ரத்னாவின் காலில் விழுந்து கெஞ்சிய வெங்கடேஷ்.. அவள் எடுக்கும் முடிவு என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், ரத்னா சுயநினைவை இழந்து இருப்பதால், அவளுக்கு பழைய விஷயத்தை நினைவு படுத்த வேண்டும் என்று பரணி சொல்ல, ஒவ்வொருத்தராக பேசுகின்றனர் அப்போது, பரணி ரத்னா பக்கத்தில் உட்கார்ந்து என்னை மன்னிச்சுடு டி.. நீ நல்லா இருக்கணும்னு நினைத்து தான் நான் திரும்பவும் உன்னை அந்த வீட்டில் கொண்டு போய் விட்டேன்.
இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிந்து இருந்தா இப்படி பண்ணி இருக்க மாட்டேன் என்று பேசுகிறாள்.
அதை தொடர்ந்து தங்கைகள் ஒவ்வொருத்தராக உள்ளே சென்று ரத்னாவிடம் பேசி அவளை கண் விழிக்க வைக்க முயற்சி செய்கின்றனர். ஆனாலும் ரத்னாவின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதால், சண்முகம் நான் பேசுகிறேன் என்று பேசுகிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

அண்ணா சீரியல்: இன்றை எபிசோடில், ரத்னாவின் அருகில் அமர்ந்து கதறும் சண்முகம், இனிமே உன்ன அண்ணா இப்படி தனியா விட்டுட்டு போக மாட்டேன். அண்ணன் செஞ்ச தப்ப மன்னிச்சிடு, எனக்கு என் தங்கச்சி மட்டும் கிடைச்சா போதும்
என்று கதறி அழுதுட்டே இருக்காங்க. அப்போது ரத்னாவிற்கு சுயநினைவு வந்து, ரத்னா அண்ணனின் கையை பிடிக்கிறாங்க. இதை பார்த்துட்டு குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷப்படுகின்றனர்.ரத்னாவிற்கு சுயநினைவு வந்துருச்சு என்னோட முருகன் என்னை கைவிடல, என்று ஒட்டுமொத்த குடும்பமும் சந்தோஷப்படுறாங்க. என் தங்கச்சி மீட்டு கொடுத்த பரணிக்கு தான் என்னோட நன்றி அனைத்தையும் சொல்ல வேண்டும் என்று சண்முகம் பரணிக்கு நன்றி சொல்கிறான்.
வருத்தப்படும் பரணி: அப்போது, பரணி, சண்முகம் நான் தான் உன் குடும்பத்தை கெடுத்தேன் என்று என்ன வார்த்தை சொல்லிட்ட, உன் தங்கச்சி நல்லா இருக்க வேண்டும் என்று தான் அப்படி சொன்னேன். ஆனால் நீ கோவத்துல என்ன வேணாலும் பேசு.. ஆனால் எனக்கும் உன் தங்கச்சி மேலே அக்கறை இருக்கு. அதை புரிந்து கொள்ளாமல் இன்னொரு முறை ஏதாவது சொன்னா நான் உன் கண்ணு முன்னாடியே இருக்க மாட்டேன். உன் வாழ்க்கையை விட்டு கண் காணாத இடத்திற்கு போய்டுவேன் என்று கண் கலங்கி பேசுகிறாள்.
காலில் விழும் வெங்கடேஷ்: அதை தொடர்ந்து ரத்னாவுடன் வீட்டிற்கு கிளம்பும் போது வீட்டிற்கு போகுறதுக்கு முன்னாடி ஒரு இடத்திற்கு போக வேண்டி இருக்கு என்று ஸ்டேஷனுக்கு வண்டி விட சொல்கிறாள் சண்முகம். அங்கு ஜெயிலுக்குள் இருக்கும் வெங்கடேஷை பிடித்து அடி வெளுக்கின்றனர். பிறகு வெங்கடேஷ் திமிராக அதான் அவள் பிழைத்து விட்டாளே எங்களை வெளியே விடுங்க என்று சொல்ல போலீஸ் உன்னால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு எல்லாம் யார் பொறுப்பா? ஸ்கூலை வேற கட்டாயப்படுத்தி எழுதி வாங்கி இருக்க என்று வெளியே விட மறுக்கின்றனர்.
இதனால் வெங்கடேஷ் பம்பியபடி ரத்னாவிடம் பேச வேண்டும் என்று சொல்ல ஷண்முகம் கதவை திறந்து விட சொல்கிறான், வெளியே வந்த அவன் ரத்னா காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











