தங்கையின் மானத்தை காப்பாற்றிய சண்முகம்.. கடைசி நேரத்தில் நடந்தது என்ன.. அண்ணா சீரியல்!

சென்னை: ரத்னா ஊர் முன்னாடி அவமானப்படுவதற்கு காரணம் வெங்கடேஷ் தான் என்பதை தெரிந்து கொண்ட பரணி,. சண்முகத்திடம் விஷயத்தை சொல்ல, வெங்கடேஷ் வீட்டிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறான். அப்போது, வீரா பெரிய அருவாளை வெங்கடேசனின் கழுத்தில் வைத்து எங்கடா ஓட பாக்குற என்று கத்துகிறாள். இதையடுத்து, வைகுண்டம், ரத்னா, இசக்கி என அனைவரும் வெங்கடேசனை பிடித்து அடிக்கின்றனர். அப்போது, கத்தியை பிடுங்கி ரத்னாவின் கழுத்தில் வைத்து, இவ என் பொண்டாட்டி இவ வாழ்ந்தாலும் என்கூடத்தான் வாழணும் செத்தாலும் என்கூடத்தான் சாகணும் என்று சொல்ல வீட்டில் இருக்கும் அனைவரும் ரத்னாவை விட்டுவிடு என்று கத்துகின்றனர்.

ரத்னாவை கடத்தி சென்ற வெங்கடேசன் அவளை, ஒரு பழைய அரண்மனையில் அடைத்து வைத்து, நான் உன் புருஷன் டி, நான் உன்னை தொடக்கூடாதா என வெங்கடேஷ் அவளிடம் தவறாக நடக்க முயற்சி செய்ய ஷண்முகம் அதிரடி என்ட்ரி கொடுக்கிறான். இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்

Zee tamil Anna

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், ஷண்முகம் சரியான நேரத்தில் என்ட்ரி கொடுத்து ரத்னாவை காப்பாறுகிறான். வெங்கடேஷ் நான் இருக்கிற இடம் உங்களுக்கு எப்படி தெரிந்தது என்று கேள்வி கேட்க அடேய் முட்டாப்பயலே உன் போன் ஆன்ல தானே இருக்கு. அதை வைத்து கண்டு பிடிச்சாச்சு என்று ஷாக் கொடுக்கிறான். இதையடுத்து ஷண்முகத்திற்கும் வெங்கடேசனுக்கும் இடையே கடுமையாக சண்டை நடக்கிறது. அப்போது, என் தங்கச்சியவா ஊர் முன்னாடி அவமானப்படுத்தன என்று கத்திக்கொண்டே, ஒரு பெரிய பொருளை தூக்கி வெங்கடேஷ் தலையில் போட்டு கொல்ல முயற்சி செய்ய, அந்த நேரம் பார்த்து ரத்னா, ஓடி வந்து தடுத்து நிறுத்திவிட்டு, அவன் இங்க சாக கூடாது, ஊர் மக்கள் முன்னாடி உண்மையை சொல்லிட்டு சாகனும் என்று சொல்கிறாள்.

தங்கையின் மானத்தை காப்பாற்றிய சண்முகம்: மறுபக்கம் பள்ளிக்கூடத்தில், கொடி கம்பத்தில் டீ கடையில் வேலை செய்பவனை கட்டி வைத்திருக்க சௌந்தரபாண்டி இவனை எதுக்கு கட்டி வச்சிருக்காங்க? என்று கேட்க சனியன் ஐய்யா, பாதி பேரை கண்டுபிடிச்சாச்சு. வெங்கடேஷ் மாட்டிக்கிட்டா உங்க கதை அவ்வளவு தான் என்று சொல்கிறான். அப்போது, சௌந்தரபாண்டி அதையெல்லாம் கண்டுபிடிக்க முடியாது என்று சொல்லிக் கொண்டு இருக்க, சண்முகம், வெங்கடேஷுடன் என்ட்ரி தர சௌந்தரபாண்டி ஷாக் ஆகிறான். அவனை கொடி கம்பத்தில் கட்டி வைத்து உண்மையை சொல்ல வைத்து ரத்னாவின் கௌரவத்தை காப்பாறுகிறான்.

குடும்பத்தில் வெடித்த பிரச்சனை: இதையடுத்து ஊர் மக்கள் ரத்னாவிடம் மன்னிப்பு கேட்க ஷண்முகம் மீண்டும் ஸ்கூலை திறந்து ரத்னாவை கரஸ்பாண்டண்ட் சேரில் உட்கார வைக்கிறான். வெங்கடேஷ் மீது கேஸ் போடப்பட்டு இருப்பதாகவும் அவனுக்கு கொடுக்க வேண்டிய தண்டனையை கோர்ட் கொடுக்கும் என்று சொல்கிறான். அடுத்து ரத்னா வீட்டிற்கு வர தங்கைகள் தண்ணீர் கொடுத்து அந்த வெங்கடேஷ் மாட்ட பரணி தான் காரணம் என்று பெருமையாக சொல்ல, அப்போது குறுக்கிட்ட ரத்னா நான் இப்படி அவமானப்படவும் பரணி தான் காரணம், பரணி தான் அவனை இந்த வீட்டிற்கு அழைத்து வந்தாள் என்று ஷாக் கொடுக்கிறாள் ரத்னா. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X