வெங்கடேஷிடம் இருந்து விவாகரத்து கேட்ட ரத்னா.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், ரத்னா குணமடைந்துவிட டிஸ்சார்ஜ் ஆகி, மருத்துவமனையில் இருந்த ரத்னா வீட்டிற்கு கிளம்புகின்றனர். ரத்னாவுடன் வீட்டிற்கு கிளம்பும் போது வீட்டிற்கு போகுறதுக்கு முன்னாடி ஒரு இடத்திற்கு போக வேண்டி இருக்கு என்று ஸ்டேஷனுக்கு ரத்னாவை அழைத்து வருகிறான் சண்முகம். அங்கு, வெங்கடேஷ், அதான் அவள் பிழைத்து விட்டாளே எங்களை வெளியே விடுங்க என்று சொல்லி திமிராக பேசுகிறான்.
இதையடுத்து, போலீஸ் உன்னால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு எல்லாம் யார் பொறுப்பா? ஸ்கூலை வேற கட்டாயப்படுத்தி எழுதி வாங்கி இருக்க என்று வெளியே விட மறுக்கின்றனர். இதனால் வெங்கடேஷ் பம்மியபடி ரத்னாவிடம் பேச வேண்டும் என்று சொல்ல ஷண்முகம் கதவை திறந்து விட சொல்கிறான், வெளியே வந்த அவன் ரத்னா காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறான்.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், வெங்கடேஷ், ரத்னா காலில் விழுந்து மன்னிப்பு கேட்க, ரத்னா என்ன செய்வது என்று தெரியாமல் அழுதுக்கொண்டு இருக்கிறாள். இதைப்பார்த்த சண்முகம், ஏன் ரத்னா அழுற நீ அழுதது எல்லாம் போதும், உன் மனசுல என்ன தோணுதோ அதை செய், இந்த அண்ணன் உனக்கு துணையா எப்போதும் இருப்பேன் என்கிறான். இதையடுத்து, ரத்னா, இவன் செய்த தப்புக்கு தண்டனை அனுபவிக்கனும். இப்போ, இவனை நான் மன்னிச்சா, இவன் செய்த தப்புக்கு நான் துணை நிற்கிற மாதிரி ஆகிவிடும். எனக்கு இவன் கிட்ட இருந்து விவாகரத்து வாங்கி கொடுத்துடு அண்ணே என்று சொல்ல வெங்கடேஷ் அதிர்ச்சி அடைகிறான்.
கண் கலங்கும் சண்முகம்: இதனை தொடர்ந்து ரத்னாவுடன் வீட்டிற்கு வரும் ஷண்முகம் ரத்னாவை நிற்க வைத்து தனது கையால் ஆரத்தி எடுக்கிறான். இது உன்னுடைய வீடு நீ விருப்பப்பட்ட மாதிரியே இந்த வீட்டில் வாழலாம்.. உனக்கு இந்த அண்ணன் என்னைக்கும் துணையா இருப்பேன், மறுபடியும் இப்படி ஒரு முடிவை மட்டும் எடுத்துவிடாதே என்று கண் கலங்குகிறான்.
வர மறுக்கும் இசக்கி: அடுத்து மறுபக்கம் சௌந்தரபாண்டி வீட்டிற்கு வரும் ஏ.கே.எஸ் அண்ணாச்சி நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷனா.. ஊரெல்லாம் உன் பேரு நாறி போய் இருக்கு.. உன்கூட சம்மந்தமும் வேணாம் ஒன்னும் வேணாம் என்று அவமானப்படுத்தி விட்டு செல்கிறான். அதன் பிறகு பாக்கியம், சண்முகம் வீட்டிற்கு வந்து இசக்கியை தனது வீட்டிற்கு அழைத்து செல்வதாக சொல்ல அவன் இசக்கியோட முடிவை கேளுங்க என்று சொல்ல இசக்கி வர முடியாது என மறுத்து விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











