கல்யாண நாள கொண்டாடுறியா.. சௌந்தரபாண்டி போட்ட பிளான்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: பாண்டியம்மா மற்றும் சௌந்தரபாண்டி இருவரும் ரத்னா இப்போ தானே வாழவே போன, அதற்குள்ள வீட்டை விட்டு வந்துட்டாளே, புருஷன்காரனுக்கு ரத்னா மேல எதாவது சந்தேகம் வந்து இருக்குமோ என்று இசக்கியை வம்பு இழுக்கிறாள். பாண்டியம்மா வாய்க்கு வந்ததை பேச இசக்கி பாண்டியம்மாவிடம் சண்டைக்கு செல்கிறாள்.
உடனே பாக்யம், வாய்க்கு வந்ததை பேசாதீங்க, காலையிலேயே பரணி, ரத்னாவை வெங்கடேஷ் வீட்டில் விட்டு விட்டாள் என்று சொல்லி அவர்கள் வாயை மூடுகிறாள். இசக்கி ஒரு பக்கம் கஷ்டத்தில் இருக்க இன்னொரு பக்கம் ரத்னா கஷ்டத்தில் இருக்க, சண்முகம் தங்கைகளின் வாழ்க்கையை நினைத்து கவலையில் இருக்கிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கக்போகிறது என்று பார்க்கலாம்.

அண்ணா: இன்றைய சீரியலில், சண்முகம் காலையில், ரத்னாவை பார்த்துவிட்டு வருகிறேன் என்று கிளம்ப, பரணி அவனை தடுத்து நிறுத்தி, அவங்க உன் தங்கச்சி தான் அதுக்காக காலையிலேயே அவங்க வீட்டுக்கு போவியா? ரத்னாவிற்கு கல்யாணம் ஆகிவிட்டது. இனிமேல் அவங்க, அவங்க குடும்பத்தை அவங்க பார்த்துக்கொள்வார்கள், இனி ஒன்னும் அங்கு போக வேண்டாம் என்று சொல்ல, வைகுண்டமும் பரணி சொல்வது தான் சரி என்று சொல்ல, கடுப்பாகும் சண்முகம், இந்த வீட்டில் பரணி சொல்லுவதைத்தான் எல்லாரும் கேட்க வேண்டுமா என்று கோவப்படுகிறான்.

கல்யாண போட்டோ: இதையடுத்து, கனி, மேல இருக்கும் புத்தகத்தை எடுத்து கொடுக்க சொல்லி கேட்கிறாள். ஏற்கனவே படிச்சு முடிச்ச பழைய புக் எதுக்கு என்று, கனியை திட்டி விடுகிறான், பிறகு, கனி, பரணியை அழைத்து புத்தகத்தை எடுத்து கொடுப்பதாக சொல்லி எடுக்க அப்போது அவளது கல்யாண போட்டோவை பார்க்கிறாள். கல்யாண நாள் என்பது தெரியவருகிறது.
இதையடுத்து, பரணி சண்முகத்தை ஹாஸ்பிடலில் டிராப் செய்ய சொல்லி அழைக்க அவன், நான் வர மாட்டேன் நீயே போ என்கிறான். உடனே பரணி திட்டி அழைத்து செல்கிறாள். பிறகு சாயங்காலம் வரும் போது ஒரு புடவை வாங்கிட்டு வா என்று சொல்ல ஷண்முகம் சரி என்று சொல்கிறான். பரணி எதுக்கு புடவைனு கேட்க மாட்டியா? என்று கேள்வி கேட்க. ஷண்முகம் எதுக்கு கேட்க,புடவை எதுக்கு கேட்பாங்க கட்டிக்க தானே என்று கடுப்பாக பதில் சொல்லி அங்கிருந்து நகர்கிறான்.

சீர் கொடுக்கும் இசக்கி: இதை தொடர்ந்து பாக்கியம், இசக்கி ஆகியோர், திருமண நாள் சீர் கொடுக்க தடபுடலாக ரெடியாகி கொண்டிருக்கின்றனர். சௌந்தரபாண்டி என் நெஞ்சு மேலே ஏறி நின்னு கல்யாணம் பண்ணான். அவன் கல்யாண நாளை கொண்டாட என் சொத்தை அழிக்கறீங்களா என்று ஆவேசப்பட கேட்கிறான். உடனே இசக்கி உங்க சொத்தை அழிக்கல, என் மாமா முத்துப்பாண்டிதான் பணம் அனுப்பினார் என்று பதிலடி கொடுக்கிறாள்.
திருமண நாள்: இதையடுத்து, பாக்யா, வாங்க வீட்டுக்கு போய் பரணியையும், சண்முகத்தையும் வாழ்த்திட்டு வருவோம் என்று சொல்கிறாள். என்னது அந்த வெறும் பய வீட்டுக்கு நான் வந்து வாழ்த்தனுமா என்று சண்டை போட, பாக்யம், சௌந்தரபாண்டியை சமாதானப்படுத்தி சண்முகம் வீட்டிற்கு அழைத்து வருகிறாள். சீருடன் வீட்டிற்கு அனைவரும் வருவதை பார்த்த ஷண்முகத்திற்கு கல்யாண நாள் என்ற ஞாபகம் வருகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











