தீபாவளிக்கு வாங்கிய புடவை.. சண்முகம், பரணிக்கு செம ரொமான்ஸ்.. அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க!

சென்னை: கோவில் நகை மாற்றிவைத்தது பாண்டியம்மாதான் என தெரிந்ததும், பரணி போலீசுடன் சௌந்தரபாண்டி வீட்டிற்கு வந்து பாண்டியம்மாவை கைது செய்ய சொல்கிறாள். அப்போது பாண்டியம்மா, பரணி கழுத்தில் கத்தியை வைத்து என்னை கைது பண்ணா பரணியின் கழுத்தை அறுத்துருவேன் என்று எச்சரிக்கிறாள்.

இதனால் எல்லாரும் பதற்றம் அடைய ஷண்முகம் அங்கு வந்து பாண்டியம்மா அதெல்லாம் பண்ண மாட்டா என்று சொல்கிறான். பிறகு பரணிக்கு கண்ணை காட்டி பாண்டியம்மா அசந்த நேரத்தில் அவளை பிடித்து ரூமுக்குள் அழைத்து செல்ல ஷண்முகம் அடி வெளுத்து எடுக்கிறான். இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்.

zee tamil anna

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், ஷண்முகம் தலை தீபாவளியை கொண்டாடுவதற்காக தங்கைகள் எல்லாருக்கும் புடவை எடுத்து வந்து கொடுக்கிறான், பிறகு தனியாக சென்று பரணிக்கும் எடுத்து வந்த புடவையை கொடுக்கிறான். அந்த புடவை ரொம்பவே சிம்பிளாக இருக்க ஷண்முகம் இந்த புடவையை எப்படி எடுத்தேன் தெரியுமா? தங்கைகளுக்கு எல்லாம் திருச்செந்தூரில் புடவை எடுத்துட்டு உனக்கு மட்டும் திருநெல்வேலி போய் எடுத்திட்டு வந்தேன் என்று சொல்கிறான்.

தீபாவளி ரெடியாக குடும்பம்: பரணி புடவையை எப்படி தேர்ந்தெடுத்த என்று கேட்க ஷண்முகம் பொம்மைக்கு கட்டி வச்சி இருந்தாங்க.. அதை பார்த்து அதே புடவை தான் வேணும்னு சொல்லி வாங்கிட்டு வந்தேன். கடைக்காரன் வேற புடவை தரேன்னு சொன்னான், ஆனால் அந்த பொம்மைக்கு கட்டிய புடவை தான் வேணும்னு சொல்லி வாங்கிட்டு வந்தேன் என்று வெகுளியாக சொல்ல பரணி அந்த புடவையை கட்டி கொள்ள முடிவெடுக்கிறாள்.

என்னடா புடவை இது: இதையடுத்து பரணி அந்த புடவையை கட்டி கொண்டு வெளியே வர அதை பார்த்த தங்கைகள் என்ன அண்ணி இதை போய் கட்டிட்டு வந்து இருக்கீங்க, அண்ணன் எடுத்து கொடுத்ததை கட்டிட்டு வாங்க என்று சொல்ல பரணி இது தான் உங்க அண்ணன் எடுத்து கொடுத்தது என சொல்கிறாள். இதை கேட்டு தங்கைகள் எல்லாரும் உனக்கு ரொமான்ஸே வரல அண்ணே என்று கலாய்த்து விடுகின்றனர். இதையடுத்து வைகுண்டம், டேய் உனக்கு ஒரு புடவைகூட எடுக்க தெரியாதா என்னடா புடவை எடுத்து இருக்க என்று திட்டுகிறார்.

உயிரே போனாலும் தர மாட்டேன்: இதையடுத்து, சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு இருக்கும் சண்முகம், பரணியிடம் வந்து, வேறு புடவைய மாத்திக்கிட்டு இந்த புடவை கொடு, நான் போய் மாத்திக்கிட்டு வருகிறேன் என்று சொல்கிறான். உயிரே போனாலும் இந்த புடவையை நான் தரமாட்டேன், என் புருஷனே கடைக்கு போய், ஆசை ஆசையாக வாங்கிட்டு வந்து இருக்கான் நான் எப்படி தருவேன் இதெல்லாம் முடியாது என்று சொல்லுகிறாள்.

இல்ல பரணி, புடவை நல்லா இல்லனு தங்கச்சிங்க சொல்லுறாங்க கொடு, நான் கடைக்கு போய் மாத்திட்டு வருகிறேன் என்று சொல்ல, பரணி, சண்முகத்துக்கிட்ட போய், வேணும்னா நீயே கழட்டி எடுத்துக்கோ என்று ரொமான்சாக பேச, சண்முகம் அய்யோ யாராவது பார்த்துவிடப் போகிறார்கள் என்ற பயந்து ஓட, அவன் கையைபிடித்து ரொமான்சாக பேசுகிறாள் பரணி. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X