தாலியை கழட்டும் ரத்னா.. தங்கைக்காக சண்முகம் எடுத்த முடிவு.. அண்ணா சீரியல்!
சென்னை: சண்முகத்துக்கும் பரணிக்கும் முதலிரவு நடப்பது போல கனவு கண்ட சௌந்தர பாண்டி, பதறி அடிச்சுட்டு எழுகிறார். இதையடுத்து, பரணிக்கு போன் போட்டு சண்முகம் ஊருக்கு வந்ததுக்கு காரணமே, உன்னை கர்பமாக்கத்தான், நீ கர்ப்பம் ஆகிட்டா, அமெரிக்கா போக மாட்டனு அவன் நினைச்சிருக்காரு என்று சொல்ல பரணி சண்முகத்தின் மீது கோபப்படுகிறாள்.
வெளில போயிட்டு வந்த சண்முகம் மல்லி பூவும் அல்வாவும் வாங்கிட்டு வந்ததைப் பார்த்து அதிகமாக கோபப்படுகிறாள். இதுக்கு தான் என் பின்னாடி நீ சுத்திக்கிட்டே வந்தியா என்றும், யார் என்ன சொன்னாலும் நான் அமெரிக்காவுக்கு போய் படிக்கத்தான் செய்வேன், நீ தடுத்தாலும் அது முடியாது. இந்த எண்ணத்தோட தான் என் கூடயே நீ வந்தியா என்று திட்ட, சண்முகம் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி கொண்டு இருக்கிறான். அதெல்லாம் முடியாது இப்பவே நம்ம ரெண்டு பேரும் ஊருக்கு போறோம் என்று சொல்லிட்டு ரெண்டு பேரும் ஊருக்கு கிளம்பி வருகின்றனர். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்

இன்றைய எபிசோடில்: மறுபக்கம் வெங்கடேசன் ஜெயில இருந்து வெளியில் வர, அவருடைய அட்வகேட், உங்களை கஷ்டப்பட்டு தான் பெயிலில் எடுத்து இருக்கேன். அதனால இனிமே நீங்க உங்க பொண்டாட்டி கூட எந்த விதமான பிரச்சினையும் பண்ண கூடாது, மறுபடியும் ஏதாவது பிரச்சனை வந்ததுன்னா, நீங்க திரும்ப உள்ள போயிடுவீங்க. இதனால நீங்க இந்த ஊர்ல இருக்கிறதே நல்லதில்ல வெங்கடேசன். உங்களுடைய சொந்த ஊருக்கே போயிடுங்க என்று வழக்கறிஞர் அட்வைஸ் கொடுக்கிறார்.
ரத்னாவை அசிங்கப்படுத்திய வெங்கடேஷ்: அப்போது ஸ்கூல் வாசலில் அறிவழகன் நிற்பதை பார்த்த, வெங்கடேசனுக்கு ஆத்திரம் தலைக்கு ஏறி, அறிவழகன் கிட்ட போய் வம்பு செய்கிறான். அப்போது அறிவழகன் வெங்கடேசன் சார், நீங்க என்னையும் ரத்னா பத்தியும் தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க எனக்கும் ரத்னாவுக்கும் நல்ல நட்பு தானே தவிர நீங்க நினைக்கிற மாதிரி எந்த வித தவறான உறவும் கிடையாது. தயவு செய்து நீங்க இத புரிஞ்சுக்கோங்க என்று சொல்ல. இதை எல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாத வெங்கடேசன், என் பொண்டாட்டிய என்கிட்ட இருந்து நீ பிரிக்க பார்க்கிறாயா? உன்னை நான் சும்மாவே விடமாட்டேன் என்று அறிவழகனை போட்டு அடிக்கிறான்.

இதனால், பள்ளி வளாகத்தில் கூட்டம் கூடி விடுகிறது. ஆசிரியர்கள் பலர், வெங்கடேஷ் அடிக்காதீங்க, பசங்க எல்லாரும் பாக்குறாங்க,அமைதியாக இருக்க என்று தடுத்தும் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் வெங்கடேஷ் சண்டை போடுகிறான். அப்போது, ஆட்டோவில் இருந்து ரத்னா இறங்கி, வெங்கடேசன் ஏன் இப்படி பண்றீங்க என்று சொல்ல, என்னடி இவனோட சேர்ந்து நீ வாழலாம்னு பாக்குறியா உன்னை நான் சும்மாவே விடமாட்டேன். யாரு கூடயும் உன்னை நான் சேர்ந்து வாழவே விடமாட்டேன். நீ என் பொண்டாட்டி, நான் உனக்கு தாலி கட்டி இருக்கிறேன் என்று ரத்னாவின் கையை பிடித்து இழுத்து தவறாக நடிக்க, அங்கிருந்தவர்கள் அவனை தடுத்து அனுப்புகின்றனர்.
பரணி எடுத்த முடிவு : இதையடுத்து,பதறிப்போன ரத்னா வீட்டுக்கு ஓடி வந்த, ஸ்கூலில் நடந்த விஷயத்தை சொல்ல சென்னையிலிருந்து வந்த சண்முகம் இதை கேட்டு வெங்கடேசை வெட்ட அருவாளோடு போக பரணி தடுத்து நிறுத்தி, அவனே ஒரு வெட்டிப்பய அவனை வெட்டிட்டு நீ ஜெயிலுக்கு போக போறியா. முதலில் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். வெங்கடேஷ் கிட்ட இருந்து ரத்னாவுக்கு விடுதலை வாங்கி கொடுக்கணும், ரத்னா அவன் பொண்டாட்டி என்கிற உரிமை தான் அவனை இப்படி ஆட்டம் போடவைக்கிது. அதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். ரத்னா இனி மேல வெங்கடேஷ் கூட வாழ வேண்டாம் என்று முடிவு செய்த பிறகு, அவன் தட்டுனா தாலி மட்டும் எதுக்கு, உன் கழுத்துல தாலி இருக்கணும். இதனால், பஞ்சாயத்தை கூட்டி இரண்டு பேரையும் பிரிச்சிடு, அவன் கட்டுனா தாலியை அவன் மூச்சிலேயே தூக்கிப்போட என்று சொல்கிறாள். இதைக்கேட்டு ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகிறது.
அப்போது, வைகுண்டம், ஆமாம் சண்முகம், பரணி சொல்வது தான் எனக்கும் சரி என்று படுகிறது என்கிறார். அப்போது, முத்துப்பாண்டி, ஆமாம் மச்சன் பரணி சொல்வது தான் சரி, புருஷன் என்கிற உரிமையை இல்லாத போது, உறவு எங்கிருந்து வரும். இந்த நேரத்தில் நாம புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறான். இதைக்கேட்டு அமைதியான, சண்முகம், இந்த விஷயத்தில் நீ சொல்றதை நான் கேட்கிறேன். ஆனால், எவ்வளவு நீ சொல்றதை கேட்டுக்கிட்டே இருக்க மாட்டேன் என்கிறான்.

நாடகமாடும் வெங்கடேஷ்: இதுமட்டுமில்ல, சண்முகம், நீ பஞ்சாயத்தில் கோபப்பட்ட, அந்த வெங்கடேஷ் நடிச்சி நாடகமாடி காரியத்தை கெடுத்துவிடுவான். இதனால், நீ கோபப்படாமா அமைதியாக இருக்க வேண்டும் என்று சொல்ல, சண்முகமும், சரி என்கிறான். இதையடுத்து, வெங்கடேஷ் வீட்டுக்கு சென்ற பஞ்சாயத்துக்காரர்கள், சண்முகம் உங்க பெயரில் புகார் கொடுத்து இருக்கிறார். இதனால்,பஞ்சாயத்து நடக்க இருக்கு என்று சொல்ல, வெங்கடேஷனின் அம்மா பதற்றப்படுகிறாள்
இதையடுத்து, பஞ்சாயத்து கூட்டப்படுகிறது அப்போது சண்முகம் என்னுடைய தங்கச்சியை திருமணம் செய்து வைத்த நாளிலிருந்து என்ன கொடுமைப்படுத்திக் கொண்டு வருகிறான் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். இதுக்கு மேல என் தங்கச்சி இவன் கூட சேர்ந்து வாழ்ந்தா அது சரிப்பட்டு வராது. அதனால், நீங்களே ஒரு நல்ல முடிவா எடுத்து ரத்னாவையும் வெங்கடேசனையும் பிரிச்சு வச்சுருங்க என்று ஷண்முகம் சொல்கறின். இதை எடுத்து பேசிய, வெங்கடேசன் என்னால ரத்னா இல்லாம வாழவே முடியாது. நான் ரத்னாவை உயிருக்கு உயிரா காதலிக்கிறேன். ரத்னாகாகத்தான் என்னுடைய வேலையும் விட்டுட்டு, சண்முகம் வீட்டோடு மாப்பிள்ளையாக போனேன் என்று சொல்கிறான்
மறுபக்கம், அடிவாங்கி இருக்கும் அறிவழகன் வீட்டுக்கு வரும் கனி, அவன் ரத்னா சிறுவயதில் இருந்து பயன்படுத்திய பொருட்கள் அனைத்தையும் சேகரித்து வைத்திருப்பதை பார்க்கிறாள். அக்காவை அறிவழகனுக்கு பிடிச்சி இருக்கு, இந்த விஷயத்தை அண்ணாவிடம் சொல்லி, இரண்டு பேருக்கும் கல்யாணத்தை பண்ணி வச்சிடலாம் என்று நினைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











