சண்முகத்தை வெறுத்த பரணி.. கண்ணீருடன் வீட்டை விட்டு வெளியேறினார்.. அண்ணா சீரியல்!
சென்னை: என் தங்கை எந்த தவறும் செய்து இருக்க மாட்டாள் என்பதை நிரூபிக்க போராடிய சண்முகம், வெங்கடேஷனை அடித்த உதைத்து, ஊர் மக்கள் முன் கொண்டு வந்து நிறுத்துகிறான். அப்போது, வெங்கடேஷ், ரத்னா எந்த தவறும் செய்யவில்லை, நான் தான் டீயில் மயக்க மருந்து கொடுத்தேன் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதையடுத்து, ஊர் மக்கள் அனைவரும் ரத்னாவிடம் மன்னிப்பு கேட்க ஷண்முகம் மீண்டும் ஸ்கூலை திறந்து ரத்னாவை கரஸ்பாண்டண்ட் சேரில் உட்கார வைக்கிறான்.
வெங்கடேஷ் மீது கேஸ் போடப்பட்டு இருப்பதாகவும் அவனுக்கு கொடுக்க வேண்டிய தண்டனையை கோர்ட் கொடுக்கும் என்று சொல்கிறான். அடுத்து ரத்னா வீட்டிற்கு வர தங்கைகள் தண்ணீர் கொடுத்து அந்த வெங்கடேஷ் மாட்ட பரணி தான் காரணம் என்று பெருமையாக சொல்ல, அப்போது குறுக்கிட்ட ரத்னா நான் இப்படி அவமானப்பட்டு நின்றதற்கு காரணம் பரணி தான். பரணி தான் அவனை இந்த வீட்டிற்கு அழைத்து வந்தாள் என்று ஷாக் கொடுக்கிறாள் ரத்னா.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், ரத்னா இப்படி சொல்வதை கேட்ட சண்முகம், அவ சொல்றது சரி தானே.. என் தங்கச்சி இப்படி அவமானப்பட்டு நிற்க நீ தான் காரணம், நீ தானே வெங்கடேஷை இந்த வீட்டிற்குள் கூட்டிட்டு வந்த என்று சொல்ல பரணி வருத்தப்பட்டு ரூமுக்குள் சென்று விடுகிறாள். அடுத்து அனைவரும் சாப்பிட உட்கார பரணியையும் சாப்பிட கூப்பிட அவள் வேண்டாம் என்று சொல்லி விட மற்றவர்களும் சாப்பிட மனமில்லாமல் எழுந்து கொள்கின்றனர். அடுத்து வெளியே போன சண்முகம் வீட்டிற்கு வருகிறான். அப்போது ரத்னா சண்முகத்திற்கு சாப்பாடு போடும் போது, பரணியும் இன்னும் சாப்பிடல என்று சொல்கிறாள். அவ ஏன் இப்படி செய்கிறாள் எனக்கும் சாப்பாடு வேண்டாம் என்று எழுந்து சென்று விடுகிறான்.
கோவத்தில் பரணி எடுத்த முடிவு: ரூமுக்கு வந்த சண்முகம் ஏன் சாப்பிடல என்று கேட்க பரணி வேண்டாம் என்று சொல்கிறாள். வெங்கடேஷை இந்த வீட்டிற்குள் கூட்டிட்டு வர வேண்டாம்னு எல்லாரும் சொல்லியும் நீ தானே கூட்டிட்டு வந்த என்று சொல்ல பரணி முத்துபாண்டியையும் நான் தான் கூட்டிட்டு வந்தேன், இன்னைக்கு அவனும் இசக்கியும் நல்லா வாழலையா? அதே மாதிரி ரத்னா வாழ்க்கையும் நல்லா இருக்கனும்னு தானே அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தேன். அது உனக்கு புரியலையா என்று ஆதங்கத்தை கொட்டுகிறாள். ஏற்கனவே, உன் தங்கச்சி வாழ்க்கை சரியில்லாமல் போனதுக்கு நான் தான் காரணம் என்று சொன்னால் இந்த வீட்டை விட்டு போய் விடுவேன் என்று சொல்லியதால் பரணி தனது பெட்டியை தூக்கி கொண்டு கிளம்புகிறாள்.
வீட்டை விட்டு வெளியேறி பரணி: அப்போது, சண்முகம், என்ன பரணி பைத்தியம் மாதிரி, இப்போ நீ கோவத்தில் பேசுற, எதுவாக இருந்தாலும், காலையில் பேசிக்கலாம் என்று தடுக்க,பரணி சண்முகத்தின் கையை தள்ளிவிட்டு வீட்டை விட்டு,கிளம்ப, வைகுண்டம், என்ன பரணி இது என்று கேட்க, அப்போது பரணி இதுக்கு மேல இந்த வீட்டில் இருக்க எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டு கிளம்புகிறாள். அப்போது, எல்லாரும் தடுக்க முயற்சி செய்தும் பரணி வீட்டை விட்டு வெளியேறி சௌந்தரபாண்டி வீட்டிற்கு வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்


Click it and Unblock the Notifications











