அம்மாவிற்கு செய்த சத்தியத்தை மறந்த சண்முகம்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: சனிக்கிழமை எபிசோடில் தீபாவளி சீரை எடுத்து கொண்டு வைகுண்டம், கனி இருவரும் இசக்கி வீட்டுக்குபோக, அப்போது, வாசலில் சௌந்தரபாண்டி மற்றும் பாண்டியம்மா நின்று கொண்டு இந்த வெறும் பயலுக்கு என் வீட்டில் என்ன வேலை என்று கேட்க, வைகுண்டம் தீபாவளி சீர் கொண்டு வந்து இருப்பதாக சொல்ல, அதை வாங்கி கீழே கொட்டி அவமானப்படுத்தி விடுகிறான்.

சண்முகம் மற்றும் பரணி இருவரும் ரத்னாவின் வீட்டிற்கு வந்து சீரை கொடுக்க, ரத்னாவின் மாமியார் என்ன பணம் கம்மியா இருக்கு என்று கேட்க சண்முகம் கோபப்படுகிறான். மேலும், ரத்னாவின் முகம் வாடி இருப்பதைப் பார்த்து வருத்தப்படுகிறான்., இதையடுத்து, இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

zee tamil anna

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், ரத்னாவின் நடவடிக்கையை பார்த்த சண்முகம், ரத்னாவுக்கு ஏதோ பிரச்சனை இருக்கு என சந்தேகம் வர, அவளிடம் தனியாக பேசினால் உண்மை தெரிந்து விடும் என முடிவெடுக்கிறான். இதனால் ரத்னாவிடம் ரெஸ்ட் ரூம் எங்கே என்று கேட்க வெங்கடேஷ் நான் கூட்டிட்டு போறேன் வாங்க என அழைத்துச் சென்று விடுகிறான். இதன் காரணமாக சண்முகத்தால் ரத்னாவுடன் பேச முடியாமல் போகிறது.

கோபத்தில் ரத்னா: இதையடுத்து, சண்முகம் வரும் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் விருந்து வைத்து இருக்கிறேன் அனைவரும் வாங்க என்று சொல்கிறான். அப்போது, ரத்னா வந்ததும், எதுக்கு வந்தேனு கேட்கவா என்று, பரணியை குத்தும் வகையில் பேசுகிறாள். அப்போது, பரணி என்ன ரத்னா, என்ன போய் தப்பா நினைச்சு இருக்க, தனியா வராதேனுதான் சொன்னேன், உன் புருஷன் கூட வந்து எத்தனை வருஷம் வேணும்னாலும் இரு என்று சொல்கிறாள். ஆனால், ரத்னா அதை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.

வருத்தப்படும் பரணி: அதன் பின் சண்முகம், ரத்னாவின் கையை பிடித்துக்கொண்டு, ரத்னா நீ தான் என் மூத்த பெண்ணு, நீ எப்போ சிரிப்ப, எப்போ அழுவனு எனக்கு நல்லா தெரியும், இப்போ உன் முகமே சரி இல்லை, எதுவாக இருந்தாலும் இந்த அண்ணன் இருக்கான், எதுவாக இருந்தாலும் என்கிட்ட சொல்லு என்று சொல்லிவிட்டு, சண்முகம் மற்றும் பரணி இங்கிருந்து கிளம்பி வர பரணி ரத்னா என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசல அதை நீ கண்டுக்கவும் இல்லை என்று வருத்தப்படுகிறாள்.

உன் தங்கச்சிக்கு நீ நல்ல அண்ணனா இருக்க, ஆனால், தங்கச்சியா… பொண்டாட்டியான வரும்போது பொண்டாட்டிய கண்டுக்க மாட்டுற என கோபப்படுகிறாள். இதனால் சண்முகம் அவளுக்கு மல்லிகை பூ வாங்கி கொடுத்து சமாதானம் செய்து உன்னை பீச்சுக்கு கூட்டிட்டு போறேன் லேட்டா வீட்டுக்கு போகலாம் என அழைத்துச் செல்ல இருவருக்கும் நெருக்கம் அதிகரிக்கிறது.

குழம்பும் இசக்கி: மறுபக்கம், கோவிலுக்கு போன பாக்கியம் மற்றும் இசக்கி இருவரும் வீட்டுக்கு வர வைகுண்டம் கொண்டு வந்த பலகாரங்கள் சிந்தி கிடப்பதை பார்த்து என்ன நடந்தது என சௌந்தரபாண்டியுடன் கேட்க உன் சொந்தக்காரனு ஒருத்தன் தீபாவளி சீர் எடுத்துக்கிட்டு வந்தான், அவனை அவமானப்படுத்தி அனுப்பிட்டேன் என்று சொல்ல யார் என தெரியாமல் குழம்புகின்றனர்.

அம்மாவிற்கு பண்ண சத்தியம்: இதையடுத்து, வைகுண்டம், கனியிடம் சௌந்தரபாண்டி வீட்டில் நடந்த அவமானத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொல்கிறான். அப்போது பரணி மற்றும் சண்முகம் வீட்டுக்கு வந்ததும் படுத்து இருக்கும் வைகுண்டத்திடம் இசக்கிக்கு சீர் கொடுத்தாச்சா என்று கேட்க, நல்ல படியாக கொடுத்தாச்சு என்று சமாளிக்கிறார். அப்போது,கனியின் மூலமாக வைகுண்டம் அவமானப்பட்டது தெரியவர சண்முகம் கோபமாக சௌந்தரபாண்டியன் வீட்டுக்கு கிளம்ப பரணி அவனைத் தடுத்து நிறுத்தி, அம்மாவிற்கு பண்ண சத்தியத்தை மறந்துட்டீயா என்று சொல்ல சண்முகம் அமைதியாகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X