ரத்னாவுக்கும் அறிவழகனுக்கும் கள்ள தொடர்பு.. காரிதுப்பி வெளியே அனுப்பிய பெண்.. அண்ணா சீரியல்!
சென்னை: பள்ளிக்கூடத்தில் வெங்கடேசன் அறிவழகனை அடித்துக் கொண்டிருந்த நிலையில், அப்போது அங்கு வந்த ரத்னா, அவனை தடுத்து நிறுத்த, வெங்கடேசன் என்னடி நீ என்னுடைய பொண்டாட்டி உன்னோட சேர்ந்து வாழலாம்னு நினைக்கிறாயா? அது ஒரு காலமும் நான் நடக்க விடவே மாட்டேன் என்று சொல்லி கையை பிடித்து இழுத்து வம்பு செய்கிறான்.
அதைத்தொடர்ந்து வீட்டுக்கு வந்த, ரத்னா, ஷண்முகத்திடம் இந்த விஷயத்தை சொல்லி கண்கலங்குகிறாள். அப்போது சண்முகம், அருவாளை எடுத்து அவனை வெட்டுவதற்காக கிளம்ப அவனை தடுக்கும் பரணி, இவனை இப்படியா விட்டா சரியா வராது. அதனால நாம இவன பஞ்சாயத்தை கூட்டி ரெண்டு பேரையும் பிரிச்சுவிட்டுற வேண்டியதுதான். ரத்னா, வெங்கடேஷ் கட்டின தாலியை கழட்டி அவன் மூஞ்சில கழட்டி எறிஞ்சாதான் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு வரும் என்று சொல்கிறார்கள். இதை எடுத்து பஞ்சாயத்தை கூட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கிறது.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், சண்முகம் வீட்டிற்கு வரும் அறிவழகன் ரத்னாவிடம் கடிதத்தை கொடுக்கிறான். நான், பள்ளியில் இருந்து விலகிக் கொள்கிறேன் இது என்னுடைய ராஜினாமா கடிதம் என்று கொடுக்கிறான். இதைப் பார்த்த, ரத்னா அதிர்ச்சி அடைந்து என்ன இதெல்லாம் என்று கேட்க. ஆமா, மேடம், உங்களுக்கும் எனக்கும் தவறான உறவு இருப்பதாக அனைவரும் பேசுகிறார்கள். இதனால் உங்களுடைய வாழ்க்கையும் வீணாப்போச்சு. அதற்காக தான் நான் இந்த வேலையை விட்டுவிட்டு வேறு ஊருக்கு சென்று விடலாம் என்று இருக்கிறேன் என்று சொல்ல அங்கு இருந்த வைகுண்டம், வாத்தியார் வேலையை விடுறியா? ஊருல ஆயிரம் பேர் ஆயிரம் விதமாக பேசுவாங்க. அதுக்காக நீ இந்த வாத்தியார் வேலையை விட்டுட்டு போறது சரியில்லை என்று சொல்கிறான். இல்ல, நான் ரத்தினவோட வாழ்க்கை நல்லா இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முடிவை எடுத்தேன் என்கிறான்.

ரத்னாவை காதலிக்கும் அறிவு: அறிவழகனை எவ்வளவு சமாதானம் செய்தும், தனது முடிவில் உறுதியாக இருந்த அறிவழகன். ஒரு பெட்டியை இசக்கி மற்றும் கனியிடம் கொடுத்து. இதில், உங்க அக்கா ரத்னா, சின்ன வயதில் இருந்து பயன்படுத்திய அனைத்து பொருட்களும் இருக்கிறது. சிறுவயதிலிருந்தே நான் ரத்னாவை காதலித்து வருகிறேன். ஆனால், ரத்னாவிற்கு திருமணமாகிவிட்டது என்று தெரிந்ததும். என்னுடைய ஆசையை என் மனதிற்குள்ளே போட்டு புதைத்துக்கொண்டேன். இதற்கு, மேலும் இந்த பொருட்கள் எல்லாம் என்னிடம் இருந்தால் அது மிகப்பெரிய பிரச்சினையாகிவிடும். அதனால் இந்த பொருளை நான் கொடுத்துவிட்டு செல்கிறேன் என்கிறான். இதைப்பார்த்து இசக்கி,கனி இருவரும் அறிவழகனின் காதலை நினைத்து பெருமைப்படுகின்றனர்.
கனியும் இசக்கியும் இந்த விஷயத்தை சண்முகத்திடம் சொல்ல சண்முகம் ரத்னாவிற்கு அறிவழகனுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால் என்னவென்று முடிவெடுக்கிறான். இந்த விஷயத்தை பரணியிடம் சொல்ல அவளும் சரியான முடிவுதான். இந்த விஷயத்தை நான் ரத்னாவிடம் சொன்னா, நான் தான் வாழ்க்கையை கெடுத்துட்ட மாதிரி, உன் தங்கச்சியும் பேசுவ அதனால நீயே ஏதாவது ஒரு முடிவு பண்ணிக்கோ என்று சொல்ல. மறுநாள் காலை சண்முகம், ரத்னாவை ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்கின்றான்.

ரத்னாவிற்கும் அறிவுக்கும் தொடர்பு: அதாவது ரத்னா தனக்கு கல்யாணம் பேச தான் அழைத்து செல்கிறார்கள் என தெரியாமல் வருகிறாள். இங்கே அறிவழகன் குடும்பத்தினர் அவனுக்கு பெண் பார்ப்பதற்காக கிளம்பி கொண்டு இருக்கின்றனர். இதுதெரியாமல், சண்முகம் அங்கே செல்ல, அறிவழகனின் குடும்பத்தினர். பெண் பார்க்க நீங்களும் வாங்க போகலாம் என்றுசொல்கின்றனர். இதை கேட்டு சண்முகம் அதிர்ச்சி அடைந்து. வேறு வழியே இல்லாமல், அவர்களுடன் செல்ல வேண்டிய சூழல் உருவாகிறது, பெண் பார்க்க போன இடத்தில அறிவழகன் பக்கத்தில் ரத்னா உட்காருகிறாள். அந்த பெண்ணும் அறிவழகனை பிடித்திருப்பதாக சொல்கிறாள். இதனால் சண்முகம் மற்றும் பரணி ஏமாற்றம் அடைகின்றனர்.
இந்த நேரத்தில் அறிவழகனுக்கு ஒரு போன்வருகிறது. அதில், பேசும் வெங்கடேஷ், உன் வீட்டுக்கு பெண் பார்க்க வந்து இருக்கும் மாப்பிள்ளை ரொம்ப மோசமானவன், அவனுக்கும் ரத்னாவுக்கும் தொடர்பு இருக்கிறது. இப்போ கூட அவன் அந்த பொண்ணோட தான் பொண்ணு பார்க்க வந்திருக்கான். நீ என் பேச்சை நம்பவில்லை என்றால், நான் உனக்கு ஒரு வீடியோவை அனுப்புகிறேன். அதைப்பார்த்தாவது இப்படிப்பட்ட மாப்பிள்ளை உனக்கு வேணுமா என்று நீயே முடிவு செய்து கொள் என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறான். இதையடுத்து, வீடியோவை பார்த்து அந்த பெண் அதிர்ச்சி அடைகிறாள்.

அசிங்கப்படுத்திய பெண்:இதைத்தொடர்ந்து, அறிவழகனிடம் வந்த, அந்த பெண், ரத்னாவை பார்த்து இது யார் என்று கேட்க. அறிவழகன், இவங்கதான் என்னுடைய பள்ளி தலைமை ஆசிரியர்,அது மட்டுமல்லாமல் நாங்கள் இருவரும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள் என்று சொல்ல, மேலும் கடுப்பான அந்தப் பெண். ஓ அதனாலதான் ரெண்டு பேரும் ராத்திரியில தனியா இருந்தீங்களா? என்ற தவறாக பேசி விட்டு, வீடியோவை காட்டுகிறாள். இதை பார்த்து அதிர்ந்து போன அறிவழகனின் அம்மா, என்னுடைய மகனைப் பற்றி எங்களுக்கு நன்றாக தெரியும். இந்த பிரச்சனை நடக்கும் போதே, அறிவழகன் என்னிடம் எல்லா விஷயத்தையும் சொல்லிவிட்டான். ஊரில் நாலு பேர் நாலு விதமாகத்தான் பேசுவார்கள், இதையெல்லாம் இப்போ பேசுனா, சரியாக வராது என்று சொல்கிறாள்.
உடனே அந்த பெண், நாலு பேர் நாலு விதமாகத்தான் பேசுவாங்க. ஆனால், வீடியோ பொய் சொல்லாது என்று அந்த வீடியோவை எடுத்து காட்டுகிறாள். உடனே அறிவழகனின் அம்மா, இவங்க இரண்டு பேர் மேலயும் எந்த தப்பும் இல்ல, ரத்னாவின் புருஷன் தான், இந்த தப்பான வேலையை பார்த்தான். அவன் தான் இந்த வீடியோ உனக்குஅ அனுப்பி இந்த கல்யாணத்தை நிறுத்தப்பார்க்கிறான் என்று சொல்லி. அதை காதில் வாங்கிக் கொள்ளாத அந்த பெண், இந்த சம்பந்தமே வேண்டாம் என்கிறான். இதையடுத்து,இந்த சம்பந்தமே நின்று போய் விடுகிறது.
வருத்தப்படும் ரத்னா: பின் ரத்னா என்னால் தான் அறிவழகனுக்கு திருமணம் நின்றுவிட்டது என வருத்தப்படுகிறாள், அதே போல் அறிவழகன் ஏற்கனவே எனக்கு ஒரு வாழ்க்கை அமைந்தால் தான், ரத்னா வாழ்க்கை நல்லபடியாக இருக்கும் என பேசியதை வைத்து பரணி மற்றும் சண்முகம் இருவரும் சேர்ந்து அறிவழகன் ரத்னாவுக்கு திருமணம் செய்து வைத்து விடலாம் என முடிவுக்கு வருகின்றனர். அதற்கு முன் வெங்கடேஷிடம் இருந்து விவாகரத்து வாங்க ஏற்பாடு செய்ய திட்டமிடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











