பஞ்சாயத்தில் நடந்த அதிரடி திருப்பம்..இசக்கி எடுக்கப்போகும் முடிவு என்ன..

சென்னை: நேற்றைய எபிசோடில், இசக்கியிடமிருந்து நான்கு மிஸ்டுகால் வந்ததை பார்த்த சண்முகம் பயந்து போய் இசக்கியை பார்க்க செல்ல, அண்ணனை பார்த்ததும் இசக்கி கதறி அழுது, எல்லா விஷயத்தையும் சொல்ல, ஏய் சௌந்தரபாண்டி நீ சும்மாவே இருக்க மாட்டியா ஏதாவது பண்ணிக்கிட்டு தான் இருப்பியா.. என்று கோவத்துடன் சௌந்தரபாண்டியை அடிக்க போறாங்க ஷண்முகம் அப்போது தடுத்து நிறுத்துகிறாள் பாக்யம்.

அப்போ சௌந்தரபாண்டி டேய் வெறும் பயலே, உன்னோட தங்கச்சிய இங்க இருந்து கூட்டிட்டு போடா என்று சொல்ல, அப்போதுதான் சண்முகத்துக்கு நம்ம தங்கச்சி இங்க இருந்து அனுப்புறதுக்காக தான் எல்லாத்தையும் செய்றாரு என்பதை தெரிந்து கொண்டு அமைதியாகிறான். உடனே பாக்கியம் சொல்றத கேட்டுட்டு என்னோட தங்கச்சி நீங்க பாத்துக்கோங்க அவளுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா நான் சும்மாவே இருக்க மாட்டேன் அப்படின்னு சொல்லிட்டு சௌந்தரபாண்டியை மிரட்டிட்டு இசக்கி அங்கேயே விட்டுட்டு வீட்டுக்கு செல்கிறான். இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்.

zee tamil anna

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், சௌந்தரபாண்டி வீட்டுக்கு வரும் பஞ்சாயத்தார் சண்முகம் உங்க மீது பிராது கொடுத்திருப்பதாக சொல்கின்றனர். சௌந்திரபாண்டி இந்த ஊர்ல என்மேல எவன் பிராது என கேட்க, சண்முகம் தான் பிராது கொடுத்து இருக்கிறார் என்கின்றனர். அப்போது என்ன பிராது என்று கேட்க, அதை பஞ்சாயத்தில் வந்து தெரிந்துக்கோங்க என சொல்கிறார்கள். இதைக்கேட்ட இசக்கி எப்படி பஞ்சாயத்து மூலமாக இந்த வீட்டுக்கு வந்தேனோ அதே போல பஞ்சாயத்து மூலமே அண்ணன் வீட்டுக்கு போக போகிறேன் என நினைத்து சந்தேஷப்படுகிறாள்.

என் தங்கச்சியின் உயிர் தான் முக்கியம்: மறுபக்கம் ஷண்முகம் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்வது போல எல்லா ஏற்பாடுகளும் செய்கிறான். இதையெல்லாம் பரணிக்கு தெரியாமல் செய்கிறான். அடுத்து பஞ்சாயத்து கூடுகிறது.பஞ்சாயத்தில் சண்முகம், இசக்கி இந்த சீம எண்ணெணையை ஊத்தி கொளுத்தப்பார்த்து இருக்கிறான்.இதுக்கு அந்த ஆளோட அக்கா பாண்டியம்மாவும் உடைந்தை. இவ்வளவு கஷ்டப்பட்டு என் தங்கச்சி இந்த வீட்டில் வாழ வேண்டாம், அவளோட உயிர்தான் எனக்கு முக்கியம் என் தங்கச்சியை என்கூட அனுப்பிவைங்க என்று சொல்லுகிறான். உடனே, சௌந்தரபாண்டியன் தங்கச்சியை உன் வீட்டுக்கு அழைச்சிட்டு போனால் வாழா வெட்டியாயகி விடுவா பரவாயில்லையா என கேள்வி கேட்கிறார்.

இசக்கி எடுக்கப்போகும் முடிவு: அப்போது பஞ்சாயத்து காரர்கள் நீங்க ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பேச வேண்டாம் இசக்கி அவளோட முடிவை சொல்லட்டும் என்று அவளிடம் கேட்கின்றனர். அப்போது, பாக்கியம், ஏய் இசக்கி தப்பான எந்த முடிவும் எடுக்காத, முத்துப்பாண்டி இல்லாத நேரத்துல எதுவும் முடிவு எடுக்க வேண்டாம். உன்ன நான் நல்லா பத்திரமா பாத்துக்கிறேன் என்று சொல்லி கதறி அழுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? இசக்கி எடுக்க போகும் முடிவு என்ன? என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X