வாழ்ந்த வாழ்க்கை போதும்.. கடலுக்குள் இறங்கிய ரத்னாவின் நிலை என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில் வெங்கடேஷ் ரத்னாவிடம் ஸ்கூலை தனது பேருக்கு எழுதி கொடுக்க சொல்லி ரத்னாவிடம் டாக்குமென்டை கொடுத்து கையெழுத்து போட சொல்கிறான். ரத்னா கையெழுத்து போட முடியாது என மறுக்க வெங்கடேஷ் உனக்கு இத விட்டா வேற வழி இல்ல என்று சொல்கிறான். எனக்கு ஒரு பிரச்சினைனா என் அண்ணன் வந்து நிற்பான் என சொல்லுகிறாள். என்னது அண்ணன் வந்து நிப்பானா... ம்ம்ம்... உன் அண்ணன் கூட்டிட்டு போவான், பரணி, கழுத்தைப் பிடித்து கொண்டு வந்து இங்க தள்ளிட்டு போவாங்க.. உன்கிட்ட எப்படி கையெழுத்து வாங்கணும்னு எனக்குத் தெரியும் என சொல்கிறான்.
இதைத்தொடர்ந்து ரத்னா, வெங்கடேசன் பேசிய வார்த்தைகளால் மனம் உடைந்து போய் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து வீட்டை விட்டு வெளியே, அழுதுக்கொண்டே வருகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அண்ணா: இன்றைய எபிசோடில், வெங்கடேஷ் வேலைக்கு போகக்கூடாது என்று சொல்லி அடிக்க வந்ததும், அப்போது சண்முகம் வீட்டுக்கு வந்து வெங்கடேசை மிரட்டி விட்டு, ரத்னாவை அழைத்து வந்தது. பரணி,கல்யாணம் ஆன பெண் புருஷன் வீட்டில் தான் இருக்க வேண்டும் என்றும். மீண்டும் அழைத்து வந்து வெங்கடேஷ் வீட்டில் விட்டு சென்றது போன்ற விஷயங்களை நினைத்து பார்த்து அண்ணா என்னை மன்னித்துவிடு நான் செய்வது தப்பு தான் ஆனா எனக்கு இதை விட்டா வேற வழி தெரியல என கடலுக்குள் இறங்குகிறாள். அப்போது பெரிய அலை ஒன்று ரத்னாவை அடித்து செல்கிறது.
ரத்னாவை காணவில்லை: காலையில் எழுந்திருக்கும் வெங்கடேஷ், காபி கேட்டு ரத்னா ... ரத்னா என்று கத்திக்கொண்டு இருக்க ரத்னாவை காணவில்லை. அப்போது அங்கு வரும் வெங்கடேஷனின் அம்மா, என்னடா, காலையில கத்திக்கிட்டு இருக்க என்று கேட்க, காபி வேணும்மா,அதான் ரத்னாவை கூப்பிட்டேன், அவ எங்கேயும் காணும் என்று சொல்கிறான். நேத்து சண்டை போட்டல, அதான் அவ, அண்ணன் வீட்டுக்கு போய் இருப்ப, இன்னும் கொஞ்ச நேரத்துல பஞ்சாயத்துக்கு அவ அண்ணன் வருவான் பாரு, ரத்னாவிற்கு அவளோட அம்மா புத்தி அதான் சொல்லாம, வீட்டை விட்டு ஓடிபோற என்று வெங்கடேஷனின் அம்மா சத்தம் போட்டுக்கொண்டு இருக்கிறாள்.
விஷயம் தெரிந்தது: மறுபக்கம் சண்முகம் மற்றும் பரணி ரத்னாவின் ஞாபகம் வர ரத்னாவை பார்த்துட்டு வந்து விடலாம் என்று சொல்லி பரணியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்புகிறான். வெங்கடேஷ் வீட்டுக்கு வந்த பரணி, சித்தி நெய்சோறு செய்தேன், அது ரத்னாவிற்கு பிடிக்கும் என்பதால், கொண்டு வந்தேன் ரத்னா எங்கே என்று, கேட்க, வீட்டில் இருக்கும் அனைவரும் பயந்து போய், காலையில் இருந்து ரத்னாவை காணும், அவ உங்க வீட்டிற்கு வந்து இருப்பாள் என்று நினைத்தேன் என்று சொல்லுகின்றனர். அவர்கள் சொல்வதை நம்பாத , பரணி வீட்டிற்குள் தேடி பார்க்க அப்போது அந்த, டாக்குமெண்ட் கிடைக்கிறது.
கொடுமைப்படுத்தி இருக்கான்: அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பரணி, அந்த பேப்பரை சண்முகத்திடம் கொண்டு வந்து கொடுத்து, ரத்னாவை ஸ்கூல் வேலையை விட சொல்லி வெங்கடேஷ் கொடுமைப்படுத்தி இருக்கான் , அதன் ரத்னா எங்கோ போய்விட்டாள் என்று சொல்ல, கடுப்பான சண்முகம் , வெங்கடேசனை வெளுவெளு என வெளுத்துவிடுகிறான். அப்போது வெங்கடேஷசனின் அம்மா, அவ வீட்டை விட்டு போன என் மகன் என்ன செய்வான், அவளுக்கு அவ அம்மா புத்தி, அதான் வீட்டை விட்டு ஓடிவிட்டாள், ஓடுகாலி என்று சொல்ல, ஆத்திரப்பட்ட பரணி, யார் வீட்டு பொண்ணைப்பார்த்து என்ன வார்த்தை சொன்ன என்று பளார் என்று அறைகிளாள்.
ரத்னாவிற்கு என்னாச்சு: இதையடுத்து, ரத்னா காணாமல் போன விஷயம் வைகுண்டம் உட்பட வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் தெரிய வர எல்லோரும் ஒன்று சேர்ந்து ரத்னாவை தேடத் தொடங்குகின்றனர். கடலுக்குள் இறங்கிய ரத்னாவின் நிலை என்ன? சண்முகம் காப்பாற்றுவானா இல்லையா என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











