பஞ்சாயத்தில் அவமானப்பட்ட சௌந்தரபாண்டி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: சனிக்கிழமை எபிசோடில், சண்முகம் பஞ்சாயத்தை கூட்டி நியாயத்தை கேட்கிறான். அப்போது, சண்முகம், இசக்கி மேல, சீம எண்ணெணையை ஊத்தி கொளுத்தப்பார்த்து இருக்கிறான். இதுக்கு அந்த ஆளோட அக்கா பாண்டியம்மாவும் உடந்தை. இவ்வளவு கஷ்டப்பட்டு என் தங்கச்சி இந்த வீட்டில் வாழ வேண்டாம், அவளோட உயிர்தான் எனக்கு முக்கியம் என் தங்கச்சியை என்கூட அனுப்பிவைங்க என்று சொல்லுகிறான்.
அப்போது பஞ்சாயத்து காரர்கள் நீங்க மாத்தி மாத்தி பேச வேண்டாம் இசக்கி அவளோட முடிவை சொல்லட்டும் என்று அவளிடம் கேட்கின்றனர். அப்போது, பாக்கியம், ஏய் இசக்கி தப்பான எந்த முடிவும் எடுக்காத, முத்துப்பாண்டி இல்லாத நேரத்துல எதுவும் முடிவு எடுக்க வேண்டாம். என்று அறிவுரை சொல்லுகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், ஷண்முகம் இனிமேல் நீ இந்த வீட்ல இருக்க வேண்டாம்.. ஒழுங்கா என் கூட கிளம்பி வந்துடு கல்யாணத்துக்கு பிறகு பொண்ணு புருஷன் வீட்டில் தான் இருக்கணும்னு எந்த அவசியமும் கிடையாது. நீ புருஷன்கூட வாழ்வதை விட, உயிரோட இருக்க வேண்டும் என, தோளில் இருந்த துண்டை எடுத்து கீழே போட்டு இதை தாண்டிவா, ஏற்கனவே தப்பு பண்ண மாதிரி திரும்பவும் தப்பு பண்ணி விடாதே என்கிறான் சண்முகம்.

அழுது நிற்கும் இசக்கி: அப்போது, பாக்யம், ஏலே சண்முகம் என்னடா இப்படி பண்ணிக்கிட்டு இருக்க, எதுவா இருந்தாலும், பாண்டி ஊரில் இருந்து வரட்டும்டா அப்புறம் பாத்துக்கலாம் என்கிறாள். இசக்கி இந்த துண்டை தாண்டி போனா, என் பிணத்தை தாண்டி போனதற்கு சமம் என்று சொல்ல, இசக்கி என்ன செய்வது என்று தெரியாமல் அழுதுக்கொண்டு நிற்கிறாள். அப்போது, சௌந்தரப்பாண்டி, பாத்தியா என் மருமகள் வரமாட்டால, ஒரு பெண்ணுக்கு கல்யாணம் ஆச்சுனா, பொறந்த வீட்டுக்கும் அவளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, வீணா அவமானப்படாதே என்று சொல்லி சண்முகத்தை வெறுப்பேத்துகிறான்.

வீட்டிற்கு அழைத்து செல்லும் சண்முகம்: அப்போது, இசக்கி துண்டைத் தாண்டி, கீழே இருக்கும் துண்டை எடுத்து சண்முகத்தின் தோளில் போட்டு, இந்த உலகத்துல எல்லாரை விட என் அண்ணன் தான் என்று முக்கியம் என்று சொல்ல, சண்முகம், இசக்கியை கண்டிப்பிடித்து அழுகிறான். இதனால் சௌந்தரபாண்டி அதிர்ச்சி அடைய சண்முகம், இசக்கியை கல்யாண பொண்ணு மாதிரி காரில் உட்கார வைத்து வெடிப்போட்டு தனது வீட்டிற்கு அழைத்து செல்கிறான்.

தங்கைக்கு ஆர்த்தி எடுத்து இசக்கியை வீட்டுக்குள் அழைத்துச் செல்லும் சண்முகம் இசக்கி இதே வீட்ல சந்தோசமா இருக்கட்டும் என சொல்கிறான். சண்முகத்தின் இந்த முடிவால் பரணி அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.



Click it and Unblock the Notifications











