சண்முகத்தை மொத்தமாக ஒதுக்கிய பரணி... தங்கையின் பேச்சால் நொந்துப்போன சண்முகம்.. அண்ணா சீரியல்!
சென்னை: பரணி சண்முகத்துடன் சண்டை போட்டுக்கொண்டு வெளியே சென்ற நிலையில் சண்முகம் வீட்டுக்கு வரும் சௌந்தரபாண்டி, நேத்து பரணி அவசரத்தில் ஒரு பெட்டியை மட்டும் எடுத்துட்டு வந்துவிட்டாள், இதனால், அவ பொருள் எல்லாத்தையும் கொண்டு வர சொன்னதாக சொல்கிறான். சண்முகம் அதை நம்ப மறுக்க சௌந்தரபாண்டி நான் வேணும்னா அவளையே வந்து சொல்ல சொல்லவா என்று கேட்கிறார். சண்முகம் நானே கேட்கிறேன் என்று பரணிக்கு போன் செய்கிறான் அவள் போனை எடுக்காததால் பொருட்களை திருப்பி கொடுக்கிறான்.
இன்றைய எபிசோட்: பாக்கியம் சௌந்தரபாண்டி சொன்னதை நம்ப மறுக்கிறாள். பரணியிடம் சண்முகம் அப்படி செய்திருக்க மாட்டான். நீ போன் பண்ணு என்று சொல்ல பரணி சண்முகத்திற்கு போன் செய்கிறாள். ஆனால் சண்முகம் போனை எடுக்காத காரணத்தால் அவன் தானே கொண்டு வந்து வச்சான் போகட்டும் என ரூமுக்குள் சென்று விடுகிறாள். இருந்து பாக்கியம் சிவபாலனை போன் போட்டு தர சொல்லி விசாரிக்க சண்முகம் சௌந்தரபாண்டி தான் வந்து எல்லாத்தையும் வாங்கிட்டு வந்தாரு என்று நடந்ததை சொல்கிறான். அடுத்து பாக்கியம், சண்முகத்திடம் வந்து, பரணி ஏதோ கோவத்தில் தான் இப்படி செய்கிறாள். நீ பரணியிடம் சென்று பேச சொல்ல சண்முகம், நான் ஏன் போய் பேசமும், அவ தானே வீட்டை விட்டு போனா, அவளே வரட்டும் இல்லனா அங்கேயே இருக்கட்டும் என்று சொல்கிறான்.

கண் கலங்கிய பரணி: இதைக்கேட்டு, கடுப்பான பாக்கியம், என்ன சண்முகம் பேசுற, உன் குடும்பம் நல்லாவே இருக்கக்கூடாது என்று,, பரணிக்கும் உனக்கும் இருக்கும் சண்டையை அவர் சாதகமாக்கி அவர் உன்னை பரணியிடம் இருந்த பிரிக்கப் பார்க்கிறார்.. அதுக்கு நீயும் இடம் தர, இப்படியே இரண்டு பேரும் இருந்த பிரிய வேண்டியதுதான் என சொல்கிறாள்., இதையடுத்து சண்முகம் பரணியை பார்த்து பேச கிளினிக்கிற்கு வருகிறான். சனியன் என்னை மீறி யாரும் அம்மாவை பார்க்க முடியாது என சண்முகத்தை தடுக்க சண்முகம் சனியன் கையை பிடித்து முறுக்கி விட்டு, இந்த வேலை எல்லாம் என்னிடம் வெச்சிக்காத என்று மிரட்டுகிறான்.,

பரணி சொன்ன வார்த்தை: அடுத்ததாக சண்முகம் உள்ளே வந்து பரணியிடம் உங்க அப்பா தான் பொருட்களை எல்லாம் எடுத்துட்டு வந்தாரு என்று சொன்னார். அதனாலதான் பொருட்களை எல்லாம் எடுத்து கொடுத்தேன், தயவு செய்து வீட்டுக்கு வந்துரு, நீ இல்லாம அந்த வீடு வீடாகவே இல்லை என்று சண்முகம் கையெடுத்து கும்பிட்டு சொல்ல அப்போது பரணி, சரி நான் வீட்டுக்கு வரேன். ஆனால், நான் மேல் படிக்க அமெரிக்கா போக நீ, சம்மதிக்க வேண்டும் என்று சொல்ல சண்முகம் அமைதியாக நிற்கிறான். இதைப்பார்த்த பரணி, உனக்கு உன் தங்கச்சிகளுக்கு நல்லது பண்ணுவ.. நான் கெட்டது பண்ணுவேன் என்பது போல் தானே பேசுனா.. உனக்கு என் மேல சந்தேகம் இருக்கா என்று கேட்டு என்னால் வர முடியாது என்று சொல்கிறாள்.

கோவப்படும் சண்முகம்: இதனால் வருத்தத்துடன் சண்முகம் வீட்டிற்கு வர எல்லாரும் என்னாச்சு என்று கேட்க நடந்ததை சொன்னதும் நீ கூப்பிட்டே வரலையா?, நீ போய் அழைத்தே வரவில்லை என்றால் என்ன அர்த்தம், ,எங்களுக்கு அந்த மாதிரி அண்ணி வேண்டாம் என்று சொல்ல கோவப்பட்ட சண்முகம், பரணினா யார் தெரியுமா? என கோபப்படுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.



Click it and Unblock the Notifications











