மண்ணெண்ணெய் ஊற்றி இசக்கியை எரிக்க துணிந்த சௌந்தரபாண்டி..அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: தீபாவளிக்கு சீர் கொண்டு சென்ற வைகுண்டத்தை சௌந்தரபாண்டி அவமானப்படுத்தியதை கனி, சண்முகம் சொல்லி அழ, சண்முகம் கோபமாக சௌந்தரபாண்டி வீட்டுக்கு கிளம்ப பரணி அவனைத் தடுத்து நிறுத்தி, அம்மாவிற்கு பண்ண சத்தியத்தை மறந்துட்டியா என்று சொல்ல சண்முகம் அமைதியாகிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடில்,காலையில் சண்முகம் வெளியில் கிளம்ப பரணி எங்கே போறீங்க என்று கேட்க, உன் அப்பனை பார்த்து நாலு வார்த்தை கேட்கணும் என்று சொல்ல, பரணி தடுக்கிறாள். உடனே, உன் அப்பனை அடிக்கமாட்டேன், ஆனா நாலு வார்த்தை கேக்கலனா எனக்கு மனசு சரியாகவே இருக்காது, போய் நாலு வார்த்தை கேட்டுவிட்டு வருகிறேன் என்று கிளம்புகிறான். இதையடுத்து, பரணி, சௌந்தரபாண்டிக்கு போன் செய்து, நீ என் மாமா வைகுண்டத்தை அவமானப்படுத்தலாம் ஆனால், என் புருசனை அவமானப்படுத்த முடியாது, அவன் உன்னைத்தேடித்தான் வராரு ஜாக்கிரதை என்று சொல்லி எச்சரிக்கிறாள்.

அண்ணா சீரியல்: இதையடுத்து, சௌந்தரபாண்டி கோவிலில் தீபாவளிக்காக இலவச வேட்டி சேலை கொடுத்து கொண்டிருக்க சண்முகம் அங்கு வந்து வரிசையில் நிற்கிறான். இதை பார்த்த சௌந்தரபாண்டி என்னாலே உனக்கும் வேட்டி வேண்டுமா என்று கேட்க ஆமாம் என்று சொல்கிறான். உனக்கு வேட்டி மட்டுமில்ல ஜட்டியும் நான் தான் தரணும் என்று நக்கலாக பேச எனக்கு வேட்டி வேணும் தான், ஆனால் அந்த வேட்டி வேணாம் என்று சொல்லி சௌந்தரபாண்டியின் வேட்டியை உருவி டவுசருடன் நிற்க வைக்கிறான். அடுத்து ஜட்டி தரேன்னு சொன்னீங்களே எடுத்துக்கவா என்று கேட்க அவமானப்பட்ட சௌந்தரபாண்டி கோவத்தோடு ரோட்டில் ஓட, அனைவரும் வீடியோ எடுக்கிறார்கள்.
டவுசரோடு ஓடிய சௌந்தரபாண்டி: சனியன் சௌந்தரபாண்டி பின்னால் ஓடி, அய்யா ஓடாதீங்க என் வேட்டிய கட்டிக்கோங்க என்று சொல்ல, அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் சௌந்தரபாண்டி ஓடி வந்து ஒரு பைக்கின் மீது மோத, அதில் சிவபாலன் இருக்கிறான்.டவுசரோடு அப்பாவை பார்த்த அவன், என்ன உனக்கு பைத்தியம் புடிச்சிடுச்சா, ஏன் என் மானத்தை இப்படி வாங்குற என்று கேட்க,சௌந்தரபாண்டி,ஏலே என்னை வீட்டில் விடுடா என்று சொல்ல சிவபாலன் அவரை பைக்கில் ஏற்றிக்கொண்டு வந்து வீட்டில் விடுகிறான்.
இசக்கி வாழ்க்கைக்கு தான் பாதிப்பு: இதையடுத்து, வீட்டிற்கு வரும் ஷண்முகம்,பரணியிடம் உன் அப்பனுக்கு சரியா பாடம் கத்து கொடுத்துவிட்டேன். என் அப்பனை அவமானப்படுத்திய மாமாவ வேட்டிய அவுத்து ரொட்டுல விரட்டி விட்டேன் என்று சொல்ல பரணி கோவப்படுகிறாள். நீ பண்றதெல்லாம் காமெடினு நினைக்கிறியா.. இது காமெடி இல்ல, நீ அவரை வம்புக்கு இழுக்க, அவரு இசக்கியை தான் கொடுமைப்படுத்துவாரு, அது இசக்கி வாழ்க்கையைத் தான் பாதிக்கும் என்பதை மறந்துடாத என்று எச்சரிக்கிறாள்.
இசக்கியை எரிக்க துணிந்த சௌந்தரபாண்டி: மறுபக்கம், சௌந்தரபாண்டி வேட்டி இல்லாமல் வீட்டிற்கு வர இசக்கி இதை பார்த்து சிரிக்கிறாள். இதனால், மேலும் கோபமடைந்த சௌந்தரபாண்டி இதுக்கெல்லாம் காரணம் உன் அண்ணன் தான், என்னை டவுசரோட தெருத்தெருவா ரொட்டில ஓடவிட்டுவிட்டான் என்று சொல்லி ஆத்திரத்தோடு ஒரு கம்பை எடுத்து, உன்னை அடிச்சாத்தான் அவன் அடங்குவான் என்று இசக்கியை கடுமையாக அடிக்கிறான். அவள் வலியால் துடிக்க பாண்டியம்மா நல்ல அடி என்று ஏத்திவிட்டு, மண்ணெண்ணை கேனை எடுத்துவந்து கொடுத்து இவளை உயிரோடவே விடாதே தம்பி என்று சௌந்தரபாண்டியை உசுப்பேற்றி விடுகிறாள்.
உடனே, ஆவேசப்பட்ட சௌந்தரபாண்டி, இசக்கி மீது மண்ணெய்யை ஊற்ற, இசக்கி அப்படியே மயங்கி விழ, சௌந்தரப்பாண்டி கொளுத்த போகிறான் இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications