ரௌடிகளிடம் விற்கப்பட்ட ரத்னா.. தங்கையை காப்பாற்றுவாரா சண்முகம்..அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், கனியின் உடம்பில் ஏதோ சக்தி வந்ததுபோல உணருகிறாள். திடீரென, டேய் சண்முகம் என்று சூடாமணி குரலில் கனி கத்த, ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியாகி நிற்க, உன் தங்கச்சி ரத்னா, யாருமே இல்லாம அனாதையாக கிடக்குறா, நீ போய் அவளை காப்பாத்துடா என சொல்லிவிட்டு கனி மயங்கி விழுகிறாள். கனி சொன்ன இடத்தை தேடி சண்முகம், உடன்குடி, சிவபாலன் என அனைவரும் கடற்கரைக்கு வருகின்றனர்.
அங்கு இருக்கும் அனைவரிடமும் போட்டோவை காட்டி இந்த பொண்ணை பாத்தீங்களா பாத்தீங்களா என்று விசாரிக்க, கடற்கரையில் இருந்த பெண், இந்த பெண்ணின் உடல், காலைல கரை ஒதுங்கி இருந்தது. நான் தான் போலீசுக்கு போன் பண்ணேன். போலீஸ்காரர்கள் வந்து அனாதை பிணம், என்று சொல்லிவிட்டு, ஆம்புலன்ஸ்ல எடுத்துட்டு போயிட்டாங்க என்று சொன்னதும், சண்முகம் மயக்கத்துல சரிந்து விழுகிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், மயங்கி விழுந்த சண்முகம், ரத்னா, ரத்னா என்று கத்திக்கொண்டு இருக்கிறான். அப்போது சிவபாலன், அத்தான், சூடாமணி அத்தை என்ன சொன்னாங்க ரத்னா உயிரோட இருக்கா காப்பாத்து என்று தானே சொன்னாங்க, அவங்க சொன்னது போல, ரத்னாவிற்கு ஒன்னும் ஆகி இருக்காது என்று சொல்ல, சண்முகம், ஆமாம் அம்மா, என் குடும்பத்தை கைவிட மாட்டாங்க என்று சொல்லிவிட்டு, அனைவரும் ஹாஸ்பிடலுக்கு ஓடிவருகின்றனர்.
நர்ஸ் போட்ட பிளான்: ஹாஸ்பிடலில் ரத்னாவை பரிசோதனை செய்த நர்ஸ் உயிர் இழந்து விட்டதாக சொல்ல போஸ்ட் மார்ட்டத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். போஸ்ட்மார்ட்டம் செய்பவர், இன்னைக்கு நிறைய போஸ்ட்மார்ட்டம் செய்துவிட்டேன், அதனால், இன்னைக்கு செய்ய முடியாது லேட் ஆகும் என்கிறார். இந்த நேரத்தில் ஒரு நர்ஸ் வந்து, அங்க அடையாளம் குறித்து ரிப்போர்ட் எடுக்கும் போது, பார்க்க ரத்னாவுக்கு உயிர் இருப்பது தெரிய வருகிறது. உடனே அந்த நர்ஸ் பெரிய நர்ஸிடம் விஷயத்தை சொல்ல பெரிய நர்ஸ் ரௌடி ஒருவனுக்கு போன் செய்து, இங்கு ஒரு பெண்ணோட உடல் கிடைச்சி இருக்கு அவ சுயநினைவு இல்லாம இருக்கா, நீ அண்ணன் என்று சொல்லி வேறு மருத்துவமனையில் சேர்ப்பதாக சொல்லு என்று அந்த நர்ஸ் ஐடியா கொடுக்கிறாள்.
கடைசி நேரத்தில் கிடைத்த ரத்னா: இதையடுத்து ஷண்முகம் குடும்பத்தினர் ஹாஸ்பிடலுக்கு வந்து ரத்னா குறித்து விசாரிக்க ஒரு நர்ஸ் ரத்னா இருக்கும் ஸ்ட்ரெச்சரை காட்ட ஷண்முகம் முகத்தை திறக்க போகும் சமயத்தில் பெரிய நர்ஸ் ஓடி வந்து, அது உன் தங்கச்சி இல்ல என்று சொல்லி கவனத்தை திருப்பி ரத்னாவை ரவுடியிடம் ஒப்படைக்கிறாள்.கடைசி நேரத்தில் ரௌடிகள் ரத்னாவை வண்டியில் ஏற்றும் போது,ஷண்முகம் ரத்னாவை பார்த்து விடுகிறான். அதன்பின் ரௌடிகளிடம் சண்முகம் சண்டைபோட்டு ரத்னாவை காப்பாத்துகிறான்.அதன்பின் பரணிக்கு போன் போட்டு, மருத்துவமனைக்கு வர சொல்ல, பரணி, ரத்னாவிற்கு மருத்துவம் பார்க்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











