மவனே யாருக்கிட்ட.. பாக்யா செய்த தரமான வேலை.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: சண்முகம், சௌந்தரபாண்டியின் வேட்டியை கழட்டி அவமானப்படுத்த, அவர் தெருத்தெருவாக டவுசரோட ஓடி வர வழியில் வரும் சிவபாலன் அவரை வீட்டுக்கு அழைத்து வருகிறான். சௌந்தரபாண்டி வேட்டி இல்லாமல் வீட்டிற்கு வர இசக்கி இதை பார்த்து சிரிக்கிறாள். இதனால், மேலும் கோபமடைந்த சௌந்தரபாண்டி இதுக்கெல்லாம் காரணம் உன் அண்ணன் தான், அவன் என்னை டவுசரோட தெருத்தெருவா ரோட்டுல ஓடவிட்டுவிட்டான் என்று சொல்லி ஆத்திரத்தோடு ஒரு கம்பை எடுத்து, இசக்கியை கடுமையாக அடிக்கிறான்.
அவள் வலியால் துடிக்க பாண்டியம்மா நல்லா அடி என்று ஏத்திவிட்டு, மண்ணெண்ணை கேனை எடுத்துவந்து கொடுத்து இவளை உயிரோடவே விடாதே தம்பி என்று சௌந்தரபாண்டியை உசுப்பு ஏத்திவிடுகிறாள். உடனே, ஆவேசப்பட்ட சௌந்தரபாண்டி, இசக்கி மீது மண்ணெண்ணெயை ஊற்ற, இசக்கி அப்படியே மயங்கி விழ, சௌந்தரப்பாண்டி கொளுத்த போகிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், ஷண்முகம் தனது வீட்டில், சௌந்தரபாண்டியிடம் இருந்து உருவி வந்த வேட்டியை கொடியாக பறக்க விட, அக்கம் பக்கத்தினர் என்னாச்சு என்று கேட்க சௌந்தரபாண்டியை அண்டராயருடன் ஓட விட்டதாக சொல்கிறான். இதைக்கேட்ட அவர்கள் அய்யோ நான் பார்க்காமல் போய்விட்டேனே என்று சொல்லி, பறக்கும் வேட்டியை போட்டோ எடுத்து செல்கின்றனர். இதையெல்லாம் பார்த்த பரணி நீ காமெடியா பண்றதெல்லாம் இசக்கிக்கு தான் பிரச்சனையாகும் என்று சொல்ல ஷண்முகம் அதெல்லாம் ஒன்னும் ஆகாது என்று சொல்கிறான்.
வெளுத்து வாங்கிய சிவபாலன்: மறுபக்கம், சௌந்தரபாண்டி இசக்கியை கொளுத்த தீ குச்சியை பத்த வைக்கும் நேரத்தில் வீட்டுக்குள் வரும் சிவபாலன், தண்ணீரை ஊற்றி அணைக்க சௌந்தரபாண்டிக்கும் சிவபாலனுக்கும் இடையே பிரச்சனை சண்டை நடக்க எதுவும் செய்யமுடியாமல் நிற்கிறார் சௌந்தரபாண்டி. அப்போது கோவிலுக்கு போய்விட்டு பாக்கியம் வீட்டிற்கு வர இசக்கி கீழே விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவபாலன் நடந்த விஷயத்தை சொல்லுகிறான்.
மிரட்டிய பாக்யம்: இதனால் ஆத்திரம் அடைந்த பாக்கியம், நீ சண்முகத்திடம் ஏதாவது வம்பு செய்து இருப்ப, பதிலுக்கு அவன் எதாவது செய்து இருப்பான். அதுக்கு என் மருமகளை கொளுத்துவியா... இனிமேல் உன்னை சும்மாவிடக்கூடாது என்று கத்தும் பாக்கியம், சிவபாலனிடம் சீம எண்ணெய்யை கொண்டு வாடா, அப்படியே ஒரு பேப்பரில் நான் சொல்வதை எழுது என சொல்கிறாள். என் புருஷன் சௌந்தரபாண்டியும், அவர் அக்கா பாண்டியம்மாவும் சேர்ந்து செய்யுற கொடுமையால் நான் சீம எண்ணெய் ஊற்றி கொளுத்திகிட்டேன்.
ஜாக்கிரதை: அதோடு என் புருஷனையும் அவர் அக்காவையும் கொளுத்திட்டேன் என்று சொல்லி அவர்கள் மீது எண்ணெய்யை ஊற்ற சௌந்தரபாண்டி மற்றும் பாண்டியம்மா அதிர்ச்சி அடைகின்றனர். இப்போ தெரியுதா இனிமேல், என் மருமகள் கிட்ட பிரச்சனை பண்ண, கொளுத்திவிடுவேன் ஜாக்கிரதை என பாக்கியம் சௌந்தரபாண்டியனிடம் கத்திவிட்டு, மருமகள் இசக்கியை அழைத்து சென்று அவள் மீது தண்ணீர் ஊற்றுகிறாள்.
அப்போது இசக்கி, அத்தை சிவபாலன் மட்டும் வரவில்லை என்றால், மாமா என்னை கொளுத்தி இருப்பாரு என்று அழ, அவளை சமாதானப்படுத்தும் பாக்யம். முத்துப்பாண்டி வரவரைக்கும் நாம இங்கே இருக்க வேண்டாம். அண்ணன் வீட்டுக்கு போய்விடலாம் என்று முடிவு செய்து மூன்று பேரும் சண்முகம் வீட்டிற்கு செல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











