தாலியை கழட்டிய ரத்னா.. ரத்த வெள்ளத்தில் சரிந்த சண்முகம்.. அண்ணா சீரியல்!

சென்னை: சண்முகம் மற்றும் முத்துப்பாண்டி இருவரும் பஞ்சாயத்திற்கு வர சொல்லி வெங்கடேஷ் வீட்டிற்கு வருகின்றனர். உள்ளே செல்லும், முத்துப்பாண்டி நீ, உள்ளே வர வேண்டாம் நான் போய் சொல்லிட்டு வரேன் என்று சண்முகத்திடம் சொல்ல, சண்முகம் நான் ஏன் வர கூடாது என்று கேட்க நீ வந்தா கையை நீட்டிடுவ, வேண்டாம் என்று சொல்கிறான். இதையடுத்து, முத்துப்பாண்டி பஞ்சாயத்துக்கு அழைக்கிறான். வெங்கடேஷின் அப்பா அம்மா நாங்க எதுக்கு பஞ்சாயத்துக்கு வரணும் என சத்தம் போடுகின்றனர்.

பின், வெங்கடேஷ் கையில் கட்டையுடன் முத்துபாண்டியை அடிக்க வர முத்துப்பாண்டி கட்டையை பிடித்து நான் இப்போ போலீசா வரல, சண்முகம் மச்சானா வந்திருக்கேன் என்று சொல்கிறான். உள்ளே நடக்கும் பிரச்சனை தெரிந்து கொண்ட சண்முகம், உள்ளே புகுந்து அவனை அடித்துவிட்டு, ஏல யார் மச்சான் மேல கையே வைக்கிற, இந்த மக்கு வாத்திக்கு அடிச்சி சொன்னதான் புரியும், நாளைக்கு பஞ்சாயத்து வரணும், இல்லனா உன் பிணம் சூடுகாட்டில் தான் இருக்கும் என்று சொல்லி விட்டு செல்கிறான். இதையடுத்து, சண்முகம் வீட்டில் அனைவரும் பஞ்சாயத்துக்கு கிளம்ப சண்முகம் கத்தியை எடுத்துக்கொள்கிறேன். அதே போல் முத்துபாண்டியும் துப்பாக்கியை எடுத்து கொண்டு கிளம்புகிறான் இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், பாண்டியம்மாளை பேருந்தில் ஊருக்கு அனுப்பிவைத்துவிட்டு வீட்டிற்கு ஓடி வரும் சனியன், சௌந்தரபாண்டியிடம், பஞ்சாயத்தில் அனைவரும் கூடி விட்டார்கள். ஆனால் இந்த. வெங்கடேசனை தான் காணவில்லை என்று சொல்கிறான். பஞ்சாயத்து எல்லாரையும் கூப்பிட்டாங்க என்னை மட்டும் யாருமே கூப்பிடல, இத பாக்குறதுக்கு எங்க அக்கா பாண்டியம்மாளுக்குத்தான் கொடுத்து வைக்கலை என்று பேசிக் கொண்டிருக்க. அப்போது வெங்கடேசனிடம் இருந்து சௌந்தரபாண்டியனுக்கு போன் வருகிறது. போனை எடுத்த, சௌந்தரபாண்டி, நீ இன்னும் பஞ்சாயத்துக்கு போகலையா என்று கேட்க, பஞ்சாயத்துக்கு போக எனக்கு பயமாக இருக்கிறது. நீங்கள் சொல்லித்தான் நான் ரத்னாவிற்கும் அறிவழகனுக்கும் தொடர்பு இருக்கிறது என்று ஒரு நாடகத்தை ஆடினேன். கடைசியில் இப்படி ஒரு நிலைமை ஆகிவிட்டது.

சௌந்தரபாண்டி கொடுத்த ஐடியா: உங்கள் மகன் முத்து பாண்டியும் சண்முகமும் என்னை அடித்து பஞ்சாயத்திற்கு வர சொல்லி இருக்கிறார்கள் நான் இப்போது தனி ஆளாக கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன். என்ன செய்வது என்றே தெரியவில்லை என்று சொல்கிறான். அப்போது, சௌந்தர பாண்டியன், ஏலே வெங்கடேஷ் நான் இருக்கும் போது எதுக்கு நீ பயப்பட வேண்டும். கவலைப்படாதே, பணத்தை பத்தி யோசிக்காமல் அடி ஆட்களை கூட்டிக்கிட்டு போ என்கிறான். சரி அப்படியே செய்து விடுகிறேன். ஆனால், பஞ்சாயத்துக்கு நீங்க வந்தீங்கன்னா எனக்கு கொஞ்சம் தைரியமாக இருக்கும். என் பக்கத்துல இருந்து பேசுறதுக்கு யாருமே இல்லை என்று சொல்ல நான், வராமல் எப்படி பஞ்சாயத்து நடக்கும்போது கண்டிப்பா வருகிறேன் என்று சொல்கிறார் சௌந்தரபாண்டி.

Zee tamil Anna

பாதுகாப்பு இல்ல: வெங்கடேஷ் பஞ்சாயத்து அடி ஆட்களுடன் வர, இதைப்பார்த்த பரணி, சண்முகம் அவன் வேண்டும் என்றே அடி ஆட்களை அழைத்து வந்து இருக்கிறான். தேவையில்லாமல் ஏதாவது பிரச்சனை செய்வான் நீ தான், அமைதியாக இருக்க வேண்டும் என்று சொல்கிறாள். இதோ பாரு பரணி, ஓரளவுக்குத்தான் என்னால பொருத்துக்க முடியும் மீண்டும் என்கிட்ட வம்புக்கு வந்தா, நான் சும்மா இருக்க மாட்டேன் என்கிறான். அப்போது, பஞ்சாயத்துக்கு எதுக்கு அடி ஆட்களுடன் வந்தீங்க என்று கேட்க, தனக்கு பாதுகாப்பு இல்லை அதற்காகத்தான் வந்தேன் என்று சொல்கிறான் வெங்கடேஷ்.

அப்போது, சண்முகம், அவன் என்ன வேண்டுமானலும் செய்யட்டும், என் தங்கச்சி வாழ்க்கை சந்தோஷமா இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். நான் காதலிச்சவனையே கல்யாணம் செய்து வைத்தேன். ஆனால், கல்யாணம் ஆனதிலிருந்து அவன் பண்ற கொடுமை தாங்க முடியல, இதனால என் தங்கச்சி வாழ்க்கையே வேணான்னு தற்கொலை செய்துக்க போனா, இதுக்கு மேல, ரத்னா இவன் கூட வாழ முடியாது பேசாம அத்து விடுங்கள் என்று சொல்கிறான்.

Zee tamil Anna

தகுதியே இல்ல: அதைத்தொடர்ந்து பேசிய வெங்கடேசன், நானும் என் மனைவி ரத்னாவும் காதலிச்சு தான் திருமணம் செய்து கொண்டேம். ஆனால், கல்யாணம் ஆனதிலிருந்து எங்க ரெண்டு பேரையும் பிரித்து வைத்து இருக்கிறார்கள் என்கிறான். யாரும் புருஷன் பொண்டாட்டியை பிரிக்கணும்னு ஆசைப்பட மாட்டாங்க என பஞ்சாயத்தார் சொல்கின்றனர். அதை தொடர்ந்து, பரணி, ரத்னா ஆசைப்பட்டு அமைத்து கொண்ட வாழ்க்கை தான் இது.. ஆனால் கல்யாணத்துக்கு பிறகு ஒரு பொண்டாட்டியை எப்படி பார்த்துக்கணுமோ அப்படி பார்த்துக்கிற தகுதி இவன் கிட்ட இல்லை. ரத்னா வாழ்ந்த வாழ்க்கை போதும், அந்த தாலியை கழட்டி வெற்றிலை மேல் வைக்க சொல்கிறாள்.

இன்னும் முதல் இரவு நடக்கல: அப்போது, பஞ்சாயத்தார்கள் ரத்னாவின் முடிவை கேட்க, ரத்னா இவன் பொண்டாட்டியை மதிக்க தெரியாதவன். எந்த ஒரு புருசனும், செய்யக்கூடாத வேலையை இவன் செய்தான் இவன்கூட, வாழவே எனக்கு விருப்பம் இல்லை. இவனுக்கும் எனக்கும் உறவுனு சொல்ல இந்த தாலி தான் காரணமா இருக்குனா அந்த தாலி எனக்கு தேவை இல்லை என சொல்லி தாலியை கழட்டும் நேரத்தில், ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ், எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க, எனக்கும் ரத்னாவிற்கும் இதுவரைக்கும் முதல் இரவே நடக்கவே இல்லை. அதனால் தான் இப்படி பேசுகிறாள். அவளுக்கும் எனக்கும் முதல் இரவு நடக்கட்டும் அதுக்கு அப்புறம் அவ என்னை வேண்டாம் என்று சொல்லட்டும் என்று சொல்லிக்கொண்டே, ரத்னாவின் கையை பிடித்து இழுக்க வருகிறான்.

Zee tamil Anna

சரிந்த வெங்கடேஷ்: அப்போது, சண்முகம் வெங்கடேஷினை மிதித்து கீழே தள்ளி, என்ன தைரியம் இருந்தால் என் கண் முன்னாடியே ரத்னா மேல கைய வைப்ப. இன்னைக்கு நீ செத்தடா என்று மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்துக்கொண்டு குத்த வருகிறான். அப்போது, அடி ஆட்கள் சண்முகத்தை தடுத்து நிறுத்தி அவனை அடி வெளுக்கிறார்கள். அப்போது சண்முகம் வைத்து இருந்த கத்தி கீழே விழுந்தவிட, அதை வெங்கடேஷ் எடுத்துக்கொண்டு சண்முகத்தை குத்த வருகிறான். சௌந்தரபாண்டியன் சண்முகத்தை பிடித்துக்கொள்கிறான். இதைப்பார்த்த முத்துப்பாண்டி அதை தடுக்க ஓடி வருகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X