அனாதை பிணமாக கிடந்த ரத்னா.. சரிந்து விழுந்த சண்முகம்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: சனிக்கிழமை எபிசோடில், பீச்சில் ரத்னாவின் பர்சை பார்த்துவிட்டு போலீஸ்காரர் போன் பண்ண, அனைவரும் பயத்தோடு கடற்கரைக்கு செல்கின்றனர். அப்போது சண்முகம், ரத்னா தைரியமான பெண் நிச்சயம் தப்பான முடிவு எடுத்து இருக்கமாட்டா என்று அங்கே இருக்கும் கடையில் ரத்னா பற்றி கேட்டு விசாரித்துக்கொண்டு இருக்கிறான்.
அப்போது, ரத்னாவின் செருப்பு, கொலுசு ஒட்டுமொத்த குடும்பமும் ரத்னா இறந்துவிட்டதாக நினைத்து கதறி அழுகின்றனர்.என் தங்கச்சி போய்ட்டாளே, இனி மேல் நான் எதுக்கு உயிரோட இருக்கணும், நானும் சாகுறேன் என்று சண்முகம் கடலில் குதிக்கபோக அனைவரும் அவனை தடுத்து நிறுத்துகின்றனர். இதுக்கெல்லாம் காரணம் அந்த வெங்கடேசன் தான் அவன சும்மாவே விடமாட்டேன் என்று கத்துகிறான் சண்முகம்.

மறுபக்கம், போலீசார் வெங்கடேஷன் குடும்பத்தினரை கைது செய்து அழைத்து வருகின்றனர். ரத்னாவை பறிகொடுத்த சோகத்தில் இருந்த சண்முகம், வைகுண்டம் அனைவரும் வெங்கடேஷனை அடித்து உதைக்கின்றனர். அவர்களிடம் இருந்து வெங்கடேஷனை மீட்ட போலீசார் அவனை செல்லில் போட்டு அடைக்கின்றனர். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், கரை ஒதுங்கிய ரத்னாவின் உடலை பார்த்த ஒரு பெண்மணி, போலீசுக்கு தகவல் கொடுக்க, விரைந்து வந்த போலீஸ், இந்த பெண் குறித்து எந்தவிதான புகாரும் வரவில்லை என்று கூறிவிட்டு, உடலை அனாதை பிணமாக கருதி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் எடுத்து செல்கின்றனர்.
கதறி அழும் சண்முகம்: மறுபக்கம் சண்முகம் வீட்டில் நிலை குலைந்து போய் அழுது கொண்டு இருக்கிறான். ஐயோ என் தங்கைக்கு என்ன பிரச்சனைன்னு தெரியவே இல்லையே, எதுவாயிருந்தாலும் அண்ணே அண்ணன்னு என்கிட்ட தானே சொல்லுவா, அவளுக்கு மனசுக்குள்ள எவ்ளோ பெரிய கஷ்டம் இருந்தும் அவ என்கிட்ட எதுவுமே சொல்லாம இப்படி ஒரு தவறான முடிவு எடுத்துட்டாளே, எங்க அம்மாவ வாரி கொடுத்தேன், இப்போ கண்ணுக்கு கண்ணா வளத்த என் தங்கச்சியும் வாரி கொடுத்துட்டேனே என்று கதறி அழுதுக்கொண்டு இருக்கிறான்.
பரணி மீது திரும்பும் கோபம்: அப்போது பரணி, சண்முகம் எல்லா பழியையும் நீ உன்மேல போட்டுக்காதே, அவ தப்பான முடிவு எடுத்துட்டா அதுக்கு நீ என்ன பண்ண முடியும் என்று கேட்க, உடனே பரணியை பார்த்து கோபமடைந்த சண்முகம், எல்லா பிரச்சனையும் உன்னால தான் வந்துச்சு, நீதான் என் தங்கச்சிய கொண்டு போயி அந்த வீட்டுல விட்டுட்ட, உன்னால என் தங்கச்சி இன்னைக்கு என்னைவிட்டு போய்விட்டா, அதுக்கு காரணம் நீதான் என்று பரணி பார்த்து சண்முகம் கோபப்படுகிறான். அப்போது வைகுண்டம் டேய், சண்முகம் கோபத்துல என்னென்னமோ பேசாதடா, ரத்னா நல்லா வாழனும் அப்படிங்கறதுக்காகத்தான் பரணி எடுத்துட்டு போயி, அவங்க வீட்டுல விட்டா. ரத்னா தைரியமான பொண்ணு ஆனா அவ எப்படி இந்த முடிவை எடுத்தானே தெரியவில்லை அப்படின்னு சொல்லிட்டு அனைவருமே அழுதுட்டு இருக்கின்றனர்.
கனி உடம்பில் வரும் சூடாமணி: அந்த நேரம், கனி அம்மாவோட வீட்டில் இருக்கும், வேப்பமரத்து கிட்ட வந்து நின்னு, அம்மா எனக்கு அக்கா வேணும் நீயும் போயிட்ட, இப்போ அக்காவும் இல்ல, நீ இல்லாத போது அக்கா தான் எனக்கு அம்மாவா இருந்து என்ன வளர்த்தாங்க என்று சொல்லி அழுகிறாள். அந்த நேரம் கனியின் உடம்பில் ஏதோ சக்தி வந்ததுபோல உணருகிறாள். திடீரென, டேய் சண்முகம் என்று சூடாமணி குரல்ல கனி கத்த, ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியாகி நிற்க, உன் தங்கச்சி ரத்னா, யாருமே இல்லாம அனாதையாக கிடக்குறா, நீ போய் அவளை காப்பாத்துடனா என சொல்லிவிட்டு கனி மயங்கி விழுகிறாள்.
அனாதையாக கிடந்த ரத்னா: கனி சொன்ன இடத்தை தேடி அனைவரும் அங்க சென்று, அனைவரிடமும் போட்டோவை காமிச்சு இந்த பொண்ணை பாத்தீங்களா பாத்தீங்களா என்று விசாரிக்க, கடற்கரையில் இருந்த பெண், இந்த பொண்ணின் உடல், காலைல கரை ஒதுங்கி இருந்தது. நான் தான் போலீசுக்கு போன் பண்ணேன். போலீஸ்காரர்கள் வந்து அனாதை பிணம், என்று சொல்லிவிட்டு, ஆம்புலன்ஸ்ல எடுத்துட்டு போயிட்டாங்க என்று சொன்னதும், சண்முகம் மயக்கத்துல சரிஞ்சு விழுகிறார்.
மறுபக்கம் ரத்னா மருத்துவமனையில உயிருக்கு போராடிகிட்டு இருக்காங்க அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க ரத்னாவுக்கு சுய நினைவு வந்து அண்ணா என்று கத்துறாங்க. ஆனால் இந்த பக்கம் ரத்னா இறந்து விட்டதா நினைச்சு சண்முகம் கதறி கதறி அழுதுகிட்டு. இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்க, அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











