கரை ஒதுங்கிய ரத்னாவின் உடல்.. கதறி அழுத குடும்பம்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், வெங்கடேசன் பேசிய வார்த்தைகளால் மனம் உடைந்துபோன ரத்னா தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து வீட்டை விட்டு வெளியே, அழுதுக்கொண்டே கடற்கரைக்கு வருகிறாள். அப்போது, அண்ணா என்னை மன்னித்துவிடு நான் செய்வது தப்பு தான் ஆனா எனக்கு இதை விட்டா வேற வழி தெரியல என கடலுக்குள் நடந்து செல்ல, அப்போது பெரிய அலை ஒன்று ரத்னாவை அடித்து செல்கிறது.

காலையில் எழுந்திருக்கும் வெங்கடேஷ், காபி கேட்டு ரத்னாவை அழைக்க அவள் வீட்டில் இல்லை என்று தெரிகிறது. சண்முகம் மற்றும் பரணி ரத்னாவின் ஞாபகம் வர ரத்னாவை பார்த்துட்டு வந்து விடலாம் என்று சொல்லி பரணியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வருகின்றனர். அப்போது, காலையில் இருந்து ரத்னாவை காணவில்லை, அவ உங்க வீட்டிற்கு வந்து இருப்பாள் என்று நினைத்தேன் என்று சொல்லுகின்றனர். இதையடுத்து, ரத்னா காணாமல் போன விஷயம் அனைவருக்கும் தெரியவர அனைவரும் சேர்ந்து தேடுகின்றனர். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil anna

அண்ணா: சீரியலில் இன்றைய எபிசோடில், ரத்னாவை காணாததால் சண்முகத்தின் குடும்பத்தினர் கவலையில் இருக்காங்க, அந்த நேரத்துல போலீஸ்சாரிடம் இருந்து ஒரு போன் வருது, அதாவது, கடற்கரையில் ரோந்து சென்ற போது ஒரு பர்ஸ் கிடந்தது, அந்த பர்ஸ்ல இருந்த நம்பரைப் பார்த்து போன் செய்கிறேன் என்று சொல்ல, ஒட்டுமொத்த குடும்பமும் பீச்சுக்கு போறாங்க. அந்த பர்சை பார்த்து இது ரத்னாவோட பர்ஸ் என்பது தெரிஞ்சு, அனைவரும் அழுகிறார்கள். அப்போது சண்முகம், ரத்னா ஒன்னும் கோழை இல்ல அவளுக்கு ஒன்னும் ஆகி இருக்காது அவ இங்கேத்தான் இருப்பா தேடுங்க என்று சொல்ல அனைவரும் தேடுகின்றனர்.

கதறி அழுத சண்முகம்: சண்முகம் அங்கே இருக்கும் கடையில் ரத்னா பற்றி கேட்டு விசாரித்துக்கொண்டு இருக்கிறான். அப்போது, கனியிடம் ரத்னாவோட செருப்பு கிடைக்குது அந்த செருப்ப பாத்து விட்டு, அண்ணே என்று கத்திக்கிட்டு அழுகிறாள். இது வந்து ரத்னா அக்காவோட செருப்பு தான் எனக்கு நல்லா தெரியும் அப்படின்னு சொல்லிட்டு இசக்கியும் அழ, உடைந்து போன வைகுண்டம் என்னோட ரத்னாக்கு எதுவுமே ஆகிருக்காது இங்கதான் இருப்பா என்று சொல்ல அனைவரும் அழுதுகொண்டே தேடுகின்றனர். அப்போது, மண்ணில் புதைந்த நிலையில் ஒரு கொலுசு இசக்கிக்கு கிடைக்கிறது. அது ரத்னாவோட கொலுசு தான் என்று இசக்கி சொல்ல, ஒட்டுமொத்த குடும்பமும் ரத்னா இறந்துவிட்டதாக நினைத்து கதறி அழுகின்றனர்.

இதையடுத்து, சண்முகம், என் தங்கச்சி போய்ட்டாளே, இனி மேல் நான் எதுக்கு உயிரோட இருக்கணும், நானும் சாகுறேன் என்று சண்முகம் கடலில் குதிக்கபோக அனைவரும் அவனை தடுத்து நிறுத்துகின்றனர். இதுக்கெல்லாம் காரணம் அந்த வெங்கடேசன் தான் அவன சும்மாவே விடமாட்டேன், அவனை நான் கொன்னுடுவேன் என்று ஆத்திரத்தில கத்துகிறான் சண்முகம்.

கூண்டோடு தூக்கிய போலீஸ்: மறுபக்கம், வெங்கடேஷன் வீட்டில், அனைவரும் ரத்னா இவ்வளவு நேரம் ஆகியும் கிடைக்கவில்லை. நிச்சயம் சண்முகம் ஏதாவது பிரச்சனை பண்ணுவான், இதனால், நாம் இந்த வீட்டில் இருக்கக்கூடாது என்று முடிவு எடுத்து அனைவரும் வெளியில் கிளம்ப, அந்த நேரம் பார்த்து போலீஸ் வந்து அனைவரையும் கைது செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வருகின்றனர். அந்த இடத்தில் ரத்னாவை பறிகொடுத்த சோகத்தில் இருந்த சண்முகம், வைகுண்டம் அனைவரும் வெங்கடேஷனை அடித்து உதைக்கின்றனர். அவர்களிடம் இருந்து வெங்கடேஷனை மீட்ட போலீசார் அவனை செல்லில் போட்டு அடைக்கின்றனர்.

அந்த நேரத்தில் கடற்கரையில் ரத்னாவில் உடல் கரை ஒதுங்கி இருப்பதைப் பார்த்து, அங்கு இருப்பவர்கள் போலீசுக்கு தகவல் கொடுக்க, போலீசார் அந்த இடத்திற்கு செல்கின்றனர். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்க, அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X