வேலைக்காரியான ரத்னா.. அவமானப்பட்ட வைகுண்டம்.. அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க!

சென்னை: ஷண்முகம் தலை தீபாவளியை கொண்டாடுவதற்காக தங்கைகள் எல்லாருக்கும் புடவை எடுத்து வந்து கொடுக்கிறான், பிறகு தனியாக சென்று பரணிக்கும் எடுத்து வந்த புடவையை கொடுக்கிறான். அந்த புடவை ரொம்பவே சிம்பிளாக இருக்கிறது. அந்த புடவையை பரணி கட்டிக்கொண்டு வந்து நிற்கிறாள்.

புடவையைப் பார்த்த தங்கைகள் எல்லாரும் உனக்கு ரொமான்ஸே வரல அண்ணே என்று கலாய்த்து விடுகின்றனர். இதையடுத்து வைகுண்டம், டேய் உனக்கு ஒரு புடவைகூட எடுக்க தெரியாதா என்னடா புடவை எடுத்து இருக்க என்று திட்டுகிறார். ஆனால் பரணி என் புருஷன் ஆசையா வாங்கி கொடுத்த புடவை இது, இந்த புடவை எனக்கு பிடித்து இருக்கு என்கிறாள் இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil anna

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், சூடாமணி இறந்து விட்டதால் தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியாது என்பதால், தங்கைகளுக்கு பலகாரம் செய்து கொடுக்கலாம் என்று முடிவெடுக்கின்றனர். இதையடுத்து, அனைத்து பலகாரத்தையும் ரெடி செய்து கொண்டு ஷண்முகம் மற்றும் பரணி இருவரும் ரத்னா வீட்டிற்கு கிளம்புகின்றனர். வைகுண்டம் மற்றும் கனி இருவரும் இசக்கிக்கு பலகாரம் எடுத்து கொண்டு சௌந்தரபாண்டி வீட்டிற்கு வருகின்றனர்.

வேலைக்காரியான ரத்னா: வெங்கடேஷ் வீட்டில் ரத்னா ஒரு வேலைக்காரி போல் வேத்து விறுவிறுத்து வேலை செய்து கொண்டிருக்க ஷண்முகம் பரணி வீட்டிற்கு வர வெங்கடேஷ் குடும்பத்தினர் ரத்னா லேட்டாக எழுந்ததாகவும் நைட்டியில் இருக்கா இப்போ மாத்திட்டு வருவா என்று சொல்லி சமாளிக்க ஷண்முகத்திற்கு சந்தேகம் வருகிறது. அடுத்து வெங்கடேஷ் ரத்னாவிடம் உன் அண்ணன் வந்து இருக்கான் என்று சொல்ல, ரத்னா ஆசையோடு பார்க்க வரும் போது, தடுத்து நிறுத்தி இந்த டிரஸோட வருவியா, போய் டீசெண்டாக ரெடியாகிட்டு வா என்று சொல்கிறான்.

கோபத்தில் சண்முகம்: பிறகு ரத்னா, அழகாக டிரஸ் மாற்றிக்கொண்டு வந்து அண்ணனைப் பார்த்து பேசுகிறாள். தங்கை ரத்னாவைப் பார்த்ததும் கண் கலங்கி பேசுகிறான். இது உனக்கு தல தீபாவளி, ஆனால், அம்மா இறந்துவிட்டதால் நமக்கு தீபாவளி இல்ல இருந்தாலும், அண்ணன் சீர் கொண்டு வந்து இருக்கேன் என்று சொல்லி சீரை கொடுக்கிறான். உடனே வெங்கடேஷ் குடும்பத்தினர் பணம் இல்லையா என்று கேட்க ஷண்முகம் கோபமாகிறான்.

அவமானப்பட்ட வைகுண்டம்: மறுபக்கம் வைகுண்டமும் கனியும் இசக்கிக்கு சீர் கொண்டு வருகின்றனர். அப்போது, வாசலில் சௌந்தரபாண்டி மற்றும் பாண்டியம்மா நின்று கொண்டு இந்த வெறும் பயலுக்கு என் வீட்டில் என்ன வேலை என்று கேட்க, வைகுண்டம், இது ஒன்னும் உன் வீடு இல்ல, என் தங்கச்சி வீடு, என் பொண்ணு வாழ்க்கைப்பட்ட வீடு, இந்த வீட்டுக்கு வர எனக்கு எல்லா உரிமையும் இருக்கு என்று சொல்ல இரண்டு பேருக்கும் இடையே சண்டை வருகிறது.

இப்போது, கனி குறுக்கிட்டு, மாமா நாங்க தீபாவளி சீர் கொண்டு வந்து இருக்கோம். அதை கொடுத்துவிட்டு நாங்க போய்டுவோம் என்று சொல்ல, ஏல வெறும் பயலே பொல்லாத சீர் கொண்டு வந்துட்டான் சீர் என்று பாத்திரத்தில் இருந்த பலகாரங்கள் அனைத்தையும் கீழே கொட்டி வைகுண்டத்தை அவமானப்படுத்துகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X