ரத்னா கழுத்தில் கத்தி.. வெங்கடேஷின் மோசமான முகம்.. அடுத்து நடக்கப்போவது என்ன? அண்ணா சீரியல்!

சென்னை: ஒட்டுமொத்த ஊரும் சேர்ந்து ரத்னாவிற்கும் அறிவழகனுக்கும் தொடர்பு இருக்கிறது என்று சொன்னதால் அவமானத்தில் துவண்டு போன ரத்னா என்ன செய்வது என்று தெரியாமல் அழுதுக்கொண்டே இருக்கிறாள். வீட்டில் இருப்பவர்கள் எவ்வளவு ஆறுதல் சொல்லியும் சாப்பிடாமல் இருக்க அவளால் எல்லோருமே சாப்பிடாமல் இருக்கின்றனர். அதே நேரம் வெங்கடேஷ் காய்ச்சலுக்காக கொடுத்த மாத்திரையை போடாமல் இருப்பதை கவனித்த பரணி. நீங்க அவனிடம் மாத்திரை சாப்பிடீங்களா? என்று கேட்க அதை போட்டு தான் எனக்கு உடம்பு சரியாச்சு என்று பொய் சொல்கிறான். ஆனால், மாத்திரை இருப்பதை கவனித்த பரணிக்கு அவன் மீது சந்தேகம் வருகிறது.

அந்த நேரம் பார்த்து வெங்கடேஷ் வெளியில் செல்ல, பரணியும் அவனை பின் தொடர்ந்து செல்கிறாள். அப்போது வெங்கடேஷ், முகத்தை மூடியபடி சரக்கு வாங்கி கொண்டு அந்த டீ கடையில் வேலை செய்தவனை சந்திக்கிறான். இதைப்பார்த்த பரணிக்கு இவை அனைத்தும் வெங்கடேஷின் வேலை என்பது தெரிய வருகிறது. உடனே சண்முகம் மற்றும் முத்துபாண்டிக்கு போன் செய்து விஷயத்தை சொல்லிவிட்டு, வெங்கடேஷை வெளியே விடாதீங்க என்று சொல்கிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Zee tamil Anna

அண்ணா சீரியல் : இன்றைய எபிசோடில், வெங்கடேஷ் வீட்டில் அனைவரும் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து வீட்டிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறான். அப்போது, வீரா பெரிய அருவாளை வெங்கடேசனின் கழுத்தில் வைத்து எங்கடா ஓட பாக்குற என்று கத்துகிறாள். இதையடுத்து, வைகுண்டம்,ரத்னா, இசக்கி என அனைவரும் வெங்கடேசனை பிடித்து அடிக்கின்றனர். அப்போது, கத்தியை பிடிங்கி ரத்னாவின் கழுத்தில் வைத்து, இவ என் பொண்டாட்டி இவளை வேறு யார் கூடவும் வாழ விட மாட்டேன், இவ வாழ்ந்தாலும் என்கூடத்தான் வாழணும் செத்தாலும் என்கூடத்தான் சாகணும் என்று சொல்ல வீட்டில் இருக்கும் அனைவரும் ரத்னாவை விட்டுவிடு என்று கத்துகின்றனர். இப்போது இசக்கி, டேய் பொறுக்கி பயலே, இந்த விஷயம் மட்டும் என் அண்ணணுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான்., உன்னை கொன்னுவிடுவார் என்று சொல்ல, அவன் ஆம்பளையா இருந்தா வர சொல் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ரத்னாவை கடத்தி செல்கிறான்.

Zee tamil Anna

நடக்கப்போவது என்ன: மறுபக்கம், பரணி, நீ வீட்டுக்கு போய் உன் தங்கச்சியை கூட்டிட்டு வா.. நான் ஸ்கூல்ல உண்மையை நிரூபிப்பதற்காக அனைவரையும் கூட்டிக்கிட்டு வருகிறேன் என்று சொல்கிறாள். அந்த நேரம் வைகுண்டத்திடம் இருந்து போன் வர, அவர், வெங்கடேஷன் ரத்னாவின் கழுத்தில் கத்தியை காட்டி கடத்தி சென்றுவிட்டான் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பின் சண்முகம், வெங்கடேஷ் மற்றும் ரத்னாவை தேடி வருகிறான். மறுபக்கம் பரணி மற்றும் அறிவழகன் பள்ளிக்கூடத்தில் ஊர் மக்களை கூட்டி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Zee tamil Anna

ரத்னாவை கடத்தி சென்ற வெங்கடேஷன் அவளை, ஒரு பழைய அரண்மனையில் அடைத்து வைத்து இருக்கிறான். மேலும், நான் உன் புருஷன் டி, நான் உன்னை தொடக்கூடாதா என வெங்கடேஷ் அவளிடம் தவறாக நடக்க முயற்சி செய்ய ஷண்முகம் அதிரடி என்ட்ரி கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Zee tamil Anna

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X