வெங்கடேஷூக்கு வார்னிங் கொடுத்த பரணி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: எபிசோடில் இதுவரை, வெங்கடேஷ், ரத்னாவை இனி ஸ்கூலுக்கு போகக்கூடாது என்று சொல்லி அடிக்க கை ஓங்க, இருவருக்கும் இடையே சண்டை, உருவானது. இது தெரிந்த சண்முகம், வெங்கடேஷ் வீட்டுக்கு சென்று, என் தங்கச்சிக்கு யாரும் இல்லைனு நினைச்சியா என்று சொல்லிவிட்டு ரத்னாவை வீட்டுக்கு அழைத்து வந்துவிடுகிறான்.
வீட்டில் பரணி, ஷண்முகத்திடம், நீ உன் தங்கச்சிங்க மேலே வச்சிருக்க அதீத பாசமே அவங்க வாழ்க்கைக்கு ஆபத்தாகிடும், ரத்னாவை கூட்டிட்டு போய் வெங்கடேஷ் வீட்டில் விட்டுட்டு வரலாம் என்று சொல்ல ஷண்முகம் பரணியை திட்டி விடுகிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அண்ணா: இன்றைய சீரியலில், சண்முகம், பரணியை திட்டியதைத் தொடர்ந்து, பரணி பாக்கியத்திற்கு நைட் போன் போட்டு விஷயத்தை சொல்லுகிறாள். அப்போது பாக்யம், இந்த சண்முகம் கோவக்காரன், தங்கச்சிக்கு பிரச்சனை என்றால் என்ன செய்வானு தெரியாது. நீ சண்முகத்திடம் பேசுவதைவிட, ரத்னாவிற்கு பேசு, அவளுக்கு சொல்லி புரியவை என்று சொல்கிறாள். இவர்கள் பேசுவதை மறைந்து இருந்து கேட்கும், பாண்டியம்மா, ம்ம்ம்... நாம போட்ட பிளான் இப்போது தான் வேலையை காட்டுதா. எப்படியும் பரணி பேச்சை ரத்னா கேட்க மாட்டா இந்த நேரத்தை பயன்படுத்தி இரண்டு பேருக்கும் பகையை உண்டாக்கிவிட வேண்டியது தான் என பாண்டியம்மா ஒரு பிளான் போடுகிறாள்.
இசக்கிய பாரு: இதையடுத்து, மறுநாள் நாள் காலை, பரணி, ரத்னாவிற்கு காபி கொண்டு வந்து கொடுக்க ரத்னா அந்த காபி வேண்டாம் என்று சொல்கிறாள். உடனே பரணி, என்ன ரத்னா இன்னும் என் மேல கோவமா தான் இருக்கியா என்று கேட்க, எல்லாத்தையும் நீ தப்பா நினைக்கிற, உண்மையில் நீ நல்லா இருக்கணும் என்று தான் நினைக்கிறேன். இசக்கி உன்னைவிட சின்ன பொண்னு, அவ என் அண்ணன் கிட்ட அடி, உதை எல்லாம் வாங்கியும், அந்த வீட்டை விட்டு வெளியே வரல. அதனாலத்தான் இன்னைக்கு இரண்டு பேரும் சந்தோஷமா இருக்காங்க.
கோபப்பட்ட ரத்னா: ஆனால், நீ ஒன்னுமே இல்லாத விஷயத்திற்கு வீட்டை விட்டு வந்தா என்ன அர்த்தம் என்று கேட்க, கடுப்பான ரத்னா. ரொம்ப நல்லவ மாதிரி பேசாதே இப்போ நான் இந்த வீட்டில் இருக்கக்கூடாது, என் புருஷனுக்கு கஷ்டம் வரக்கூடாது அதுக்குதானே இப்படி பேசுறேனு நல்லாத்தெரியுது. இனிமேல் நான் இந்த வீட்டில் இருக்கவே மாட்டேன். இனி என்ன ஆனாலும், இந்தவீட்டுக்கு வர மாட்டேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து இருவரும் கிளம்புகின்றனர்.
வார்னிங் கொடுத்த பரணி: இதையடுத்து வெங்கடேஷ் வீட்டு வாசலில் ஆட்டோ வந்து நிற்க, ரத்னா வீட்டிற்கு போ என்று பரணி சொல்ல, கடுப்பான வெங்கடேஷனின் அம்மா, என்ன நினைச்சிட்டு இருக்கீங்க, நேத்து உன் புருஷன் வந்து என் மகனை மிரட்டிவிட்டு ரத்னாவை கூட்டிக்கிட்டு போறான். இன்னைக்கு நீ வந்து வீட்டுல விடுற என்று கேட்க, சித்தி இது உங்களுக்கு தேவையில்லாத வேலை என்று உள்ளே சென்று வெங்டேஷனிடம், ரத்னா, ஏன் வேலைக்கு போகக்கூடாது, அவ வேலைக்கு போவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை. அவ வேலைக்கு போவ, இங்கே தான் இருப்பா, திரும்ப எதாவது சண்டை வந்துச்சுனா, சண்முகம் மாதிரி அடிக்க எல்லாம் மாட்டேன், வேறவிதமா செஞ்சிவிட்டுவேன் என்று சொல்லிவிட்டு வருகிறாள்.
பரணி, சண்முகம் இடையே மன கசப்பு: வீட்டிற்கு வரும் சண்முகம், ரத்னா வீட்டில் இல்லாததால்,ரத்னா எங்கே என்று கேட்க, பரணி நான் தான் அவளை வெங்கடேஷ் வீட்டில் விட்டுவிட்டு வந்ததாக சொல்கிறாள். இந்த வீட்டில் பெரியவங்க நாங்க இருக்கும் போது நீ எப்படி, அவளை வீட்டில் விடுவ என்று இரண்டு பேருக்கு இடையே சண்டை நடக்கிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











