முத்தம் கேட்டு சண்முகத்திடம் கெஞ்சும் பரணி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: சௌந்தரபாண்டி இசக்கியை கொளுத்த தீ குச்சியை பத்த வைக்கும் நேரத்தில் வீட்டுக்குள் வரும் சிவபாலன், தண்ணீரை ஊற்றி அணைக்க சௌந்தரபாண்டிக்கும் சிவபாலனுக்கும் இடையே பிரச்சனை சண்டை நடக்கிறது. இதையடுத்து, கோவிலுக்கு போய்விட்டு பாக்கியம் வீட்டிற்கு வர இசக்கி கீழே விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவபாலன் நடந்த விஷயத்தை சொல்லுகிறான்.

இதனால் ஆத்திரம் அடைந்த பாக்கியம், இனிமேல் உன்னை சும்மாவிடக்கூடாது என்று சிவபாலா, சீம எண்ணெய்யை கொண்டு வாடா, அப்படியே ஒரு பேப்பரில் நான் சொல்வதை எழுது என சொல்கிறாள். என் புருஷன் சௌந்தரபாண்டியும், அவர் அக்கா பாண்டியம்மாவும் சேர்ந்து செய்யுற கொடுமையால் நான் சீம எண்ணெய் ஊற்றி கொளுத்திகிட்டேன். அதோடு என் புருஷனையும் அவர் அக்காவையும் கொளுத்திட்டேன் என்று சொல்லி அவர்கள் மீது எண்ணெய்யை ஊற்ற சௌந்தரபாண்டி மற்றும் பாண்டியம்மா அதிர்ச்சி அடைகின்றனர். இப்போ தெரியுதா இனிமேல், என் மருமகள் கிட்ட பிரச்சனை பண்ண, கொளுத்திவிடுவேன் ஜாக்கிரதை என பாக்கியம் எச்சரிக்கிறாள்.

zee tamil anna

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், இசக்கி, அத்தை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நான் இந்த வீட்டில் கஷ்டப்படுவது, இந்த வீட்டை விட்டு போய்டலாம் என்று சொல்லி அழுகிறாள். உடனே பாக்யம், நாம் எதுக்கு வீட்டை விட்டு போகணும் இந்த வீடு என் பொண்ணோட பேர்ல தான் இருக்கு. சாப்பாட்டுல கல் இருந்தால் கல்லை தூக்கி போட்டுட்டு சாப்பிடுவோம் அப்படித்தான் இவங்களை வெளியில் அனுப்பனும். ஆனால் திரும்ப இவங்க மேல பாவப்பட்டு மீண்டும் வீட்டுக்குள்ள விடக்கூடாது என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போது,பரணியிடம் இருந்து சிவபாலனுக்கு போன் வரகிறது.

அப்போது பாக்யம், டேய் சிவபாலா, நீ பரணியிடம் இங்கே நடந்த எதையும் சொல்லிடாதே. உங்க அப்பன் சண்முகத்தை வம்புக்கு இழுக்கத்தான் இப்படி செய்கிறான் என்று சொல்கிறாள். இதையடுத்து, பரணியின் போனை எடுத்த சிவபாலன், சொல்லு பரணி என்று கேட்க அங்கே எதாவது பிரச்சனையா என கேட்கிறாள். இதெல்லாம் ஒன்னும் இல்லை அக்கா என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறான்.

செம ரொமான்ஸ்: இதையடுத்து சண்முகம், பரணியிடம் இசக்கியிடம் வீட்டில் என்ன ஆச்சு என்று போன் பண்ணி பேசிட்டியா என்று கேட்க, நான் ஏன் போன் பண்ணணும் அவளை பார்த்துக்கொள்வதற்கு, அவ அண்ணன் இருக்கான், என்னை பார்த்துக்கொள்வதற்குத்தான் யாரும் இல்லை என்று சொல்கிறாள். அப்போது, சண்முகம் கீழே பாய் விரித்து படுக்க போக, அப்போது பரணி, என் அப்பாகிட்ட சபதம் விட்டா மட்டும் போதாது அதுல ஜெயிச்சு காட்டணும். போட்டியில ஜெயிக்கணும்னா என் அப்பாவோட வேட்டி உருவுனா மட்டும் போதாது என்று ரொமான்ஸாக பேசி சண்முகத்தை கட்டிலில் படுக்க சொல்லி, சண்முகத்தை நெருங்க அவன் கந்த சஷ்டி விரதம் என தள்ளி போகிறான்.

முத்தம் கேட்கும் பரணி: ஓ விரதமா உன்னை எப்படி வழிக்கு கொண்டு வரேன்னு பாரு என பரணி சபதம் எடுக்க, மறுநாள் காலையில் சண்முகம் பரணியை கட்டிபிடித்தபடி கீழே படுத்து இருக்கிறான். காலையில் எழுந்திருக்கும் சண்முகம் பரணியோடு இருப்பதைப் பார்த்து அய்யோ அய்யோ என்று கத்த,டேய் கத்தாதடா, புருஷன் பொண்டாட்டி பக்கத்துலத்தான் படுக்கணும் என்று ரொமான்சாக பேசி முத்தம் கேட்க,சண்முகம் எனக்கு வெட்கமாக இருக்கு, இதுக்கு எல்லாம் ஒரு நாள் இருக்கு என்று சொல்கிறான்.

ரத்னாவின் தைரியமான பேச்சு: அதை தொடர்ந்து வெங்கடேஷ் ரத்னாவிடம் ஸ்கூலுக்கு கிளம்பிக்கொண்டு இருக்க அப்போது, வெங்கடேஷ் யார் சொன்னாலும் கேட்க மாட்டியா, நீ வீட்டில் இருக்குற வேலையை பார்த்த போதும், ஸ்கூலுக்கு நீ போகக்கூடாது என்று சொல்ல,கடுப்பான ரத்னா, கல்யாணம் ஆகிவிட்ட, அந்த பெண் புருஷன் பேச்சத்தான் கேட்கணுமா, இந்த இடத்திற்கு வர நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன். என்னை யாரும் தடுக்க முடியாது என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X