குடும்பத்தை கெடுக்க சௌந்தரபாண்டி போட்ட சதி.. நடக்க போவது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், பாண்டியம்மா நம்முடைய எதிரி அந்த ஷண்முகம் இல்ல.. அவனுக்கு சாவி கொடுத்து ஆட்டி வைக்கிற அந்த பரணி தான். முதல்ல பொண்டாட்டி, தங்கச்சினு ஒண்ணா இருக்கவங்களை பிரிக்கணும். தங்கச்சிகளா? பொண்டாட்டியா? யார் முக்கியம்னு முடிவெடுக்கிற நிலைமைக்கு அந்த சண்முகத்தை கொண்டு வரணும் என்று திட்டத்தை சொல்கிறாள்.
பின் வெங்கடேஷனின் பெற்றோர் வீட்டிற்கு வந்து, எங்களுக்கு மகனே இல்லை என்று புலம்பிய நிலையில், பரணி,ரத்னாவிடம் , அத்தை இறந்தது எல்லாருக்கும் வருத்தம் தான் அதற்காக இப்படியே அழுதுக்கொண்டு இருந்தால் என்ன செய்வது அடுத்த வேலையை பார்க்க வேண்டாமா என்று சொல்ல, சண்முகமும் ஆமாம், பரணி சொல்வது தான் சரி, காலையில் இருக்கும் நகையை போட்டு இவளை வீட்டுக்கு அனுப்பி வைக்கலாம் என்று சொல்கிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், ரத்னாவிற்காக மேலும் மேலும், கடன் வாங்க வேண்டாம், என் நகை இருக்கு என்று சொல்லி பரணி தன் நகை கொடுக்கிறாள். உடனே சண்முகம், எனக்கு என் தங்கச்சிக்கு எப்படி நகை போடனும் என்று தெரியும், இது உன் நகை இதை பெட்டியில் வைத்து பூட்டு என்று சொல்லிவிட்டு, கடையை அடமானம் வைத்து நகை வாங்கிக்கொண்டு, ஷண்முகம் நகையுடன் கோவிலுக்கு தான் வருகிறான். அதை தெரிந்து கொண்ட,சௌந்தரபாண்டி ஒரு பிளானைப் போட்டு, பாண்டியம்மாவிடம் போலி நகையை கொடுத்து கோவிலில் நகையுடன் கோவிலுக்கு வெளியே காத்துக் கொண்டிருக்கிறாள்.
சோதனைப்போடும் போலீஸ்: ஷண்முகம் கோவிலுக்கு வந்து நகைகளை வைத்து பூஜை செய்யும் நேரத்தில் இந்த திருட்டு நகைகளையும் சேர்த்து வைத்து விடுகின்றனர், ஷண்முகம் அதை கவனிக்காமல் நகைகளை வீட்டில் கொண்டு வந்து வைக்கிறான். அதோடு சௌந்தரபாண்டி இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு போன் செய்து தர்மகத்தா கோவில் நகைகளை திருடுறாங்கனு எனக்கு தகவல் வந்து இருக்கு, வீட்டில் போய் பாருங்க உண்மை தெரிந்து விடும் என்று சொல்ல போலீஸ் ஷண்முகம் வீட்டில் சோதனை போட முடிவு செய்கின்றனர்.
பரணிக்கும் ரத்னாவிற்கும் சண்டை: வீட்டில் பரணி இப்போ கடையை அடமானம் வைத்து நகை வாங்கணுமா என்று ஷண்முகத்திடம் கேட்க, அவன் என் தங்கச்சிக்காக நான் பண்ணுவேன், இதுல யாரும் தலையிட வேண்டாம் என்று பதிலடி கொடுக்கிறான். பரணி பேசுவதை அரைகுறையாக கேட்ட ரத்னா அண்ணன் தனக்கு நகை போடுவதில் பரணிக்கு விருப்பமில்லை என்று தவறாக புரிந்து கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











