நீ எல்லாம் ஒரு மனுஷனா? சண்முகத்தை விட்டு பிரிந்த பரணி.. கலங்கி நின்ற குடும்பம்.. அண்ணா சீரியல்!

சென்னை: பரணியை சென்னைக்கு வர சொல்லி லெட்டர் வர, இதைப்பார்த்து திட்டம் போடும் சௌந்தரபாண்டி, இதை வைத்து பரணியை சென்னைக்கு அனுப்பி அப்படியே அமெரிக்கா அனுப்பி வைக்க திட்டம் போடுகிறார். பின் சிவபாலனை சண்முகத்தின் வீட்டுக்கு அனுப்பி பரணியை அழைத்துவரும் படி சொல்கிறான். பின் பரணி வீட்டுக்கு வந்து என்ன விஷயம் என்று கேட்க, உனக்கு விசா இன்டெர்வியூக்கு லட்டர் வந்து இருக்கு, அதை அங்கே நான் கொண்டுவந்து கொடுத்தா இந்த சண்முகம் ஏதாவது பிளான் போட்டுவிடுவான். அதான் வீட்டுக்கு வர வர சொன்னேன்.

அந்த வெறும் பய மகன் சண்முகத்திற்கு தங்கச்சிங்க மேல தான் பாசமா இருக்கான்? இசக்கிக்காக விரதம் இருக்கான் காவடி தூக்குறான் உன்னை பத்தி அவன் யோசிக்கிறதே இல்லை. நீ தான் சண்முகம்னு அவன் பின்னடியே இருக்க, நீ அமெரிக்கா போக போறியா? இல்லையா... உன் முடிவை மாத்திக்க போறியா? என்று கேட்க பரணி, என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை, சண்முகம் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நான் அமெரிக்கா போகும் முடிவில் உறுதியாக தான் இருக்கிறேன் என்று அந்த கடிதத்தை வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்புகிறாள்.

இன்றைய எபிசோட்: இதையடுத்து இன்றைய எபிசோடில் பாண்டியம்மாள், சௌந்திரபாண்டியனை தனியாக அழைத்து, ஏலே தம்பி நான் ஒரு விஷயத்தை சொல்கிறேன். எல்லா விஷயத்திலேயும் நம்ம பிளான் போட்டபடி நடக்கவே மாட்டேங்குது. எல்லாத்துலயும் அந்த சண்முகம் தான் ஜெயிச்சுகிட்டே இருக்கான். அதுக்கு முக்கிய காரணம் பரணி தான். பரணியும் சண்முகமும் சேர்ந்து இருந்தால் நம்மளால எதுவுமே செய்ய முடியாது இப்போ ஒரு நல்ல வாய்ப்பு கிடைச்சிருக்கு, அத பயன்படுத்தி பரணியையும் சண்முகத்தையும் நம்ம பிரித்து ஆகணும்.

Zee tamil Anna

கணவன் மனைவி சேரக்கூடாது: அதாவது பரணி கூட நீ சென்னைக்கு போ, சென்னைக்கு போயிட்டு அப்படியே பரணியை அமெரிக்காவுக்கு அனுப்பி வச்சிரு நீ மட்டும் பரணி கூட சென்னைக்கு போலனா? சண்முகம் பையன் பரணி கூட சென்னைக்கு போவான். பரணியும் சண்முகம் இதுவரைக்கும் கணவன் மனைவியா சேர்ந்து வாழவே இல்ல எலியும் பூனையுமாக சண்டைதான் போட்டுக்கிட்டு இருக்காங்க. ஆனால், சென்னைக்கு போனா, ரெண்டு பேரும் ஹோட்டல்ல ஒரே அறையில் தங்குவாங்க அப்போ ஏடாகூடமா ஏதாவது நடந்திருச்சுன்னா அதுக்கப்புறம் அவங்க ரெண்டு பேரையும் பிரிக்கவே முடியாது. இதனால சென்னைக்கு பரணி கூட சண்முகம் நீ தான் போகணும் அப்பதான் நாம நினைச்சது நடக்கும் என்று பாண்டியம்மா மற்றும் சண்முகம் இருவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

Zee tamil Anna

பாக்யம் எடுத்த முடிவு: இதை தூரத்திலிருந்து கவனித்த பாக்யா, ஓஹோ இப்படி கூட விஷயம் இருக்கா, இது எனக்கு தெரியாம போச்சே என்று யோசித்துவிட்டு. சண்முகத்தையும் பரணியையும் ஒன்றாக சென்னைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்கிறாள். சண்முகம் வீட்டிற்கு வந்த, பாக்கியம், சண்முகத்திடம் பரணியை சென்னைக்கு அழைத்து செல்ல சொல்கிறாள், மேலும், பரணி உன் மேல கோவமா இருக்கா, அது குறைய வேண்டும் என்றால், நீ சென்னைக்கு போ என்று சொல்ல,சண்முகமும் அதற்கு ரெடியாகிறான்.

Zee tamil Anna

மாமனாரை அடித்த சண்முகம்: இதையடுத்து, பரணி சென்னைக்கு செல்ல தயாராகிக்கொண்டு இருக்க, அப்போது அங்கு வரும் சௌந்தரபாண்டி,பரணியை நான் தான் கூட்டிட்டு போவேன் என்று சொல்கிறான். அப்போது குறுக்கிடும் பாக்கியம் நீங்க எதுக்கு போறீங்க? என் மகளை சண்முகம் ஊருக்கு கூட்டிக்கிட்டு போகட்டும் என்று சொல்ல, சௌந்திரபாண்டி, இந்த வெறும் பையன் சண்முகத்திற்கு இந்த ஊரிலேயே தெக்க எது வடக்க எதுனு தெரியாது. இவன் மெட்ராஸ்ல போய் என்ன செய்யப்போகிறான். அதெல்லாம் முடியாது, என் பொண்ணுடன் நான் தான் போவேன் என்று சொல்லி தகராறு செய்ய, கடுப்பான சண்முகம், பரணி என் பொண்டாட்டி, அவ கூட நீ எதுக்கு போகணும்? என்று சண்முகம் சௌந்தரபாண்டியிடம் சத்தம் போட இருவருக்கும் இடையே மோதல் உருவாகி ஒருவரை ஒருவர் சரமாரியாக அடித்துக்கொள்ள குடும்பத்தில் உள்ள அனைவரும் அவர்களை விலக்கி விடமுயற்சி செய்தும் இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டே இருக்கின்றனர்.

Zee tamil Anna

இதனால் கடுப்பாகும் பரணி, சண்முகத்தைப் பார்த்து கட்டுன பொண்டாட்டிக்கிட்ட எப்படி நடந்து கொள்ள வேண்டும் என தெரியல, என்னை வெச்சி ரெண்டு பேரும் ஏன் இப்படி அடிச்சிக்கிறீங்க, என்னதான் வேணும் உங்க இரண்டு பேருக்கும். என்ன வெட்டி கூறு போட்டா இரண்டு பேரும் நிம்மதியா இருப்பீங்களா? என்று கோவப்பட்டு கத்த, அப்போது, பேசிய சண்முகம், பரணி எதுக்கு நீ இப்படி வருத்தப்பட்டு பேசுற, நான் உன் கூட மெட்ராசுக்கு வரேன் என்று சொல்ல, வாய மூடு சண்முகம், உனக்கு எல்லாம் கேவலமாவே இல்லையா, மனுஷனாடா நீ, என்ன பத்தி கொஞ்சம் கூட கவலைப்படாமல் உன் இஷ்டத்திற்கு சண்டை போட்டுக்கிட்டு இருக்க, அன்னைக்கு மட்டும் இசக்சி மயக்கம் போட்டு விழவில்லை என்றால், அன்னைக்கே சென்னைக்கு போய் இருப்பேன். என் கூட யாரும் சென்னைக்கு வர வேண்டிய அவசியம் இல்லை , எனக்கு சென்னைக்கு போக வழி தெரியும். நானே போகிறேன் என்று கிளம்பி செல்கிறாள். என்னைக்கும் இல்லாமல் பரணி, சண்முகத்திடம் பேசியதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாத குழப்பத்தில் இருக்கின்றனர்.

Zee tamil Anna

பரணி பேசியதை நினைத்து வருத்தப்பட்டு கொண்டு சண்முகம் அழுத்துக் கொண்டிருக்க, அதை பார்த்த முத்துப்பாண்டி ஆறுதல் கூறி அவரை தேற்ற முயற்சி செய்கிறார். ஆனால், சண்முகமோ என்னுடைய மனைவி இல்லாத வீட்ல நான் ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டேன் அவ எந்த ஊர்ல இருந்தாலும் சரி, எந்த மூலையில் இருந்தாலும் சரி, அவ கூட தான் நான் இருப்பேன் என்று சொல்ல இதை பார்த்த ரத்னா கண்கலங்கி அழுகிறாள். பரணி வீட்ல இருக்கும்போது அவளோட அருமை உங்களுக்கு புரியல, ஆனா இப்ப பரணி இல்லாத போது நீங்க எவ்வளவு வருத்தப்படுறீங்க பார்த்தீங்களா என்று கண் கலங்குகிறாள்.

இதையடுத்து மறுநாள் காலை சண்முகம் சென்னையில் இருக்கும் பரணியை பார்ப்பதற்காக கிளம்ப அப்போது வைகுண்டம் பரணி சென்னையில் எங்கே இருக்கிறாள் என்று தெரியாது, நீ தெரியாத ஊரில் போய் என்ன செய்யப் போகிறாய் என்று கேட்க அது எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். பரணி சென்னையில் இருந்து அமெரிக்கா போகும் வரை அவள் கூட நான் தான் இருப்பேன் என்று சொல்ல குடும்பத்தினர் அனைவரும் சண்முகத்தை வழி அனுப்பி வைக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X