இசக்கியின் கரு தங்காது.. சௌந்தரபாண்டியால் கதி கலங்கும் குடும்பம்.. அண்ணா சீரியல்!

சென்னை: பரணி வீட்டை விட்டு சென்றதால் வருத்தத்தில் இருக்கும் ஷண்முகம், குடும்பம் ஒன்று சேர வேண்டும் என்பதற்காக முருகன் கோவிலில் முருகனுக்கு தண்ணீரால் அபிஷேகம் செய்து கொண்டு இருக்கிறார். உன்கிட்ட இருந்த ஒரு நல்ல முடிவு வராமல் இந்த இடத்தைவிட்டு போக மாட்டேன். அப்படியே நல்ல முடிவு வரவில்லை என்றால், இந்த இடத்திலேயே சாவேன் என்று சொல்லிவிட்டு ஆக்ரோஷத்தோடு முருகனுக்கு அபிஷேகம் செய்து கொண்டு இருக்கிறார்.

மறுபக்கம், பரணி தான் அமெரிக்காவிற்கு செல்ல இருப்பதாகவும் இங்கே இருந்து கொண்டு சண்முகத்திற்கும் சௌந்தரபாண்டிக்கும் நடக்கும் ஈகோ சண்டைகளில் தான் தலையிட விரும்பவில்லை என்றும் தன்னுடைய வாழ்க்கை தான் முக்கியம் என்று முடிவெடுத்துவிட்டு சென்னைக்கு செல்ல இருப்பதாக சொல்கிறாள். சண்முகத்திடம் சொல்லிவிட்டு, நீ இப்போது போனா அது சரியாக இருக்காது என்று பாக்கியா சொல்ல, நான் ஏன் சண்முகத்திடம் பேச வேண்டும். எனக்கு அது தேவையில்லாத ஒன்று என்று சொல்லிவிட்டு, பாக்கியா எவ்வளவு தடுத்தும் அதைப்பற்றி எல்லாம் கேட்காத பரணி, நான் சென்னைக்கு செல்வது உறுதி விசா கிடைத்ததும் அமெரிக்காவுக்கு சென்று விடுவேன் அப்பொழுது உன்னிடம் சொல்லி அனுப்புகிறேன். அப்போது வந்து நீ பார்த்தால் போதும் என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறாள்.

Zee tamil Anna

கர்ப்பமாக இருக்கும் இசக்கி: அந்த நேரம் பார்த்து இசக்கியிடம் இருந்து பாக்யாவிற்கு ஃபோன் வர அப்போது தான் வயிற்று வலியால் அவதிப்பட்டு கொண்டிருப்பதாக சொல்ல, இந்த தகவலை பாக்யா பரணியிடம் இடம் சொல்கிறாள். வீட்டிற்கு வரும் பாக்யா, இசக்கியை பரிசோதனை செய்துவிட்டு, அவள் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்ல அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். இதைத்தொடர்ந்து சிவபாலன் கோயிலுக்கு வந்து சண்முகத்திடம் பரணி வீட்டுக்கு வந்த விஷயத்தை சொல்கிறான். அதன் பிறகு இசக்கி கர்ப்பமான விஷயத்தையும் சொல்ல சண்முகம் இரட்டிப்பு சந்தோஷம் அடைகிறான். முருகனுக்கு நன்றி சொல்லிவிட்டு வீட்டிற்கு ஓடி வர அப்போது பரணி வீட்டுக்குள் இருப்பதை பார்த்து சந்தோஷப்படுகிறான்.

அண்ணா சீரியல்: பிறகு பரணி ரூமுக்குள் இருக்க ஷண்முகம் மிகுந்த உற்சாகத்தோடு உள்ளே நுழைகிறான். அப்போது, பரணி சண்முகத்திடம் இசக்கி நல்லா தான் இருக்கா கர்ப்பமா இருக்கா, அதனாலதான் அவளுக்கு வாமிட் வந்திருக்கு , மயக்கமும் வந்திருக்கு, மத்தபடி அவளோட குழந்தையும் நல்லாதான் இருக்கு யாருக்கு அந்த பயமும் தேவையில்லை என்று சொல்ல, அப்போது சண்முகம் என் அப்பன் முருகன், உன்னை அமெரிக்காவிற்கு அனுப்பாமல் இந்த வீட்டுக்கே அனுப்பிட்டான் நீயா வெளியில போன, நீயா இந்த வீட்டுக்கு வந்துட்ட பாத்தியா எல்லாம் அவன் செயல் என்று சொல்கிறான்.

Zee tamil Anna

நீ யாரோ நான் யாரோ: இதைக் கேட்டு கடுப்பான பரணி அதெல்லாம் இல்ல, அமெரிக்காவில் விசா கிடைக்கிற வரைக்கும் சென்னையில் என்னோட ஃப்ரெண்ட் வீட்டுல தங்கலாம் என்று நினைச்சி இருந்தேன். அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு, இந்த நேரத்தில், நான் இசக்கி கூட இருக்கணும். அமெரிக்காவுக்கு போறதுக்கு இன்னும் நிறைய நாள் இருக்கு, சென்னைக்கு போவதுதான் தள்ளி போய் இருக்கு, அமெரிக்கா போவதை யாரும் தடுக்க முடியாது நான் கண்டிப்பா அமெரிக்காவுக்கு போய் படிப்பேன். நீ தேவையில்லாமல் எதாவது பேசாதே சண்முகம், என் வாழ்க்கையில் நீ இல்ல, மத்தவங்க முன்னாடி தான் நீயும் நானும் புருஷன் பொண்டாட்டி. இந்த ரூமுக்குள்ள நீ யாரோ நான் யாரோ அவ்வளவு தான் என்று சொல்கிறாள்.

கண்டிஷன் போடும் பரணி: அப்போது சண்முகம் நிச்சயமாக நீ அமெரிக்கா போக மாட்ட, நீ எல்லாத்தையும் கேன்சல் பண்ணுவ பாரு என்று சொல்ல, கோவப்பட்ட பரணி, நான் அமெரிக்கா போவதை நீ இல்ல, அந்த முருகனால் கூட தடுக்க முடியாது. முடிஞ்சா தடுத்து பாரு என்று சவால் விடுகிறாள். இனிமேல் தேவையில்லாமல் என் விஷயத்தில் நீ தலையிட்டா, அடுத்த நொடியே பேக்கை தூக்கிட்டு என் அப்பா வீட்டிற்கு கிளம்பி போய்டுவேன் என்று அதிர்ச்சி கொடுக்க வேறு வழியின்றி சண்முகம் சம்மதம் சொல்கிறான். அதே நேரத்தில் எப்பவும் பரணி என் வாழ்க்கையை விட்டோ, அமெரிக்காவிற்கோ போக மாட்டாள் எனவும் நம்புகிறான்.

Zee tamil Anna

இந்த கரு தங்காது: அடுத்த நாள் காலையில் சௌந்தரபாண்டி சண்முகம் வீட்டிற்கு வருகிறார். இசக்கி கர்ப்பமான செய்தியை கேள்விப்பட்டேன் எனக்கும் ரொம்ப சந்தோசம்.ஆனால், இந்த குடும்பத்தில் யாருக்கும் முதல் கரு தங்கியதில்லை என்று அதிர்ச்சி கொடுக்கிறார். சூடாமணி, பாக்கியம் என எல்லாருக்கும் முதல் கரு கலைந்து விட்ட விஷயத்தை சொல்கிறார். இதை கேட்டு எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். இசக்கியும் இந்த கரு நிலைக்குமா? நிலைக்காதா? என பயப்பட தொடங்குகிறாள். ஷண்முகம் குடும்பத்தினர் இசக்கியை நல்லபடியாக பார்த்துக்கொள்ள வேண்டும் என முடிவெடுக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X