பரணியை வார்த்தையால் நோகடித்த ரத்னா.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: பஞ்சாயத்து பேசும் சண்முகம், கல்யாணத்துக்கு பிறகு பொண்ணு புருஷன் வீட்டில் தான் இருக்கணும்னு எந்த அவசியமும் கிடையாது. நீ புருஷன்கூட வாழ்வதை விட, உயிரோட இருக்க வேண்டும் என, தோளில் இருந்த துண்டை எடுத்து கீழே போட்டு இதை தாண்டிவா, ஏற்கனவே தப்பு பண்ணா மாதிரி திரும்பவும் தப்பு பண்ணி விடாதே என்கிறான் சண்முகம்.
இதையடுத்து, இசக்கி துண்டைத் தாண்டி, கீழே இருக்கும் துண்டை எடுத்து சண்முகத்தின் தோளில் போட்டு, இந்த உலகத்துல எல்லாரை விட என் அண்ணன் தான் முக்கியம் என்று சொல்ல, சண்முகம், இசக்கியை கட்டிப்பிடித்து அழுகிறான். இதனால் சௌந்தரபாண்டியன் அதிர்ச்சி அடைய சண்முகம், இசக்கியை கல்யாண பொண்ணு மாதிரி காரில் உட்கார வைத்து வெடிப்போட்டு தனது வீட்டிற்கு அழைத்து செல்கிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அண்ணா: இன்றைய எபிசோடில், தங்கைக்கு ஆர்த்தி எடுத்து இசக்கியை வீட்டுக்குள் அழைத்துச் செல்லும் சண்முகம், இந்த ஊரே மிரண்டு போகும் அளவிற்கு என் தங்கச்சியை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டேன் என்று சொல்ல, பரணி கோவப்பட்டு ரூமிற்குள் என்று கதவை மூடிக்கொள்கிறாள். இதையடுத்து, சண்முகம் உள்ளே சென்ற பரணியை சமாதானப்படுத்துகிறான்.

சண்முகத் செய்த வேலை: அப்போது பரணி, சண்முகம் நீ வந்து உன் தங்கச்சி மேல இருக்குற பாசத்துல, இசக்கியை இங்க கூட்டிட்டு வந்துருக்க ஆனா இது சரியே கிடையாது என்னைக்காவது ஒருநாள் கண்டிப்பாக இதெல்லாம் நினைச்சு நீ வருத்தப்படுவ என்று பரணி சொல்றாங்க. ஆனா சண்முகம் அதையெல்லாம் காதுல வாங்கிக் கொள்ளாம தங்கச்சி வந்த சந்தோஷத்துல அவங்களுக்கு விருந்து கொடுக்குறதுக்கு ஏற்பாடு செய்கிறான்.

வருத்தப்படும் பரணி: அதை தொடர்ந்து வீரா போலீஸ் ட்ரைனிங் முடித்து வீட்டிற்கு வருகிறாள். நீண்ட நாள்களுக்கு பிறகு குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சந்தோஷமாக இருக்கிறார்கள். அப்போது, பரணி வர ரத்னா அவளிடம் முகம் கொடுக்காமல் வேண்டா வெறுப்பாக பேசுகிறாள். அப்போது பரணி. ரத்னாவிடம் உன்னை வெங்கடேசன் வீட்டுல விட்டுட்டு வந்தது உன்னோட நல்லதுக்கு தான் என சொல்கிறாள் என்கிறாள்.

உடனே ரத்னா, என்ன நல்லது, நான் இந்த வீட்டுக்கு வந்தா, உன் புருஷன் கஷ்டப்படுவாரு, செலவு ஆகும்னு பாக்குறியா, நீ அண்ணியா உன் வேலையை நல்ல படியா பண்ணிட்ட, என் நல்லதுக்கு நீ எதுவுமே பண்ண வேணாம் என சொல்லி விட்டு போகிறாள். இதனால் பரணி வருத்தமாகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











