ரத்னா உயிர் பிழைப்பாரா..போராடும் உயிர்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
சென்னை: நேற்றைய எபிசோடில், ஹாஸ்பிடலில் ரத்னாவை பரிசோதனை செய்த நர்ஸ் உயிர் இழந்து விட்டதாக சொல்ல போஸ்ட்மார்ட்டத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். இந்த நேரத்தில் ஒரு நர்ஸ் வந்து, அங்க அடையாளம் குறித்து ரிப்போர்ட் எடுக்கும் போது, ரத்னாவுக்கு உயிர் இருப்பது தெரிய வருகிறது. உடனே அந்த நர்ஸ் பெரிய நர்ஸிடம் விஷயத்தை சொல்ல பெரிய நர்ஸ், அனாதையான அந்த பெண்ணை ரௌடிக்கு விற்றுவிட பிளான் போடுகிறாள். பின் ரௌடிகள் அழைத்து செல்லும் கடைசி நேரத்தில் ரத்னாவை ஷண்முகம் பார்த்துவிட்டு அவர்களிடம் சண்டை போட்டு ரத்னாவை மீட்கிறான்.
இன்றைய எபிசோடில், ஷண்முகம் ரவுடிகளிடம் சண்டை போட்டு ரத்னாவை அங்கிருந்து மீட்டு வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்க்கிறான். ஆனால், ரத்னாவின் உடல்நிலை மோசமாக இருப்பதால் ஜூனியர் டாக்டர் என்னால் எதுவும் செய்ய முடியாது. சீனியர் டாக்டருக்கு சொல்லி இருக்கோம் அவர் வந்தால் தான் மருத்துவம் பார்க்க முடியும் என்று சொல்கிறார். அதனை தொடர்ந்து வெட்டுக்கிளி நம்ம அண்ணியை விட பெரிய டாக்டர் யாரு அண்ணே? அவங்க தான் நம்ம குலசாமி, அவங்களை வர சொல்லு என்று சொல்ல ஷண்முகம் யோசிக்க வெட்டுக்கிளி நீ போன் பண்றியா நான் பண்ணட்டுமா என்று கேள்வி கேட்கிறான்.

மோசமான நிலையில் ரத்னா: இதனால் ஷண்முகம் பரணிக்கு போன் செய்ய அவள் ரத்னா குறித்து விசாரிக்க ஷண்முகம் ரத்னா கிடைத்து விட்டதாக சொன்னதும் பரணி சந்தோஷமடைகிறாள். ஆனால் ரத்னாவின் நிலை குறித்து எடுத்து சொல்ல பரணி ஹாஸ்பிடலுக்கு கிளம்பி வருகிறாள். ரத்னாவை பரிசோதனை செய்த டாக்டர் என்னால் தனியாக ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியாது, இன்னும் 2 அல்லது மூன்று டாக்டர் வேண்டும் என்று சொல்கிறாள். மேலும் பரணி என்னுடைய ப்ரண்ட்ஸ்களை வர வைத்து ட்ரீட்மெண்ட் கொடுக்கிறேன் என்று சொல்லி தனது ப்ரண்ட்ஸ்களை வர வைக்கிறாள். பிறகு ரத்னாவுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்க தொடங்குகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











