ஆபத்தில் சிக்கிய பரணி.. சரியான நேரத்தில் காப்பாற்றிய சண்முகம்.. அண்ணா சீரியல்!

சென்னை: பரணி சென்னைக்கு செல்ல தயாராகிக்கொண்டு இருக்க, அப்போது அங்கு வரும் சௌந்தரபாண்டி,பரணியை நான் தான் கூட்டிட்டு போவேன் என்று சொல்கிறான். அப்போது குறுக்கிடும் சண்முகம், அதெல்லாம் முடியாது, என் பொண்ணுடன் நான் தான் போவேன் என்று சொல்ல இருவருக்கும் இடையே சண்டை வருகிறது. ஒருவரை ஒருவர் சரமாரியாக அடித்துக்கொள்ள குடும்பத்தில் உள்ள அனைவரும் அவர்களை விலக்கி விடமுயற்சி செய்கின்றனர்.

இதனால் கடுப்பாகும் பரணி, சண்முகத்தைப் பார்த்து கட்டுன பொண்டாட்டிக்கிட்ட எப்படி நடந்துக்க வேண்டும் என தெரியல, என்னை வெச்சி ரெண்டு பேரும் ஏன் இப்படி அடிச்சிக்கிறீங்க, என்னதான் வேணும் உங்க இரண்டு பேருக்கும். சொத்துக்கு அடிச்சிக்கிற மாதிரி அடிச்சிக்கிறீங்க,உனக்கு எல்லாம் கேவலமாவே இல்லையா, மனுஷனாடா நீ, என்ன பத்தி கொஞ்சம் கூட கவலைப்படாமல் உன் இஷ்டத்திற்கு சண்டை போட்டுக்கிட்டு இருக்க, என் கூட யாரும் சென்னைக்கு வர வேண்டிய அவசியம் இல்லை , எனக்கு சென்னைக்கு போக வழி தெரியும். நானே போகிறேன் என்று கிளம்பி செல்கிறாள்.

Zee tamil Anna

தவறை உணர்ந்த சண்முகம்: பரணி பேசியதை நினைத்து வருத்தப்பட்டு கொண்டு சண்முகம் அழுதுக்கொண்டிருக்க, அதை பார்த்த முத்துப்பாண்டி ஆறுதல் கூறி அவரை தேற்ற முயற்சி செய்கிறார். சண்முகம், பரணிக்கு உன் மேல் அவ்வளவு ஆசை, அவ உன்னை விட்டுட்டு போகணும்னு நினைச்சிருந்தா என்னைக்கோ போய் இருப்பா.. அவ உனக்காக தான் போகாமல் இருக்கா அதை நீ தான் புரிந்து கொள்ளணும் என்று சொல்கிறான். பரணிக்கு நல்லா தெரியும், தனியா போனா கண்டிப்பா நீ வருவ என்று, அந்த நம்பிக்கையில் தான் தனியா போய் இருக்கா என்று வைகுண்டமும் சொல்ல அனைத்தையும் கேட்டுக்கொண்டு இருந்த சண்முகம், தான் செய்த தவறை புரிந்து கொள்கிறான். அப்போது, ஆமாம் அப்பா, பரணி அமெரிக்கா போறேனு சொன்னது, அவளுக்கு துணையாக நான் நின்னு, போ னு சொல்லி இருக்கனும். ஆனால் நான் அதை செய்யல அது என் தப்புத்தான். இதையடுத்து, சண்முகம், பரணி எந்த உலகத்துல எந்த மூளைக்கு போனாலும் நான் வருவேன் என்று சொல்லி சென்னைக்கு கிளம்பி செல்கிறான்.

Zee tamil Anna

மன்னிப்பு கேட்ட சண்முகம்: சென்னையில் பரணி,விசா ப்ராசஸுக்காக லைனில் நின்று கொண்டிருக்க சண்முகம் ஆட்டோவில் வந்து இறங்குகிறான். சண்முகத்தை பார்த்த பரணி, இங்க எதுக்கு வந்த? என்று கேட்க என் பொண்டாட்டிக்காக வந்ததாக சொல்கிறான். நான் செய்தது தப்பு தான், நீ படிக்க போகிறேன் என்று சொன்னதும் சரி என்று சொல்லி இருக்கனும், நான் வேறு ஏதோ காரணத்தை மனதில் வைத்துக்கொண்டு வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்னை மன்னித்துவிடு என்று சொல்ல, அதை அனைவரும் பார்த்துக்கொண்டு இருந்ததால், சரி சண்முகம் இதைப்பத்தி அப்புறம் பேசலாம், எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்கிறாள்.

அதன் பின் சண்முகம், பரணியிடம் சாப்பிட்டியா என்று கேட்க அவள் இல்லை என்று சொல்ல, சண்முகம் லைனில் நிற்கும் அத்தனை பேருக்கும் டிபன் வாங்கி வந்து கொடுக்கிறான். சண்முகத்தின் நல்ல மனதைப்பார்த்த அனைவருக்கும், சண்முகத்தை பிடித்து போக அந்த தம்பி தான் இவ்வளவு கெஞ்சுதே என்று அவனுக்கு சப்போர்ட் செய்து பேசுகின்றனர். பரணி உங்களுக்கு இவனை பத்தி தெரியாது, காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேணும்னாலும் செய்வான் என்று சொல்கிறாள். அடுத்து விசா ப்ராசஸ் முடிந்ததும் ரெண்டு பேரும் பீச்சுக்கு செல்கின்றனர்,

Zee tamil Anna

வருத்தப்படும் பரணி: பீச்சில் இருவரும் பேசிக்கொண்டு இருக்க, அப்போது சண்முகம் நீ எங்க வேணா போ.. நான் உனக்கு துணையா இருப்பேன் என்று வாக்கு கொடுக்கிறான். இதைக் கேட்டுக் கொண்டு இருந்த பரணி, சண்முகம் உனக்கு என் மேல அவ்ளோ ஆசையா என்று கேட்க இது ஆசை இல்ல உன் மேல எனக்கு அவ்வளவு அன்பு. ஆனா அத நீதான் புரிஞ்சுக்க மாட்ற, என் தங்கச்சிங்களுக்கு அம்மா இல்ல, அதனால தான், நான் அவங்க மேல அதிகமான அன்பையும், பாசத்தையும் காட்டுறேன். நானும் அவங்க மேல வெறுப்பை காட்டினா அவங்க உடைஞ்சு போய்டுவாங்க, ஆனால், நீ அப்படி இல்ல உனக்கு அம்மா இருக்காங்க அந்த வலி உனக்கு தெரியாது பரணி, இந்த விஷயத்தை நீ புரிஞ்சுக்கணும். ஆனா நீ புரிஞ்சுக்கவே இல்லை என்று சண்முகம் வருத்தப்பட்டு பேசுகிறான்.

நீ சொல்றதெல்லாம் சரிதான் சண்முகம், ஆனால் நானும் அந்த குடும்பத்துல ஒருத்தி தானே, அப்படி இருக்கும்போது அவங்க எல்லார் முன்னாடியும் என்னை நீ அவமானப்படுத்துறதை என்னால தாங்கிக்கவே முடியல என்ற வருத்தப்பட்டு பேசுகிறாள். இதைப்பார்த்த சண்முகம், இங்கே வந்தும் இந்த பேச்சு தானா, அதை விடு பரணி, இப்போ நம்ம ரெண்டு பேரைப்பத்தி மட்டும் பேசு என்று சொல்ல, ஓ கதை அப்படி போகுதா என சொல்லிக்கொண்டு பரணி, கடல் அலையில் ஓடி விளையாட செல்கிறாள். அவளை பிடிக்க சண்முகமும் ஓட இருவரும் கடற்கரையில் காலை நனைத்தபடி இருக்க அப்போது பெரிய அலை பரணியை கீழே தள்ள, அந்த நேரம் பார்த்து சண்முகம் பரணி தாங்கி பிடிக்கிறான். இந்த நேரம் பார்த்து இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்படுகிறது.

மறுபக்கம் சிவபாலன், சௌந்தரபாண்டியனுக்கு சிவபாலன் காபி கொண்டு வந்து கொடுக்க, சௌந்தரபாண்டி அம்மா எங்கே என்று விசாரிக்கிறான். சண்முகம் சென்னைக்கு போய் இருப்பதால், அம்மா அங்கே இருந்துவிட்டார்கள் என்று சொல்ல, இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சௌந்தரபாண்டி, என்னது சென்னைக்கு போய் இருக்கானா, என் மகள் பரணி யாரும் வேண்டாம் நானே தனியா போகிறேன் என்று தானே சொல்லிட்டு போன அதுக்குள்ள, இந்த சண்முகம் அவள் மனசை மாத்த கிளம்பிட்டானா என்று இந்த விஷயத்தை பாண்டியம்மாளிடம் சொல்ல, டேய் தம்பி, அங்கள இப்படியே தனியாவிட்டா, இரண்டு பேருக்கு இடையில் நடக்கக்கூடாது நடந்துவிடும் என்று சொல்கிறாள்

இதைக்கேட்ட சௌந்தரபாண்டி, நானும் என் மகளை பார்க்க சென்னைக்கு செல்கிறேன் என்று கிளம்புகிறான். இதை சிவபாலன் பாக்கியத்திற்கு ஃபோன் போட்டு சொல்ல பாக்கியம் எப்படியாவது இவரை தடுத்துவிட வேண்டும் என சண்முகம் வீட்டில் இருந்து அவசர அவசரமாக கிளம்புகிறாள். இதையடுத்து அண்ணா சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்பதைதெரிந்து கொள்ள உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

FAQs
அண்ணா சீரியலில் சௌந்தரபாண்டியாக நடிக்கும் பூவிலங்கு மோகன் நடித்த முதல் படம் எது தெரியுமா?

அண்ணா சீரியலில் சௌந்தரபாண்டியாக நடிக்கும் பூவிலங்கு மோகன் நடித்த முதல் படம் தண்ணீர் தண்ணீர்

Filmibeat Entertainment

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X