்டா அதை கொடுக்க வந்ததாக சொல்கிறான். அப்போது பரணி, அமெரிக்கா போக போகும் விஷயத்தை சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ள அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X