ரத்னா வீட்டுக்கு வரக்கூடாது.. கோவத்தில் கத்திய பரணி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: சண்முகம் சண்டை போட்டு அழைத்து வந்த ரத்னாவை பரணி வீட்டில் விடுகிறாள். ரத்னாவை பார்த்து கடுப்பான வெங்கடேஷனின் அம்மா, என்ன நினைச்சிட்டு இருக்கீங்க, நேத்து உன் புருஷன் வந்து என் மகனை மிரட்டிவிட்டு ரத்னாவை கூட்டிக்கிட்டு போறான். இன்னைக்கு நீ வந்து வீட்டுல விடுற என்று கேட்க, இது உங்களுக்கு தேவையில்லாத வேலை என்று உள்ளே சென்று வெங்டேஷனிடம், ரத்னா, ஏன் வேலைக்கு போகக்கூடாது, அவ வேலைக்கு போவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை. அவ வேலைக்கு போவா, இங்கே தான் இருப்பா, திரும்ப ஏதாவது சண்டை வந்துச்சுனா, சண்முகம் மாதிரி எல்லாம் அடிக்க மாட்டேன், வேறவிதமா செஞ்சிவிட்ருவேன் என்று மிரட்டுகிறாள்.
வீட்டிற்கு வரும் சண்முகம், ரத்னா வீட்டில் இல்லாததால், ரத்னா எங்கே என்று கேட்க, பரணி நான் தான் அவளை வெங்கடேஷ் வீட்டில் விட்டுவிட்டு வந்ததாக சொல்கிறாள். இந்த வீட்டில் பெரியவங்க நாங்க இருக்கும் போது நீ எப்படி, அவளை வீட்டில் விடுவ என்று இரண்டு பேருக்கு இடையே சண்டை நடக்கிறது. இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அண்ணா: இன்றைய எபிசோடில், ஏதோ ஒரு புருஷன் கூட சண்டை அதுக்காக அவளை கூட்டிக்கொண்டு இங்க வந்துவிட்டா என்ன அர்த்தம், ரத்னா நிம்மதியாக வாழ வேண்டமா என்று கேட்க வைகுண்டம் அதை புரிந்து கொள்கிறார். ஆனால் சண்முகம் பரணி எடுத்த முடிவில் உடன்பாடு இல்லாமல், நீ என்ன கொண்டு போய் விடுவது, நான் இப்போவே போய் என் தங்கச்சியை கூட்டிக்கிட்டு வருகிறேன் என்று சொல்கிறான். சண்முகத்தின் பேச்சால் கடுப்பான பரணி, ரத்னா இந்த வீட்டுக்கு வந்தால் நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் இதுதான் என் முடிவு என்று சொல்ல, சண்முகம் அதிர்ந்து போய் நிற்கிறான்.
துரத்திட்டானா: மறுபக்கம், பாண்டியம்மா மற்றும் சௌந்தரபாண்டி இருவரும் ரத்னா இப்போ தானே வாழவே போனா, அதற்குள்ள புருஷன் காரனுக்கு ரத்னா மேல எதாவது சந்தேகம் வந்து இருக்குமோ என்று இசக்கியை வம்பு இழுக்கிறாள். அதான் டா முத்துப்பாண்டி, ரத்னா மேல பித்துப்பிடிச்சி இருந்தானே அந்த விஷயம் வெங்கடேஷனுக்கு தெரிந்து வீட்டை விட்டு துரத்திட்டான் என்று பாண்டியம்மா வாய்க்கு வந்ததை பேச இசக்கி பாண்டியம்மாவிடம் சண்டைக்கு செல்கிறாள்.
கண்கலங்கும் இசக்கி: உடனே பாக்யம், வாய்க்கு வந்ததை பேசாதீங்க, காலையிலேயே பரணி, ரத்னாவை வெங்கடேஷ் வீட்டில் விட்டு விட்டாள் என்று சொல்லி அவர்கள் வாயை மூடுகிறாள். பிறகு பாண்டியம்மா பேசியது நினைத்து வருத்தப்பட பாக்கியம், இசக்கிக்கு ஆறுதல் சொல்கிறாள். அப்போது நானும் என் அண்ணனோட போயிடுறேன் என வருத்தப்பட்டு பேச, பாக்கியம் ஏற்கனவே சண்முகம் மனவருத்தத்தில் இருக்கான் நீயும் வீட்டுக்கு போய் நின்னா அவன் வருத்தப்படுவான் என்று சொல்லி மனதை மாற்றுகிறாள்.
இசக்கி ஒரு பக்கம் கஷ்டத்தில் இருக்க இன்னொரு பக்கம் ரத்னா கஷ்டத்தில் இருக்க இது சண்முகம் தங்கைகளின் வாழ்க்கையை நினைத்து கவலையில் இருக்கிறான். ரத்னாவுக்கு போன் போட்டு பேச ரத்னா கண்ணீரை மறைத்து நன்றாக இருப்பதாக பொய் சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











