பரணிக்கும் சண்முகத்திற்கும் நடந்த சாந்தி முகூர்த்தம்.. பதறிய சௌந்தரபாண்டி.. அண்ணா சீரியல்!
சென்னை: பரணியைச் தேடி சண்முகம் சென்னைக்கு வருகிறான். அப்போது, பரணி விசாவிற்காக வரிசையில் நிற்க, அவளிடம் என்னை மன்னித்துவிடு பரணி, நீ அமெரிக்கா போகிறேன் என்று சொன்னதும், அதற்கு நான் துணையாக இருந்து இருக்க வேண்டும் நான் தான் தப்பு செய்துவிட்டேன் என்று சொல்லி அவளை சமாதானப்படுத்துகிறான். பின் சாப்பிடாமல் இருப்பதை தெரிந்து கொண்டு, அவளுக்கு மட்டுமில்லாமல் அனைவருக்கும் சாப்பாடு வாங்கிக் கொடுத்து, அங்கிருந்த அனைவர் மனதிலும் இடம் பிடிக்கிறான்.
மேலும், என் தங்கச்சிகளைப்போல நீயும் எனக்கு முக்கியம் தான், அங்களுக்கு அம்மா இல்ல சின்ன வயதில் இருந்தே ரொம்ப கஷ்டப்பட்டாங்க, நானும் அவங்களை வெறுத்துவிட்டாள் அவர்கள் ரொம்ப கஷ்டப்படுவார்கள். இதனால் தான் நான் எப்போதுமே என் தங்கச்சிங்க பக்கம் இருக்கிறேன். நீ இதை புரிந்துகொள்ள வேண்டும் என்கிறான். நீ சொல்றதெல்லாம் சரிதான் சண்முகம், ஆனால், நானும் அந்த குடும்பத்துல ஒருத்தி தானே, அப்படி இருக்கும்போது அவங்க எல்லார் முன்னாடியும் என்னை நீ அவமானப்படுத்துறதை என்னால தாங்கிக்கவே முடியல என்ற வருத்தப்பட்டு பேசுகிறாள். அவளை சமாதானப்படுத்திய சண்முகம், இங்கே வந்தும் இந்த பேச்சு தானா, அதை விடு பரணி, இப்போ நம்ம ரெண்டு பேரைப்பத்தி பேசு என்று சொல்ல, இருவரும், கடல் அலையில் ஓடி விளையாடுகின்றனர். சௌந்தரபாண்டியனுக்கு, பரணியைத் தேடி சண்முகம் சென்னைக்கு போய் இருக்கும் விஷயம் தெரிந்து, நானும் சென்னைக்கு போகிறேன் என்று சொல்ல, பாக்யம், சௌந்தரபாண்டியை தடுத்து நிறுத்துகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், அதன் பிறகு இருவரும் ரிசார்ட்டில் தங்க பரணி தூங்கி கொண்டிருக்க அவளை பக்கத்தில் அமர்ந்து அவளையே ரசித்தப்படி இருக்க, அப்போது சண்முகத்திற்கு, பாக்கியம் சொன்னது நினைவிற்கு வருகிறது. அதாவது, பரணி மட்டும் கர்ப்பமாகிவிட்டால் அவளுக்கு அமெரிக்கா போகின்ற எண்ணமே வராது. இதனால், சென்னையிலே சாந்தி முகூர்த்தத்தை முடித்து விடுங்கள் என்று சொன்னது நினைவுக்கு வர, தூங்கிக் கொண்டிருந்த பரணியிடம் சண்முகம் ஆசையாக பேசுகிறான். அதாவது. அம்மா ஊர்ல இருந்து நான் வரும்போது ஒரு விஷயத்தை சொல்லி அனுப்புனாங்க அதாவது, நீயும் நானும் இதுவரைக்கும் கணவன் மனைவியா,நமக்குள்ள நடக்க வேண்டியது நடந்து நீ கர்ப்பமாகிட்டா அமெரிக்கா போக மாட்ட என்று சொன்னாங்க என்று சொல்ல பரணியும் எனக்கு ஓகே தான் உனக்கு ஓகேவா என்று கேட்க இருவரும் நெருக்கமாக இருக்கின்றனர்.
மறுபக்கம், சௌந்தரபாண்டி தூக்கத்தில்,டேய் வெறும் பயலே, என் பெண்ணு மேல இருந்து கைய எடுடா, டெய் கைய போடாதடா என்று உளறிக்கொண்டு இருக்க, அலண்டு எழுகிறான். கடைசியில் அது கனவு என தெரிய வருகிறது. பாண்டியம்மாளிடம் இந்த விஷயத்தை சொல்ல, அதிர்ச்சி அடையும் பாண்டியம்மா, பரணி மட்டும் கர்ப்பமாகிட்டா, அவ அமெரிக்கா போகமாட்டாள், இரண்டு பேரையும் பிரிக்கவே முடியாது, இதனால்,உடனே சண்முகம் ஊருக்குவரவேண்டும் அதற்கு எதாவது பிளான் போடவேண்டும், இல்லனா நான் நாளைக்கு ஊருக்கு போகிறேன் என்று சொல்கிறான்.

பரணி கர்ப்பமாக வேண்டும்: மறுபக்கம், இசக்கி மற்றும் முத்துப்பாண்டி இருவரும் வீட்டில் ஒன்றாக பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது, இசக்கி, அண்ணா பரணியை விட்டுட்டு இருக்கவே இருக்காது, அண்ணி மட்டும் அமெரிக்கா போனா, சண்முகம் அண்ணன் ரொம்ப கஷ்டப்படும், ஆனால், இந்த பரணி தான் புடிச்ச முயலுக்கு 3 காலுனு நிக்கிறா என்று சொல்கிறாள். மேலும், பரணி மட்டும் கர்ப்பமாகி விட்டால், அமெரிக்கா போகமாட்டாள், இதனால், அவர்களுக்குள் ஏதாவது நல்லது நடந்த நன்றாக இருக்கும் என்று சொல்ல, அப்போது முத்துப்பாண்டி, சண்முகத்திடம் எல்லா விஷயத்தையும் சொல்லித்தான் அனுப்பி இருக்கிறேன் என்று சொல்கிறான். அப்போது, இசக்கி வயிறு வலிப்பதாக சொல்ல, பதறிப்போன முத்துப்பாண்டி, பரணி கொடுத்த மாத்திரையை சாப்பிட்டியா என்று கேட்கிறான். அதெல்லாம் சாப்பிட்டேன், இது சாதாரண வலிதான் நீங்க பயப்படவேண்டாம் என்று சொல்கிறாள்.
குழந்தை நல்லபடியா பிறக்கும்: இல்ல இசக்கி, அப்பா நம்ப குடும்பத்திற்கு முதல் வாரிசு தங்காது என்று சொல்லி இருக்கிறார். அத நெனச்சா தான் எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கு, நம்ம குழந்தைக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று சொல்லி கண்கலங்குகிறான் முத்துப்பாண்டி, அப்போது இசக்கி இத நெனச்சி எல்லாம் பயப்படாதீங்க அண்ணன் தான் சாமிகிட்ட வேண்டிக்கிட்டு எல்லா வேண்டுதலையும் நிறைவேத்திருச்சு அதனால நம்மளுடைய குழந்தை நல்லபடியாக பிறக்கும் அத நெனச்சு நீங்க வருத்தமே படாதீங்க என்கிறார்.

சௌந்தரபாண்டி போட்ட பிளான்: மறுபக்கம், பாக்யம் பரணிக்கு போன் செய்து, உன் அப்பா சென்னை வரணும்னு சொல்லிக்கிட்டு இருக்காரு, நீ நாலு வார்த்தை நல்ல திட்டுனாத்தான் அடங்குவார் என்று சொல்லிவிட்டு, சௌந்தரபாண்டியிடம் போனை கொடுக்கிறாள்.அப்போது, சௌந்தரபாண்டி, சண்முகம் எங்கே இருக்க என்று விசாரிக்க அவள் ஹோட்டலில் இருப்பதாகவும் சண்முகம் வெளியே சென்றிருப்பதாகவும் சொல்கிறாள். சௌந்தரபாண்டி அவன் அங்க வந்ததே உன்னை கர்ப்பமாக்க தான். அப்படி நீ கர்ப்பமாகிட்டா அமெரிக்கா போக முடியாது என்று சொல்ல பரணி அதிர்ச்சி அடைகிறாள். அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் அப்பா, நீங்க உங்க வேலைய மட்டும் பார்த்தா போதும் நீங்க ஒன்னும் இந்த ஊருக்கு வரவேண்டும் என்று அவசியம் கிடையாது நானே பார்த்துக்கொள்கிறேன் என்று கூறுகிறாள். அந்த ஊர்ல சண்முகம் இருந்தா நானும் கண்டிப்பா, ஊருக்கு வருவேன் என்று சொல்ல சௌந்தரபாண்டியை கண்டபடி திட்டிவிட்டு ஃபோனை வைக்கிறாள் பரணி. இதையடுத்து, சௌந்தரபாண்டி, பாண்டியம்மாவிடம்,பரணி என்னை ஊருக்கு வர வேண்டாம் என்றால், அந்த சண்முகமும் நாளைக்கு அங்கே இருந்து வந்து விடுவானாம் என்று சொல்கிறான்.
இதையடுத்து, சண்முகம் மல்லிகை பூவுடன் வருவதைப்பார்த்த பரணி அவனிடம் கோபப்படுகிறாள். நீ அதுக்காக தானே வந்திருக்க என ஆவேசப்பட சண்முகம் புரியாமல் நிற்கிறான். தனியா வந்த எனக்கு தனியாவே ஊருக்கு வர தெரியும்.. நான் அமெரிக்கா போய்படிப்பேன் என்னையாராளும் தடுக்க முடியாது என்ற சொல்லிவிட்டு நீ கிளம்பு என சொல்ல சண்முகமும், என்னடா வந்த வேலை எதுவுமே நடக்கவில்லையே என்ற நினைத்துக்கொண்டு வேறு வழியே இல்லாமல் ஊருக்கு கிளம்புகிறான்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











