யாரைப்பார்த்து ஆம்பளையானு கேட்ட.. அடிக்க பாய்ந்த சண்முகம்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: சண்முகம், பரணி திருமண நாளில், சௌந்தரபாண்டி நீ ஆம்பளையானு கேட்டு அவமானப்படுத்துகிறான். இதைத்தொடர்ந்து,பரணி அப்பா கேட்டதில் என்ன தப்பு இருக்கு, நாம என்ன புருஷன் பொண்டாட்டி மாதிரியா இருக்கோம்? உனக்கு உன் தங்கச்சி இங்க தான் முக்கியம், நான் இந்த வீட்ல ஒரு ஆளா இருக்கறதுனால சாப்பிட்டானா இல்லையான்னு கவனிச்சிக்கிறேன் அவ்வளவுதான் என்று சொல்ல சண்முகம் பரணியின் ஃபீலிங்ஸை புரிந்து கொள்கிறான்.

இதைத்தொடர்ந்து, சண்முகம், பரணி இருவரும் கிளினிக் கிளம்ப வண்டியில் போகும்போது நெருக்கமாக ரொமான்ஸாக பேசியபடி செல்கின்றனர். பரணி பூக்கடையை பார்த்ததும் நிறுத்தி மல்லிகை பூ வாங்கி கொடுக்கிறான். இதைப்பார்த்த சௌந்தரபாண்டி டென்ஷன் ஆக, சண்முகம் இன்னும் ஒரு வருஷத்தில் உன்னை தாத்தாவாக ஆக்குகிறேன் என்று சவால் விடுகிறான். இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்.

zee tamil anna

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், பாக்யம், பரணி எல்லாரும் வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார்கள். இனிமேல் உன் வாழ்க்கையை பாரு டீ என்று சொல்லிக்கொண்டு இருக்க, அப்போது, சிவபாலன் வருகிறான். அப்போது பரணி என்னடா வெட்டிப்பயலே என்று சொல்ல, நான் ஒன்னும் வெட்டியா இல்ல, கவர்மென்ட் எக்சாமுக்கு படிச்சிட்டு இருக்கேன் என்று சொல்லிவிட்டு போகிறான். உடனே பரணி, வீராக்காக படிக்கிறியா என்று கேட்டு கிண்டல் அடிக்கிறான்.

தெரியவந்த உண்மை: அப்போது, ஷண்முகம் பரணியை சிக்க வைக்க ரத்னாவுக்கு வாங்கிய நகையில் பாண்டியம்மா திருட்டு நகைகளை கலந்து வைத்த விஷயம் சிசிடிவி காட்சிகள் மூலமாக தெரிய வருகிறது. இதை தொடர்ந்து கோவில் அதிகாரிகள் இந்த வீடியோ ஆதாரத்துடன் பரணியை சந்தித்து விஷயத்தை சொல்ல பரணி ஷாக் ஆகிறாள். இதையடுத்து, அந்த வீடியோவை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். நல்லவேளை அந்த முருகர் நம்மை காப்பாத்தினார் என்று அனைவரும் புலம்புகின்றனர்.

zee tamil anna

விளாசிய சண்முகம்: இதைத்தொடர்ந்து, பரணி போலீசுடன் சௌந்தரபாண்டி வீட்டிற்கு வந்து பாண்டியம்மாவை கைது செய்ய சொல்ல பாண்டியம்மா பரணி கழுத்தில் கத்தியை வைத்து என்னை கைது பண்ணா பரணியின் கழுத்தை அறுத்துருவேன் என்று எச்சரிக்கிறாள்.இதனால் எல்லாரும் பதற்றம் அடைய ஷண்முகம் அங்கு வந்து பாண்டியம்மா அதெல்லாம் பண்ண மாட்டா என்று சொல்கிறான், மேலும் எனக்கு ஒரு காபி வேண்டும் என்று சொல்லி பரணிக்கு கண்ணை காட்டி பாண்டியம்மா அசந்த நேரத்தில் அவளை பிடித்து ரூமுக்குள் அழைத்து செல்ல ஷண்முகம் அடி வெளுத்து எடுக்கிறான்.

zee tamil anna

ஒளிந்து கொண்ட சௌந்தரபாண்டி: அடுத்து சண்முகம் யாரைப்பார்த்து ஆம்பளையானு கேட்ட என்று சொல்லிக்கொண்டு சௌந்தரபாண்டியை அடிக்க வர அவர் ரூமுக்குள் சென்று ஓடி ஒளிந்து கொள்கிறார். பிறகு முருகனோட நகையை திருடியதுக்கு அவரே தண்டனை கொடுப்பார் என்று பாண்டியம்மாவை மன்னித்து விட்டு கிளம்பி செல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X