பதவியேற்ற பரணி.. சௌந்தரபாண்டிக்கு ஆப்பு வைத்த ஷண்முகம்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி பதவியேற்ற விழாவில் சௌந்தரபாண்டிக்கு கை, கால் வராததால் கையெழுத்து போட முடியாது என்று முத்துப்பாண்டி சொல்கிறான். ஆனால், இதெல்லாம் நாடகம் என்று தெரிந்து கொண்ட ஷண்முகம், சௌந்தரை பாண்டி வீல் சேரை காரில் ஏற்றி விடுகிறான்.

இதையடுத்து கோவில் பூசாரி முதலில் உங்க பேருக்கு அர்ச்சனை பண்ணிட்டு அதுக்கு அப்புறம் பதவி ஏற்று கொள்ளுங்கள் என்று சொல்ல பரணி, சூடாமணி பெயருக்கு அர்ச்சனை செய்ய சொல்கிறாள் இதைப்பார்த்து அனைவரும் ஷாக் ஆகின்றனர். சூடாமணி ரொம்ப நல்லவங்கனு நான் கூடிய சீக்கிரம் ஆதாரத்தோடு நிரூபித்து காட்டுறேன் என்று சொல்கிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Zee tamil Anna television

அண்ணா சீரியல்: இதையடுத்து இன்றைய சீரியலில்,சௌந்தரபாண்டி கையெழுத்து போட்டால் தான் பரணி பதவியேற்று கோவில் சொத்துக்களை பார்வையிட முடியும் என்று சொல்ல சௌந்தரபாண்டி தரப்பினர் எது எப்படி இவர் கையெழுத்து போடுவார் அவர் தான் உடம்பு சரியில்லாமல் இருக்கிறாரே. இதனால், அவருக்கு உடம்பு சரியாகும் வரை கையெழுத்து போட முடியாது என்று சொல்கின்றனர்.

பிளான் போடும் ஷண்முகம்: அப்போது அங்கு இருக்கும் ஷண்முகம், பரணியிடம் உன் அப்பனை இப்போ ஓட விடுறேன் பாரு என்று சொல்ல, பரணியோ அவருக்கே உடம்பு சரியில்ல, இந்த நேரத்தில் எதுக்கு இப்படி சொல்ற, என்று கேட்க ஷண்முகம் அவளை தனியாக அழைத்து சென்று சௌந்தரபாண்டிக்கு உடம்பு நல்லாத்தான் இருக்கு, அவர் உடம்பு சரியில்லாதது போல நாடகம் போடும் விஷயத்தை உடைக்கிறான். இதையடுத்து, பிளான் போடும் ஷண்முகம் சௌந்தரபாண்டியால் கையெழுத்து போட முடியலைன்னா என்ன? அவர் ஏற்கனவே கையெழுத்து போட்டு கொடுத்துட்டாரு என்று சொல்ல எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

தர்மகர்த்தாவாகும் பரணி: பதவியில் இருப்பவருக்கு உடம்பு முடியாமல் போய்விட்டால் அவருக்கு பதிலாக அவரது மனைவி கையெழுத்து போடலாம், அதான் என் அத்தை நேத்தே கையெழுத்து போட்டு கொடுத்துட்டாங்க என்று சொல்கிறான். கோவில் நிர்வாகம், பதவியில் இருப்பவருக்கு உடம்பு முடியாமல் போய்விட்டால் அவருக்கு பதிலாக அவரது மனைவி கையெழுத்து போடலாம் இது சட்டத்தில் இருக்கு என்று சொல்கிறது. இதையடுத்து, பாக்கியம் டாகுமெண்ட்டுடன் வர, கோவில் நிர்வாகம் அதை ஏற்றுக்கொற்கிறது.

பயத்தில் சௌந்தரபாண்டி: இதை பார்த்து அதிர்ச்சியாகும் சௌந்தரபாண்டி பக்கவாத நாடகத்தால் எதுவும் செய்ய முடியாமல் இருக்க பரணி தர்மகத்தாவாக பதவி ஏற்கிறாள், இதனால் அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்துடன் சௌந்தரபாண்டி வீல் சேரில் வெளியே வர ஷண்முகம் எதிரே வந்து உங்களை ஓட விடுறேனு சொன்னேனே செய்ய வேண்டாமா என்று கேட்டு, வீல் சேருக்கு அடியில் பட்டாசை கொளுத்திப்போட, அனைவரும் சௌந்தரபாண்டியை விட்டுவிட்டு ஓட பயத்தில், நடிப்பதை மறந்து சௌந்தரபாண்டியனும் எழுந்து ஓடுகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Read more about: zee tamil anna television
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X